Astrology : ஜோதிடப்படி யாருக்கெல்லாம் ராஜயோகம் அமையும் தெரியுமா?

jothidam
- Advertisement -

யோகம் என்கிற சமஸ்கிருத சொல்லுக்கு சேர்க்கை என்பது பொருளாகும். அதாவது பொன், பொருள் மற்றும் சுகங்களின் சேர்க்கையே ஜோதிட சாஸ்திரத்தில் யோகம் என அழைக்கப்படுகிறது. யோகங்களில் மிக சிறப்பான யோகம் ராஜ யோகம் ஆகும். ராஜ என்பது அரசனைக் குறிக்கும் சொல்லாகும். எனவே அரசனை போன்ற வாழ்க்கையும் அதிகாரமிக்க பதவிகள் தரும் ராஜயோகம் ஒருவருக்கு எப்படி ஏற்படும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

astro wheel 1

பூமியில் அனைத்துமே நவ கிரகங்களின் ஆளுகைக்கு உட்பட்டு தான் இருக்கிறது என்பது ஜோதிட சாஸ்திரத்தின் கணிப்பாகும். இந்த நவகிரகங்களில் ஏற்படும் மாறுதல்கள் உலகில் வாழும் மனிதர்களிடமும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. ஜோதிட ரீதியாக பார்க்கும்போது குரு பகவான் கடக ராசியில் இருக்கும் காலத்தில், குருவின் ஒளிக்கிரணங்கள் பூமிக்கு மிகவும் அதிகமாக பாய்கின்றன. அதே நேரம் மகர ராசியில் குரு இருக்கும் காலத்தில் பூமியில் குருவின் ஒளி ஆற்றல் மிகக் குறைவான அளவிலேயே விழுகிறது. இந்த கிரகங்களின் ஒளிகிரணங்களில் ஏற்படும் மாற்றங்கள் மனித வாழ்வில் பல மாறுதல்களை ஏற்படுத்துகின்றன.

- Advertisement -

பொதுவாக ஜாதகத்தில் கிரகங்களின் ஆட்சி, உச்சம், சமம், பகை போன்ற தன்மைகளை வைத்தே ஜாதக பலன்கள் கணிக்கப்படுகின்றன. இதில் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமான சூரியன் இருக்கிறது. காரணம் சூரியனை அடிப்படையாக வைத்தே 12 மாதங்கள் காலம் ஜாதக கட்டத்தில் 12 ராசிகளாக அமைக்கப்பட்டன, இதில் சூரியன் சித்திரை மாதத்தில் மேஷ ராசியில் உச்சம் பெற்று பிரவேசிக்கும் காலத்தில் சூரியனின் ஒளிக்கதிர்கள் பூமிக்கு நெருக்கமாக அதிகரித்து கோடை வெப்பம் நம்மை சுட்டெரிக்கிறது. அதே போன்று ஐப்பசி மாதத்தில் துலாம் ராசியில் சூரியன் நீச்சம் அடையும் காலத்தில் சூரியனின் ஒளி பூமிக்கு மிக குறைவாகவே கிடைக்கிறது. எனவே தான் இந்த ஐப்பசி மாத காலத்தில் அதிகம் மேகமூட்டமான நிலை காணப்படுகிறது.

Suryan God

அனுபவம் பெற்ற ஜோதிடர்கள் தங்களிடம் பலன் கேட்கப்படும் ஜாதகங்களில் ஏதாவது ஒரு வகையான யோகம் இருப்பதை கணக்கிட்டு கூற முடியும். ஆனால் ஜெகத்தை ஆளுகின்ற ராஜயோகம் பெற்ற ஜாதக அமைப்பு லட்சத்தில், கோடியில் ஒருவருக்கே இருக்கும். இப்படியான ராஜயோகத்தில் அதிகாரத்தை செலுத்துகின்ற பலத்தை தருபவராக சூரியனும், அதற்கு உதவிகரமாக சந்திரனும் இருக்கின்றனர்.

- Advertisement -

ஒருவர் சகலத்தையும் கட்டி ஆளுமை செலுத்து அதிகம் கொண்ட ராஜயோகத்தை பெறுவதற்கு, அவரின் ஜாதகத்தில் ராஜயோகமான சூரியன் பலமாக இருக்க வேண்டும். இத்தகைய ராஜயோகம் ஒருவருக்கு அவரின் பூர்வஜென்ம கர்மபலன் பொறுத்தே அமைகிறது. தற்காலத்தில் மிக உயர்ந்த அரசியல் பதவிகளான பிரதமர், முதல்வர், அதிகாரமிக்க அரசு அதிகாரிகள் போன்றோரின் ஜாதகத்தை ஆராய்ந்தோமானால், அவர்களுக்கு ஜாதகத்தில் சூரியன் பலம் பெற்ற நிலையில் இருப்பதை காண முடியும்.

Lord-Chandra

சூரிய கிரகத்திடமிருந்து ஒளி பெற்று சந்திர கிரகம் பிரதிபலிப்பதால் சிறந்த ராஜயோகம் கொண்ட ஜாதகத்தில் சூரிய கிரகத்திற்கு கேந்திர ஸ்தானத்தில் சந்திரன் கிரகம் இருக்கும். மேலும் சூரியன், சந்திரன் ஜாதகத்தில் கேந்திர ஸ்தானங்கள் ஆன 1, 4, 7, 10-ஆம் இடங்களில் இருந்தாலும், இந்த சூரியன் சந்திரன் இருக்கின்ற வீடுகள் ஜென்ம ராசிஅல்லது லக்னத்திற்கு கேந்திர ஸ்தானங்களான 1, 4, 7, 10 ஆம் இடங்களில் இருந்தாலும் அது முதல் தரமான ராஜயோகம் என ஜோதிடர்கள் கூறுகிறார்கள்.

