இதுவரைக்கும் யாருமே இப்படி ஒரு முருங்கை கீரை பொரியலை செஞ்சிருக்கவே மாட்டீங்க. மணக்க மணக்க எல்லோரும் விரும்பி சாப்பிடும் படி முருங்கைக்கீரை பொரியல் செய்வது எப்படி?

murungai-keerai
- Advertisement -

எல்லோர் வீட்டிலும் முருங்கைக்கீரை பொரியல் செய்வோம். ஆனால் இப்படி ஒரு முருங்கைக்கீரை பொரியலை இதுவரைக்கும் யாருமே சுவைத்து இருக்க மாட்டீங்க. முருங்கைக்கீரையை இப்படி கூட செய்யலாமா என்று சொல்லும் அளவிற்கு வித்தியாசமான ஒரு ரெசிபி தான் இன்று நாம் தெரிந்துகொள்ளப் போகிறோம். இந்த ஸ்பெஷல் முருங்கைக்கீரை பொரியல் ரெசிபியை இப்பவே தெரிஞ்சுக்கலாம் வாங்க.

முதலில் ஒரு பெரிய கட்டு முருங்கைக் கீரையை உருவி சுத்தம் செய்து இரண்டு முறை தண்ணீரில் அலசி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக தேங்காய் பத்தை – 4 துண்டுகளை எடுத்து பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். பச்சை மிளகாய் – 2, சீரகம் – 1/2 ஸ்பூன், மல்லித் தழை – 2 இணுக்கு, கறிவேப்பிலை – 1 கொத்து, கல் உப்பு – 1/4 ஸ்பூன் இந்த பொருட்களை எல்லாம் மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் நன்றாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதுவும் தனியாக அப்படியே இருக்கட்டும்.

murungai-keerai2

4 வர மிளகாய்களை எடுத்து சிறிய சிறிய துண்டுகளாக கிள்ளி வைத்துக் கொள்ளுங்கள். 15 பூண்டு பல்லை எடுத்து தோலுரித்து இடுக்கியில் போட்டு நசுக்கி வைத்துக்கொள்ளுங்கள். மீடியம் சைஸ் 2 பெரிய வெங்காயங்களை எடுத்து பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள். இதுவும் அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

இப்போது முருங்கைக்கீரையை செய்யத் தொடங்கி விடலாம். அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு – 1/2 ஸ்பூன், கிள்ளி வைத்திருக்கும் மிளகாய், நசுக்கி வைத்திருக்கும் பூண்டு இவைகளை சேர்த்து முதலில் ஒரு நிமிடம் வரை வதக்கி விட வேண்டும்.

பூண்டு பொன்னிறமாக வதங்கியவுடன், நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும். வெங்காயம் பச்சை வாடை நீங்கியவுடன் தயாராக எடுத்து வைத்திருக்கும் முருங்கைக்கீரையை கடாயில் போட்டு, 1/2 டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி, 1/2 ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட்டு, இந்த முருங்கைக்கீரையை ஒரு மூடி போட்டு 5 நிமிடங்கள் வேக வைக்கவேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளுங்கள். (முருங்கைக் கீரையை எண்ணெயில் வதக்க வேண்டாம். அப்படி எண்ணெயில் வதக்கினால் சிலசமயம் கீரையில் கசப்பு வருவதற்கு வாய்ப்பு உள்ளது.)

murungai-keerai3

முருங்கைக் கீரை நன்றாக வெந்து கீரையில் ஊற்றி இருக்கும் தண்ணீர் அனைத்தும் சுண்டி வந்தவுடன், மிக்ஸி ஜாரில் தயாராக வைத்திருக்கும் தேங்காய் அரவையை, கடாயில் இருக்கும் கீரையில் கொட்டி, மீண்டும் ஒருமுறை நன்றாக கலந்து விட்டு மசாலாவின் பச்சை வாடை போகும் வரை கீரையை வதக்கி இறக்கினால் கமகம வாசத்தில் வித்தியாசமான முருங்கைக்கீரை பொரியல் தயார்.

murungai-keerai

இந்த முருங்கை கீரை பொரியலை வீட்டில் இருப்பவர்கள் யாருமே வேணாம்னு சொல்லவே மாட்டாங்க. அந்த அளவிற்கு இந்த ருசி அட்டகாசமாக இருக்கும். மிஸ் பண்ணாம ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -