அனைத்து சுகங்களையும் பெற்று மகிழ்ச்சியாக வாழ தேவையான பண வரவை பெறுவதற்கு இந்த ஒரு பொருளை வருடத்திற்கு ஒரு முறையாவது கோவிலுக்கு தந்தாலே போதும்.

happy life
- Advertisement -

பொதுவாக நாம் பட்ட கஷ்டத்தை நம் பிள்ளைகள் படக்கூடாது என்று நாம் ஒவ்வொரு விஷயங்களையும் பார்த்து பார்த்து செய்வோம். காரணம் அவர்கள் எந்த கஷ்டத்தையும் அனுபவிக்காமல் சுகமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதுதான். அவ்வாறு நினைத்து அதற்கேற்றவாறு பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று முயற்சி செய்வோம். அப்படி நம்முடைய சுகமான வாழ்க்கையை நமக்கு தரக்கூடியவராக திகழக் கூடியவர் தான் சுக்கிர பகவான். சுக்கிர பகவானின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைத்தால் நம்முடைய வாழ்க்கையில் சுக போகங்கள் என்பதற்கு குறைவே இருக்காது. அப்படிப்பட்ட சுக்கிர பகவானின் அருளை பெறுவதற்கும் வாழ்க்கையில் சுகபோகங்களை அனுபவிப்பதற்கும் எந்த பொருளை கோவிலுக்கு தானமாக தர வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்றவாறு அடிப்படை தேவைகள் என்பது மாறிக்கொண்டே தான் செல்கிறது. கஷ்டமில்லாமல் வாழ வேண்டும் என்பதற்காக தான் நம்முடைய அடிப்படை தேவைகள் என்பது மாறிக்கொண்டே போகும். அந்த காலத்தில் எங்கு செல்வதாக இருந்தாலும் நடந்தே செல்வார்கள். அடுத்ததாக சைக்கிள் வந்தது. அதற்கு அடுத்து பைக், இப்பொழுது கார் ஆகிவிட்டது. இப்படி தேவைகள் என்பது மாறிக்கொண்டே தான் செல்லும்.

- Advertisement -

புதிதாக ஒரு வெள்ளை நிற துணியை வாங்கிக் கொள்ள வேண்டும். அதை சுத்தமாக துவைத்து பன்னீரில் நனைத்து காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். கடையிலிருந்து 600 கிராம் வெள்ளை சர்க்கரையை வாங்கி வர வேண்டும். வெள்ளிக்கிழமை அன்று காலை 5:30 மணியிலிருந்து 6:00 மணிக்குள் நாம் தயார் செய்து வைத்திருக்கும் வெள்ளை துணியில் இந்த 600 கிராம் சர்க்கரையை கொட்ட வேண்டும். பிறகு அதன் மேல் 5 ரூபாய் நாணயம் ஒன்றையும் 1 ரூபாய் நாணயம் ஒன்றையும் வைத்து மூட்டையாக கட்ட வேண்டும்.

கட்டிய இந்த மூட்டையை பூஜை ரூமில் மகாலட்சுமி தாயாரின் புகைப்படத்திற்கு முன்பாக வைக்க வேண்டும். ஒரு அகலில் நெய் தீபத்தை ஏற்றி வைத்து “ஓம் மகாலட்சுமியே போற்றி” என்றோ அல்லது “ஓம் சுக்ரனே போற்றி” என்றோ 108 முறை மந்திரத்தை கூற வேண்டும். பிறகு எப்பொழுதும் போல் கற்பூரம் சாம்பிராணி காட்டி வணங்கி விட வேண்டும். கற்பூரம் காட்டும் பொழுது “நான் அனைத்து விதமான சுப போகங்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்” என்ற சங்கல்பத்தை வைக்க வேண்டும்.

- Advertisement -

இந்த மூட்டை தொடர்ந்து 15 நாட்கள் பூஜை அறையிலேயே இருக்க வேண்டும். 15 நாட்கள் கழித்து வரும் செவ்வாய், புதன் அல்லது சனிக்கிழமை இந்த மூன்று கிழமைகளில் ஏதாவது ஒரு கிழமை அன்று மாலை நேரத்தில் அருகில் இருக்கும் பழங்கால சிவாலயத்திற்கு இந்த மூட்டையை எடுத்துச் செல்ல வேண்டும். மாலை என்றதும் ஆறு மணிக்கு மேல் போகாமல் சூரியன் அஸ்தமனம் ஆவதற்கு முன்பாகவே செல்ல வேண்டும்.

அந்த கோவிலுக்கு சென்று விநாயகரை வழிபட்டு விட்டு நவகிரகங்கள் இருக்கும் இடத்திற்கு வந்து ஒன்பது முறை நவகிரகங்களை சுற்ற வேண்டும். அவ்வாறு சுற்றும் பொழுது “ஓம் சுக்கிரனே போற்றி” என்று கூறியவரே சுற்ற வேண்டும். ஒன்பது முறை சுற்றி முடித்த பிறகு இந்த மூட்டையை சுக்கிர பகவானின் பாதத்தின் அடியில் வைத்து விட வேண்டும். பிறகு மற்ற தெய்வங்களை போய் வணங்கி விட்டு வீட்டிற்கு சென்று விடலாம்.

இதையும் படிக்கலாமே: ஏளனப்படுத்தியவர்கள் முன்பாக விஸ்வரூபமான வெற்றியை அடைந்தது அவர்கள் முகத்தில் கரியை பூச செவ்வாய்க்கிழமை இரவு இந்த பொருளை கற்பூரத்துடன் சேர்த்து ஏற்றுங்கள்.

இவ்வாறு நம்முடைய கஷ்டத்திற்கும் பண நெருக்கடிக்கும் ஏற்றவாறு மாதத்திற்கு ஒரு முறையோ, 3 மாதத்திற்கு ஒரு முறையோ, 6 மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது வருடத்திற்கு ஒரு முறையோ இந்த பரிகாரத்தை தொடர்ந்து மேற்கொண்டு வந்தால் நம்முடைய வாழ்க்கையில் நாம் அனைத்து விதமான சுகபோகங்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ தேவையான பண வரவை சுக்கிர பகவான் நமக்கு அருள் புரிவார்.

- Advertisement -