- Advertisement -

ஜாதகத்தில் இருக்கும் 12 வீடுகளில் தொழில் ஸ்தானமான 10 ஆம் இடத்தில் சூரியன் திக்பலத்தோடு இருக்கும் பட்சத்தில், அந்த ஜாதகர் அதிக காலம் அரசாட்சி புரியும் ராஜயோகம் கொண்டவராக இருப்பார். ஜாதகத்தில் சூரியன் வலுவாக இருப்பதை போலவே, அந்த சூரியனின் சொந்த வீடான சிம்ம ராசியும் வலிமையாக இருக்க வேண்டியது அவசியம். ஜோதிடத்தில் ஒரு பாவம் அதற்கான சொந்த அதிபதியால் பார்க்கப்படுகின்ற விதிப்படி ஜாதகத்தில் கும்ப ராசியில் சூரியன் இருக்கும் பட்சத்தில், அந்த சூரியனின் பார்வை சூரியனின் சொந்த வீடான சிம்ம ராசி மீது பட்டு சிம்ம ராசி வலிமை பெறுகிறது.

guru bagwan

பொதுவாக கும்ப ராசியில் சூரியன் இருக்கும் மாதமான மாசி மாதத்தில் பிறந்த ஜாதகர்கள் அரசியல் மற்றும் அரசாங்க துறைகளில் அதிகாரமிக்க பணிகளில் இருப்பதை அதிகம் காண முடியும். ஒருவனின் ஜாதகத்தில் முழு சுப கிரகமான குரு மேஷம் அல்லது தனுசு ராசியில் இருந்து வலிமை பெற்று, அந்த குருவின் திரிகோண பார்வை சிம்ம ராசியின் மீது படுவதால் அரசாங்க ரீதியிலான பல யோகங்கள், அனுகூலங்கள் ஜாதகருக்கு உண்டாகும்.

ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் மற்றும் குரு கிரகம் வலிமையாக இருக்கும் பட்சத்தில் அந்த ஜாதகர் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைக்க, முதல்வர், பிரதமர் போன்ற அரசியல் பதவிகளை பெறும் யோகம் அதிகம் உண்டு. எந்த ஊரு அரசியல் பதவியும் ஐந்தாண்டு காலம் என்பது விதி. ஜாதகத்தில் ஜாதக தசா புத்திகளில் ஏற்படும் கிரகங்களின் மாறுபட்ட தன்மை காரணமாக பெரும்பாலும் ஒருவர் ஐந்து அல்லது பத்து ஆண்டுகள் காலம் மட்டுமே அரசியலில் உயர்ந்த பதவிகளை வகிக்கும் சூழல் ஏற்படுகிறது.

politics

ராஜயோகங்களில் சிவராஜ யோகம் என்கின்ற ஒரு சிறப்பான யோகம் ஜோதிடர்களால் குறிப்பிடப்படுகிறது. அது ஜாதகத்தில் குரு சூரியன் ஆகிய இரு கிரகங்களும் நேருக்கு நேராக பார்த்துக் கொள்ளும் அமைப்பு மேற்கூறிய சிவராஜ யோகத்தை ஏற்படுத்துகிறது. குரு பகவான் சூரியனில் இருந்து பெறப்படும் ஒலியை பிரதிபலித்து, அந்த ஒளியை மீண்டும் சூரியனுக்கே அளித்து, அவரை புனிதப்படுத்தும் ஜோதிட யோகமே சிவராஜ யோகம் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். இத்தகைய ஜாதக அமைப்பில் சூரியனும் குருவும் பலம் பெற்றவர்களாக இருக்கின்றனர். இப்படி சிவராஜயோகம் இருக்கும் ஜாதகத்தில் சூரியனும், குருவும் பலவீனம் அடையாமல் இருப்பது அவசியம். மேலும் இந்த இரு கிரகங்களும் பகை, நீசம் பெறாமல் இருப்பதும், பாபக் கிரகங்களின் சேர்க்கை மற்றும் பார்வை போன்றவற்றையும் பெறாமல் இருக்க வேண்டும்.

இந்த சிவ ராஜயோகம் பெற்ற நபர்கள் பிறர் மீது அதிகாரம் செலுத்தும் பதவிகளை எளிதாக அடைகின்றனர். இவர்கள் பேசும் வார்த்தைகள் அனைத்தும் ஆணைகள், கட்டளைகள் பிறப்பித்தல் தொனியிலேயே இருக்கும். இவர்களின் உத்தரவுகளை ஏற்று செயல்படுவதற்கு பலர் காத்து கிடப்பார்கள். பொதுவாக இத்தகைய ஜாதகத்தில் சூரியன் வலிமை பெற்று ஆட்சி, உச்சம் பெற்றால், அந்த நபர் அரசியல் அரசாங்கத் துறைகளில் அதிகாரி, முதல்வர், பிரதமர் போன்ற பதவிகளை பெறுவதில் சிக்கல்கள் இருக்காது.

இதையும் படிக்கலாமே:
மேஷ லக்னத்தார்கள் அதிர்ஷ்டம் பெற செய்ய வேண்டிய பரிகாரங்கள்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Sivarajayogam in Tamil. It is also called as Surya chandra graha palangal in Tamil or Rajayogam in Tamil or Jothidam yogam in Tamil or Jathaga yogangal in Tamil.

- Advertisement -