சிவன் கோவிலுக்கு இந்த ஒரு பொருளை தானமாக வாங்கி கொடுத்தால் போதும். சிவபெருமானின் பரிபூரண ஆசீர்வாதம் கிடைத்துவிடும்.

sivan-2
- Advertisement -

எல்லோருக்கும் அப்பன் அந்த சிவன். அவன் அருளை பெறுவதற்கு நாம் எந்த பொருளை தானம் கொடுக்க வேண்டும். எம்பெருமானுக்கே நாம் தானம் செய்வதா. என் அப்பனே! என் ஐயனே! என்று இரண்டு ஒரு வார்த்தைகளை சொல்லி பாசமாக பக்தியோடு அழைத்தாலே போதும். சிவபெருமானின் ஆசீர்வாதத்தை எளிமையாக பெற்றுவிடலாம். காரணம் சிவபெருமான் அத்தனை எளிமையானவர். யாராவது பாசமாக அழைத்தால் போதும் அவர்களுக்கு தேவையான வரங்களை வாரி வழங்கி விடுவார். சிவன் ஆலயங்களில் அமர்ந்து சிவனுக்கு பிடித்தமான இரண்டு பாடல்களை பாடி பாருங்கள். சிவபெருமான் நீங்கள் கேட்ட வரம், கேட்காத வரங்களை எல்லாம் வாரி கொடுத்து விடுவார்.

சிவன் ஆலயங்களுக்கு கொடுக்க வேண்டிய தானங்கள்:
இருந்தாலும் ஆலயங்களுக்கு இந்த பொருட்களை எல்லாம் தானமாக வழங்கினால் நல்லது என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள் அல்லவா. அந்த வரிசையில் சிவன் கோவிலுக்கு நாம் எந்தெந்த பொருட்களை தானமாக கொடுக்கலாம் என்பதை பற்றிய சில ஆன்மீகம் சார்ந்த குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

கோவிலுக்கு தேவையான உங்களால் முடிந்த எந்த பொருட்களையும் நீங்கள் தானமாக வழங்கலாம். அந்த பட்டியலில் விளக்கு கூட ஏற்ற முடியாத பழமையான சிவன் ஆலயங்கள் ஏதாவது இருந்தால், அந்த சிவன் கோவிலுக்கு விளக்கு ஏற்றுவதற்கு நீங்கள் விளக்கு ஏற்ற நல்லெண்ணெய், திரி, தீபம் இப்படிப்பட்ட பொருட்களை தானமாக வாங்கி கொடுக்கலாம். நல்லெண்ணெய் வாங்கி கொடுப்பது சிறப்பு.

இருப்பினும் சிவன் கோவிலுக்கு இலுப்ப எண்ணெயை வாங்கி தானமாக கொடுப்பது என்பது ரொம்ப ரொம்ப சிறப்பு. ஒரு கோவிலுக்கு விளக்கு ஏற்றுவதற்கு எண்ணெய் இல்லை என்ற வார்த்தை வரவே கூடாது. அப்படி வந்தால் அந்த ஊரில் வாழக்கூடிய மக்களுக்கு சிவபெருமானின் ஆசிர்வாதம் கிடைக்கவில்லை என்று தான் அர்த்தம். அது மிகப்பெரிய தவறு.

- Advertisement -

ஒரு ஊரில் கோவில் இருக்கிறது, அந்த கோவிலில் தினமும் கடவுளுக்கு விளக்கு ஏற்றுவதற்கு பஞ்சம் இல்லாமல் எண்ணெய் இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த ஊர் செழிப்பாக இருக்கும். ஊர் கோவிலில் விளக்கு ஏற்ற எண்ணெய் இல்லை என்றால், வீட்டில் எப்படி அடுப்பு எரியும். ஆகவே உங்க ஊர் கோவிலில் இப்படி ஒரு சூழ்நிலை வராமல் பார்த்துக் கொள்வது உங்கள் கையில் தான் உள்ளது.

உங்களால் முடிந்த எண்ணெயை சிவ ஆலயங்களுக்கு வாங்கி கொடுங்கள். சிவ ஆலயங்கள் இல்லாமல் மற்ற கோவில்கள் இருந்தாலும் சரி, அந்த கோவிலில் விளக்கு ஏற்றுவதற்கு எண்ணெய் இல்லை என்ற ஒரு சூழ்நிலை வரவே கூடாது. அடுத்தபடியாக அந்தக் கோவிலில் பிரசாதம் செய்வதற்கு தினம்தோறும் இறைவனுக்கு நெய்வேத்தியம் வைப்பதற்கு தேவையான அரிசி பருப்பு நெய் என்று உங்களால் முடிந்த பொருட்களை வாங்கி தானம் கொடுக்கலாம்.

- Advertisement -

நான் பரம ஏழை என்னால் தானமாக எதையுமே கொடுக்க முடியாது‌. ஒரு கற்பூரம் கூட என்னால் வாங்கி ஏற்ற முடியாது. ஆனாலும் எனக்கு சிவன் அருள் கிடைக்க வேண்டும் என்றால் கோவிலுக்கு சென்று உங்களால் முடிந்த உழவாரப் பணியை செய்யுங்கள். கோவிலை சுத்தம் செய்வது. துடைப்பத்தை எடுத்து கோவிலை சுற்றி இருக்கும் குப்பைகளை ஒதுக்கி வாரி வெளியே கொண்டு போய் கொட்டினாலே உங்களுக்கு சிவன் அருள் கிடைத்து விட்டதாகத்தான் அர்த்தம்.

கோவிலை கூட்டி சுத்தம் செய்யக்கூடிய பாக்கியம் அவ்வளவு எளிதில் யாருக்கும் கிடைக்காது. சிவனின் ஆசீர்வாதம் இருந்தால் தான் அந்த வேலையை சிவன் கோவிலுக்கு உங்களால் செய்ய முடியும். முடியும் என்றால் பத்து ரூபாய்க்கு விபூதியை வாங்கி சிவன் ஆலயங்களுக்கு தானமாக கொடுங்கள்.

இதையும் படிக்கலாமே: பசு மாட்டிற்கு உங்கள் கையால் இந்த 1 பொருளை சாப்பிட வையுங்கள். கோடிக்கணக்கில் இருக்கும் கடனை கூட, கொஞ்ச நாளில் அடைத்து விடலாம்.

நீங்கள் கொடுக்கும் விபூதியை கோவிலுக்கு வருபவர்கள் நெற்றியில் திருநீறு எடுத்துப் பூசிக் கொண்டால் போதும் உங்களுடைய ஜென்மம் ஈடு ஏறிவிடும். சிவனை அடைவது என்பது அவ்வளவு பெரிய கஷ்டமான காரியம் அல்ல. உண்மையான பக்தி உங்கள் இடத்தில் இருந்தால் நீங்கள் சிவபெருமானை இந்த நொடி கூட அடையலாம். சிவபெருமான் உங்களை பரிபூரணமாக ஏற்றுக்கொள்வார். அதற்கு நீங்கள் சுவாமியை கும்பிடக் கூடாது. உணர வேண்டும். அந்த உணர்வு ஒரு நாளில் வருவது இல்லை. சிவ தரிசனம் செய்து, சிவபெருமானை வழிபாடு செய்ய செய்ய தான் வரும். சிவபெருமானை வழிபாடு செய்து கொண்டு வாருங்கள். நீங்களே ஒருநாள் இல்லை என்றால் ஒரு நாள் சிவபெருமானை உணர்வீர்கள் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -