இறைவனை எப்போதும் நினைத்திருப்பது பக்தியா? எது உண்மையான பக்தி என்று தெரியுமா? இந்த கதையை கேட்டா இனிமே ஒரு நாளைக்கு ஒரு முறையாவது இந்த பெயரை சொல்லுவீங்க!

vishnu-vilakku
- Advertisement -

உண்மையான பக்தி எது? என்று பல சமயங்களில் பலருக்கும் கேள்வி எழுந்திருக்கும். எப்போதும் இறைவனுக்கு பூஜை செய்து கொண்டிருப்பவர்கள் மத்தியில் தான், இறைவனே இல்லை என்று கூறுபவர்களும் உண்டு. இறைவனுடைய பெயரை உச்சரித்துக் கொண்டே இருந்தால் தான் சிறந்த பக்தி என்று பலரும் சொல்லுவது நியாயமா? எது சிறந்த பக்தி? என்பதை நிரூபிக்கும் இந்த கதையை நீங்கள் ஒரு முறை படித்தால் இனி இந்த தவறை செய்ய மாட்டீர்கள்! வாருங்கள் இப்பதிவின் மூலம் அது என்னவென்று தெரிந்து கொள்வோம்.

ஸ்ரீ வைகுண்டத்தில் இருக்கும் நாராயணர் சிறந்த ஹரி பக்தராக புராணங்கள் மூலம் நாம் அறிந்திருப்போம். எப்பொழுதும் ‘நாராயண.. நாராயண..’ என்கிற பெயரை உச்சரித்துக் கொண்டே இருக்கும் இவரை விட சிறந்த பக்தன் ஈரேழு உலகிலும் இருந்து விட முடியுமா? என்றெல்லாம் நினைத்திருப்போம். ஆனால் இவருக்கு வந்த சோதனையை பார்ப்போம். ஒருமுறை ஸ்ரீவைகுண்டத்தில் மகாவிஷ்ணுவிடம் உரையாடிக் கொண்டிருந்த நாரதருக்கு தன்னை விட சிறந்த பக்தன் இல்லை என்கிற கர்வம் உண்டானது. ஒரு நாளைக்கு கோடி முறை உங்கள் பெயரை உச்சரிக்கும் நான் தானே உங்களுடைய சிறந்த பக்தன் என்று நாரதர் மகாவிஷ்ணுவிடம் கேட்டார். இதற்கு மகாவிஷ்ணு இல்லை உன்னை விட சிறந்த பக்தன் ஒருவன் இருக்கிறான் என்று கூறிவிட்டார்.

- Advertisement -

இதனால் அதிர்ச்சி அடைந்த நாரதர் அவர் யார்? அவரை நான் கண்டு தீர வேண்டும் என்று கோபம் கொண்டார். இதற்கு மகாவிஷ்ணு மிகவும் சாந்தமாக ஒரு ஊரின் பெயரை கூறி, ரங்கன் என்னும் அவன் தான் என்னுடைய சிறந்த பக்தனாக இருக்கிறான் என்று கூறினார். உடனே அவ்வூருக்கு புறப்பட தயாராகிவிட்டார் நாரதர். எப்படியாவது அந்த ஊரில் இருக்கும் ரங்கனை கண்டு விட வேண்டும், அவன் எந்த அளவிற்கு சிறந்த பக்தன்? என்பதை நானும் பார்த்து விடுகிறேன் என்று கூறி கிளம்பினார்.

அவரை அடைந்த நாரதர், ஒரு நாள் முழுவதும் ரங்கன் என்ன செய்து கொண்டிருக்கிறான்? எந்த அளவிற்கு பக்தியுடன் இருக்கிறான்? என்பதை கவனித்து வந்தார். ரங்கன் காலையில் எழுந்ததும் குளித்து முடித்து சுத்தமாகி எல்லா வேலையும் செய்துவிட்டு ஒருமுறை ‘ஹரி நாராயணா..’ என்று இறைவனின் நாமத்தை உச்சரித்து விட்டு கலப்பையை தூக்கி விவசாயம் செய்ய கிளம்பி விட்டான். வயலுக்கு சென்றதும் அங்குள்ள பணியாட்களை ஒவ்வொரு வேலைக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டு, தானும் பணியில் ஈடுபட துவங்கி விட்டான்.

- Advertisement -

நாள் முழுவதும் அயராத உழைப்பை கொடுத்து எல்லா வேலையையும் செய்து விட்டு களைப்புடன் வீட்டிற்கு வந்தான். கலப்பையை இறக்கிவிட்டு ‘ஹரி நாராயணா..’ என்று மறுபடியும் இறைவனுடைய நாமத்தை உச்சரித்து விட்டு மனைவி பரிமாறிய உணவை சாப்பிட்டுவிட்டு தூங்கிவிட்டான். இதை கண்டு கொண்டிருந்த நாரதருக்கு பெரும் கோபம் ஏற்பட்டது. உடனே மகாவிஷ்ணுவிடம் சென்று அவன் ஒரு நாளைக்கு இரண்டு முறை தான் உங்களுடைய நாமத்தை உச்சரித்தான். ஆனால் நான் ஒரு கோடி முறை உச்சரிக்கிறேன் அப்படி இருக்கும் பொழுது அவன் எப்படி உங்களுடைய சிறந்த பக்தன் ஆக முடியும்? என்று ஆவேசமாக கேட்டார்.

நாள் முழுவதும் அவன் பல வேலைகளை செய்து, களைப்பில் இருந்தாலும் இரண்டு முறை என்னுடைய பெயரை உச்சரித்தான். ஆனால் ஒரு வேலையும் செய்யாமல் இன்றைய நாள் முழுவதும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நீயோ, ஒருமுறை கூட என் பெயரை உச்சரிக்கவில்லை என்று கூறினார். இதைக்கேட்ட நாரதர் தன் கர்வம் கலைத்து சாந்தம் ஆகிவிட்டார். எனவே எவ்வளவு நேரம் இறைவனுடைய நாமத்தை உச்சரித்து இறைவனை நினைக்கிறோம் என்பது முக்கியமல்ல! எவ்வளவு வேலை இருந்தாலும், ஒரு நாளைக்கு ஒரு முறையாவது இறைவனை நினைத்தால் கண்டிப்பாக இறைவனுடைய பக்திக்கு நாம் தகுதியானவராக இருக்கின்றோம் என்பது தான் அர்த்தம்.

- Advertisement -