வீட்டில் எப்போதும் சுபிக்ஷம் நிலவவும், சமூகத்தில் அந்தஸ்து கூடவும் வீட்டு பெண்கள் இவற்றை தொடர்ந்து செய்து வந்தாலே போதும். நல்லதொரு பலன் கைமேல் கிடைக்கும்.

poojai
- Advertisement -

நாம் அனைவரும் நம் வாழ்க்கையில் செல்வத்தை சேர்ப்பதற்காக மிகவும் போராடிக் கொண்டிருக்கிறோம். அதே நேரத்தில் எவ்வளவு செல்வம் இருந்தாலும், வீட்டில் ஏதாவது பிரச்சனை இருந்துகொண்டே இருந்தால் நிம்மதியே இருக்காது. நிம்மதி இருந்தால் மட்டுமே தான் நம்மால் மகிழ்ச்சியாக வாழ முடியும். அவ்வாறு வீட்டில் செல்வமும் நிம்மதியும் பெற இந்த செயல்களை நாம் செய்து வந்தாலே போதும்.

பொதுவாக நாம் நம் வீடுகளில் விளக்கேற்றும் பழக்கத்தை கொண்டிருக்கின்றோம். அவ்வாறு விளக்கேற்றும் போது சில மாற்றங்களை செய்வதன் மூலமாகவும் சிலவற்றை கவனிப்பதன் மூலமாகவும் நம் வீட்டில் சுபிக்ஷன் நிலவும். நாம் விளக்கேற்றும் போது விளக்கேற்றும் எண்ணெய்யானது விளக்கெண்ணெயாக இருப்பது சிறந்தது. விளக்கெண்ணெய் கொண்டு விளக்கேற்றும்போது குடும்ப உறுப்பினர்களுக்கு பேரும் புகழும் கூடி வரும். அதே நேரத்தில் சமூகத்தில் அந்தஸ்து உயரும். அதே போல் வீடுகளில் ஏற்றும் விளக்கின் எண்ணிக்கை குறைந்தது இரண்டாக இருக்க வேண்டும்.

- Advertisement -

அதில் குத்துவிளக்கு கிழக்கு முகமாக இருக்க வேண்டும். துணை விளக்கானது வடக்கு முகமாக இருக்க வேண்டும். இவ்வாறு ஏற்றும் விளக்கின் மூலமாக நம் வீட்டில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். மேலும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வீட்டை சுத்தம் செய்ய கூடாது. அதாவது தண்ணீர் வைத்து துடைக்க கூடாது. மற்ற நாட்களில் நாம் அதை செய்யலாம்.

அமாவாசை அன்றும் வீட்டை துடைக்க கூடாது. முதல் நாளே துடைத்து விட வேண்டும். அவ்வாறு துடைக்கும் போது, துடைக்கும் தண்ணீரில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை சேர்த்து துடைப்பது மிகவும் நல்லது. மேற்கூறிய அனைத்தும் எதிர்மறை ஆற்றல்களை விலக்கி, நேர்மறை ஆற்றல்களை உருவாக்கி, நாம் நிம்மதியுடன் வாழ்வதற்கு துணை புரியும்.

- Advertisement -

இப்பொழுது செல்வம் செழிக்க, நம்முடைய பணப்பெட்டியை தென்மேற்கு மூலையில் கிழக்கு பார்த்தவாரோ அல்லது வடக்கு பார்த்தவாரோ வைக்க வேண்டும். அல்லது வடமேற்கு மூலையில் கிழக்கு பார்த்தவாறு வைக்கலாம். இவ்வாறு வைப்பதன் மூலம் நம்மிடம் பணவரவு அதிகரிக்கும். அதே போல குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க, நாம் அவர்களை வடகிழக்கு மூலையிலோ அல்லது தென்மேற்கு மூலையிலோ அமர்ந்து படிக்க சொல்லலாம்.

இதையும் படிக்கலாமே: நகை அடகு போகாமல் இருக்க பரிகாரம்

அவ்வாறு படிக்கும்போது செவ்வாய், புதன் போன்ற கிழமைகளில் கிழக்கு நோக்கி அமர்ந்து படிக்க வேண்டும். மற்ற கிழமைகளில் வடக்கு நோக்கி அமர்ந்து படிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் படிப்பதன் மூலமாக . அவர்கள் படிப்பில் கவனம் அதிகரிக்கும். மேலும் படித்த அனைத்தும் அவர்கள் மனதில் எளிதாக பதியும். மேற்கூறிய குறிப்புகளில் தங்கள் கவனத்தை செலுத்தி, இதுவரை இதையெல்லாம் செய்யாமல் இருந்திருந்தால் இனிமேல் இதை செய்து தங்கள் குடும்பம் சுபிட்சமாக இருக்க வழிவகை செய்யுங்கள்.

- Advertisement -