அட இப்படி கூட கருவேப்பிலை பொடி அரைத்து சாதம் செய்யலாமா. லஞ்ச் பாக்ஸுக்கு கட்டிக் கொடுக்க ஆரோக்கியமான ரெசிபிகளில் இதுவும் ஒன்று.

karuvepilai-podi
- Advertisement -

கருவேப்பிலை நம் உடல் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நல்லது என்று நாம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் யாருமே அதை உணவோடு சேர்த்து சாப்பிடுவது கிடையாது. சமையலில் சேர்ப்போம். ஆனால் அதை எடுத்து தூர வைத்து விட்டு தான் சாப்பிடுவோம். இப்படி பொடியாக அரைத்து, சாதம் கலந்து கொடுத்தால் போதும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கட்டாயம் இந்த கருவேப்பிலை சாதத்தை விருப்பமாக சாப்பிட்டு விடுவார்கள். உடலுக்கு இரும்பு சத்து கிடைத்தது போலவும் இருக்கும் அல்லவா. வாங்க சுவையான அந்த கருவேப்பிலை சாதத்தை எப்படி செய்வது என்று நாமும் தெரிந்து கொள்வோம்.

அரைக்கும் முறை

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து, அது நன்றாக சூடானதும் உளுந்து 2 டேபிள் ஸ்பூன், கடலைப்பருப்பு 2 டேபிள் ஸ்பூன், வேர்கடலை 2 டேபிள் ஸ்பூன், போட்டு பாதி அளவு வறுக்க வேண்டும். இந்த மூன்று பொருட்களும் வறுபட்ட பின்பு எள்ளு 2 டேபிள் ஸ்பூன், வர மிளகாய் 6 லிருந்து 7, மிளகு 1 ஸ்பூன், போட்டு மீண்டும் வறுக்கவும்.

- Advertisement -

இப்போது எல்லா பொருட்களும் பொன்னிறமாக வறுபட்டு வந்தவுடன் ஒரு தட்டில் கொட்டிக் கொள்ளவும். எந்த பொருளும் கருகக் கூடாது. அடுத்து அதே கடாயில் 3 கைப்பிடி கருவாப்பிலைகளை போட்டு, மிதமான தீயில் மொறு மொறுப்பாக வறுத்து ஆரவைத்துக் கொள்ளுங்கள். இப்போது இந்த எல்லா பொருட்களையும் மிக்ஸி ஜாருக்கு மாற்றி பெருங்காயம் 1/4 ஸ்பூன், மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன், சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். நமக்கு தேவையான பொடி தயாராகி விட்டது அல்லவா. இது அப்படியே இருக்கட்டும்.

பிறகு உதிரி உதிரியான வெள்ளை சாதத்தை வடித்து ஆற வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து இப்போது சாதத்தை தாளிக்க போகின்றோம். அகலமான கடாயில் 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, முந்திரி பருப்பு, வர மிளகாய், கருவேப்பிலை, தாளித்து வடித்து வைத்திருக்கும் சாதத்தை போட்டு இதில் நாம் அரைத்து வைத்திருக்கும் பொடியையும் தேவையான அளவு போட்டு கலந்தால் சூப்பரான கருவேப்பிலை சாதம் தயார்.

- Advertisement -

இதற்கு தொட்டுக் கொள்ள முட்டை வறுவல், காலிபிளவர் சில்லி, மஸ்ரூம் சில்லி, இப்படி ஏதாவது ஒரு வறுவலை டப்பாவில் போட்டு கட்டிக் கொடுத்து விடுங்கள் அவ்வளவுதான். மதியம் நிறைவான சாப்பாடு வீட்டில் இருப்பவர்களுக்கு ஆரோக்கியத்தோடு கிடைக்கும். ரெசிபி பிடிச்சவங்க மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

இதையும் படிக்கலாமே: இட்லி மாவு போண்டா உள்ளே சாப்டாவும் மேல நல்லா மொறு மொறுன்னு கிறிஸ்ப்பியாவும் வர இந்த பொருளை சேர்த்து தான் செய்யணும். இந்த டிப்ஸ் பாலோ பண்ணி போண்டா சுட்டு பாருங்க சூப்பரா இருக்கும்

இதைவிட ருசியாக ஆரோக்கியமாக நிச்சயமாக ஒரு லன்ச் பாக்ஸ் தயார் செய்ய முடியாது. அலுவலகம் செல்லும் கணவர், பள்ளிக்கூடம் கல்லூரிக்கு செல்லும் பிள்ளைகளுக்கு விதவிதமாக சமைத்துக் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள் இந்த ரெசிபியையும் கூட சேர்த்துக்கோங்க.

- Advertisement -