பொசு பொசுவென்று பஞ்சு போல ஆப்பம் மிருதுவாக வருவதற்கு எப்படி அரைக்கணும் தெரியுமா? இப்படி அரைச்சு ஆப்பம் சாப்பிட்டா எவ்ளோ சாப்பிட்டாலும் போதாதே!

appam-maavu_tamil
- Advertisement -

ஆப்பம் என்றாலே எல்லோருக்கும் ஒரு பிரியம் உண்டு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடக்கூடிய இந்த ஆப்பம் ரெசிபி செய்வதற்கு மாவு சரியான ரேஷியோவில் அரைக்க வேண்டும். கீழே கொடுக்கப்பட்டுள்ள அளவின் படி நீங்கள் மாவை அரைத்து இதே போல ஆப்பம் செய்து பாருங்கள். பொசு பொசுவென்று பஞ்சு போல ஆப்பம் மிருதுவாக வரும். வாங்க அதை எப்படி செய்யலாம்? என்று தொடர்ந்து இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்

இட்லி அரிசி – ஒரு கப், பச்சரிசி – அரை கப், வெள்ளை அவல் – அரை கப், வெள்ளை உளுந்து – ஒரு கைப்பிடி, வெந்தயம் – ஒரு டீஸ்பூன், துருவிய தேங்காய் – அரை மூடி, சர்க்கரை – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

செய்முறை

பொசு பொசு என்று பஞ்சு மாதிரி ஆப்பம் சுட்டு எடுக்க இதே ரேஷியோக்களில் நீங்கள் மாவு அரைத்து பாருங்கள். முதலில் ஒரு கப் அளவிற்கு இட்லி அரிசியுடன், அரை கப் அளவிற்கு பச்சரிசி, அரை கப் அளவிற்கு வெள்ளை அவல் சேர்த்துக் கொள்ளுங்கள்.

வெள்ளை அவல் இல்லை என்றால் நீங்கள் மாவு அரைக்கும் பொழுது ஒரு கப் அளவிற்கு வடித்த சாதத்தை சேர்க்கலாம். பின் வெந்தயம் ஒரு டீஸ்பூன், உளுந்து ஒரு கைப்பிடி அளவிற்கு சேர்த்து நன்கு அலசி சுத்தம் செய்து கொள்ளுங்கள். ஆப்பம் தயாரிக்கும் பொழுது உளுந்து அதிகம் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.

- Advertisement -

நன்கு தண்ணீரில் அலசிய பின்பு நல்ல தண்ணீர் நிரம்ப ஊற்றி 5 மணி நேரம் குறையாமல் ஊற வைத்துக் கொள்ளுங்கள். ஆப்பத்திற்கு மாவு மிருதுவாக வருவதற்கு 5 மணி நேரம் கண்டிப்பாக ஊற வைத்து இருக்க வேண்டும். பிறகு கிரைண்டரில் முதலில் துருவிய தேங்காய் அரை மூடி அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள்.

தேங்காயில் இருக்கும் தோல் பகுதியை சேர்க்கக்கூடாது. தேங்காய் சேர்த்து இரண்டு சுற்று சுற்றிய பின்பு நீங்கள் ஊற வைத்துள்ள அரிசியை தண்ணீர் எதுவும் சேர்க்காமல் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு அரைய விடுங்கள். ஊற வைக்கும் பொழுது அவல் சேர்க்கவில்லை என்றால், இந்த சமயத்தில் நீங்கள் சாதத்தை சேர்க்க வேண்டும்.

- Advertisement -

மாவு மைய நைசாக அரைத்து எடுக்க கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேருங்கள். ஒரேடியாக தண்ணீர் ஊற்றாதீர்கள். 25 நிமிடங்களில் இருந்து 30 நிமிடம் வரை இதற்கு நேரம் எடுக்கும். நன்கு கிரைண்டரில் மாவு அரைபட்டதும் மாவை ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்பொழுது தேவையான அளவிற்கு உப்பு மற்றும் ஒரு டீஸ்பூன் அளவிற்கு சர்க்கரை சேர்த்து நன்கு கரையுங்கள். தண்ணீர் எதுவும் சேர்க்காதீர்கள். மாவை நன்கு கரைத்த பின்பு மூடி போட்டு மூடி வைத்து விடுங்கள். குறைந்தது 8 மணி நேரமாவது ஊறி இருக்க வேண்டும். இரவு முழுவதும் நீங்கள் தயார் செய்து ஊற விட்டு விட்டால் மறுநாள் காலையில் செய்வதற்கு சரியாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே:
மருத்துவ குணம் நிறைந்த மணத்தக்காளி கீரையை இப்படி ஒரு முறை கடையல் செய்து சாப்பிட்டு பாருங்க. கீரையே வேண்டாம் என்பவர்கள் கூட இன்னும் கொஞ்சம் கிடைக்குமா என்று கேட்பார்கள். இதை சாப்பிட்டால் வயிற்றுப் புண் வாய் புண் இவையெல்லாம் வராவே வராது.

மாவு நன்கு புளித்து பொங்கி வந்திருக்கும் இந்த சமயத்தில், நீங்கள் மாவை நன்கு கலந்து தேவையான அளவிற்கு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளலாம். பின்னர் ஆப்ப கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி துடைத்து எடுத்து பின்னர் மாவை ஊற்றி, சுற்றிலும் ஒரு சுற்று சுற்றி மூடி வைத்து அவிய விட்டால் சூப்பரான பஞ்சு போன்ற ஆப்பம் ரெண்டு நிமிடத்தில் தயார்!

- Advertisement -