அதிர்ஷ்டம் தரும் தீபம்

sivan dheepam
- Advertisement -

நம் குடும்பம் நல்ல முறையில் நோய் நொடி இன்றி ஆரோக்கியத்துடனும் செல்வ செழிப்புடன் வாழவும் இறையருள் நிச்சயம் தேவை. என்ன தான் நாம் உழைத்து பாடுபட்டு பொருள் சேர்த்தாலும் கூட நிம்மதியையும் மன நிறைவையும் சந்தோஷத்தையும் அருளக் கூடிய சக்தி இறைவனிடத்திலே உள்ளது. இன்றளவும் பல குடும்பங்கள் எவ்வளவு சம்பாதித்தும் நிம்மதி இல்லாமல் துன்பப்படும் நிலையும் நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

இத்தகைய துன்பங்கள் நீங்கி இன்பமாகவும் நிம்மதியாகவும் செல்வ செழிப்புடனும் வாழ ஒரு சில குறிப்பிட்ட நேரத்தில் நாம் வழிபாடும் செய்யும் போது அது பல மடங்கு பலனைத் தரும். அந்த வகையில் 11.11.23 அன்று இரவு ஒரு தீபத்தை ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை எப்படி ஏற்ற வேண்டும். ஏன் ஏற்ற வேண்டும்? என்ற தகவலை ஆன்மீகம் குறித்து இந்த பதிவில் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

அதிர்ஷ்டத்தை தரும் தீபம்

தீபம் என்பது நம் வாழ்க்கையில் உள்ள இருளை நீக்கி ஒளியை தருவது தான். அந்த வகையில் இறைவனுக்கு ஏற்றப்படும் தீபமானது நம் மனதில் இருக்கும் இருள் என்னும் அழுக்கு நீங்கி வெளிச்சம் என்னும் உயர்நிலையை அடையவே. இந்த ஒரு தார்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு தான் அந்த காலம் முதல் நம்முடைய வழிபாட்டில் தீபம் ஏற்றுதல் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

தினம் தினம் வீட்டில் தீபம் ஏற்றுவது வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தையும் நல்ல நேர்மறை ஆற்றலையும் கொடுக்கும் இது பலருக்கும் தெரிந்ததே. அது போன்றதொரு தீப வழிபாட்டை தான் இப்பொழுதும் நாம் பார்க்க போகிறோம் இந்த தீபத்தை 11:23 அன்று இரவு 9.30 மணி முதல் 10.30 மணிக்குள்ளாக சிவபெருமானை நினைத்து ஏற்ற வேண்டும். ஏனெனில் அன்றைய நாள் சிவராத்திரி உள்ளது. இந்த தீபத்தை உங்கள் பூஜை அறையில் வைத்து ஏற்றலாம் அல்லது வரவேற்பு அறையிலும் ஏற்றலாம் அது உங்கள் விருப்பம்.

- Advertisement -

இதற்கு ஒரு அகலை எடுத்துக் கொள்ளுங்கள். பஞ்சு திரி போட்டு நல்லெண்ணெய் தீபம் தான் ஏற்ற வேண்டும். இந்த தீபம் ஏற்றக் கூடிய அகலை சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து இந்த அகலை ஒரு சிறிய தட்டி மேல் வைத்து அதில் சுற்றிலும் பூ வைத்து அலங்காரம் செய்து கொள்ளுங்கள். நெய்வேத்தியமாக ஒரு டம்ளரில் பால் வைத்து விடுங்கள். இந்த தீபமானது கிழக்கு நோக்கி எறிய வேண்டும். நீங்கள் வடக்கு நோக்கி அமர வேண்டும்.

இந்த தீபம் எரியும் வேளையில் சிவபுராணத்தை மனதார படிக்க வேண்டும் அல்லது கேட்க வேண்டும். சிவபுராணம் தெரியாது படிக்க முடியவில்லை என்பவர்கள் இந்த ஒரு மந்திரத்தை ஓம் சிவ சிவ சிவாய நம ஓம் என்ற இந்த மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். இந்த மந்திர வழிபாட்டை முடித்த பிறகு சுவாமிக்கு நெய்வேத்தியமாக படைத்திருக்கும் பாலை நீங்கள் உங்கள் குடும்பத்தார் அனைவரும் பகிர்ந்து அருந்துங்கள். அதன் பிறகு உறங்கச் சென்று விடலாம்.

இதையும் படிக்கலாமே: பணம் முடக்கத்தை நீக்கும் தீபம்.

ஒவ்வொரு நேரத்தில் ஏற்றப்படும் தீபத்திற்கும் ஒவ்வொரு சக்தி உண்டு. அந்த வகையில் இந்த நேரத்தில் ஏற்றப்படும். இந்த தீபம் உங்கள் குடும்பம் நிம்மதியாக வாழவும் பல அதிர்ஷ்ட வாய்ப்புகளை ஏற்படுத்தி, உங்கள் குடும்பம் செல்வ நிலையை எட்டவும் உதவி புரிதல் இந்த தீப வழிபாட்டில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து பல அடையாளம் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -