இப்படிக்கூட இட்லி பொடி அரைக்கலாமா? வித்தியாசமான ஸ்டைலில், சூப்பரான இட்லி பொடி ரெசிபி உங்களுக்காக.

idli-podi4
- Advertisement -

இந்த இட்லி பொடியை அரைப்பதில் நிறைய விதங்கள் உண்டு. விதவிதமாக இட்லி பொடியை அரைத்து ருசி பார்க்கலாம். அதில் ஒரு சுலபமான முறையை தான் இன்னைக்கு நாம பார்க்கப் போறோம். வித்தியாசமா சில பொருட்களை இதில் சேர்த்து அரைக்க போகின்றோம். இதன் ருசி எப்போதும் சாப்பிடும் இட்லி போல இருக்காமல், கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். நேரத்தைக் கடத்தாமல் புதுவிதமான இட்லி பொடி எப்படி அரைப்பது. தெரிந்து கொள்வோமா.

idli-podi2

அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ளுங்கள். அதில் எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன் ஊற்றிக் கொள்ள வேண்டும். உளுத்தம்பருப்பு – 1/2 கப், கடலைப்பருப்பு – 1/2 கப், சேர்த்து முதலில் இந்த இரண்டு பருப்புகளையும் லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும். இந்த இரண்டு பருப்பு வகைகளும் பாதி வறுபட்ட பின்பு வெந்தயம் – 1/4 ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், வரமல்லி – 2 ஸ்பூன், சேர்த்து மீண்டும் ஒருமுறை வறுக்கவேண்டும். இப்போது உங்களுக்கு இதில் சேர்த்த எல்லா பொருட்களும் சரியான பக்குவத்தில் பொன்னிறமாக வறுபட்டு வரும்.

- Advertisement -

இறுதியாக பூண்டு – 10 பல், சிறிய நெல்லிக்காய் அளவு – புளி, இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து சூடு செய்து அடுப்பை அணைத்துவிட்டு, இந்த பொருட்களை ஒரு தட்டில் கொட்டி நன்றாக ஆற வைத்துக் கொள்ளுங்கள். பெரும்பாலும் இட்லி பொடியில் நிறைய பேர் புளி சேர்க்க மாட்டார்கள். ஆனால் புளி சேர்த்து அரைத்துப் பாருங்கள். இதன் சுவை கூடுதலாக கிடைக்கும்.

podi-idli2

அடுத்தபடியாக அதே கடையில் வரமிளகாய் 7 லிருந்து 10 உங்களுடைய காரத்திற்கு ஏற்ப, போட்டு வறுத்து அதையும் தட்டில் கொட்டி நன்றாக ஆற வைத்துவிடுங்கள். இப்போது எல்லா பொருட்களும் ஆறிய பின்பு இதை அப்படியே மிக்ஸி ஜாரில் போட்டு, தேவையான அளவு உப்பு போட்டு, கொரகொரப்பாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இந்த பொடி மிக்ஸி ஜாரில் அரைத்தவுடன் லேசாக சூடு இருக்கும். அந்த சூடு ஆறிய பின்பு ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு தண்ணீர் படாமல் மூடி வைத்துவிட்டால், ஒரு மாதம் வரை கெட்டுப் போகாது வெளியில் வைத்தாலும். ஒரு மாதம் நன்றாக இருக்கும். ஃப்ரிட்ஜில் வைத்தால் இரண்டிலிருந்து மூன்று மாதங்கள் இந்த பொடியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

idli-podi3

சூப்பரான இந்த இட்லி பொடிக்கு நல்லெண்ணெய் ஊற்றி கலந்து இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிட்டு பாருங்கள். சூப்பரா இருக்கும். மிஸ் பண்ணாதீங்க ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -