உங்கள் டென்ஷனை போக்கி இடுப்பெலும்பு, முதுகெலும்பு ஆகியவற்றை பலப்படுத்தக்கூடிய இந்த விஷயத்தை தினமும் 20 நிமிடங்கள் செய்யுங்கள்!

sugasanam1
- Advertisement -

மாறி வரும் காலத்திற்கு ஏற்ப நம்முடைய டென்ஷனும் அதிகரித்து வருகிறது. பரபரப்பான இந்த உலகில் ஆண், பெண் என்கிற வித்தியாசம் இல்லாமல் அனைவருமே வேலைக்கு செல்கின்றனர். வெளியில் அவர்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் மனதில் உளைச்சலாக மாறுகிறது. வீட்டிற்கு வந்தாலும் நிம்மதி கிடைக்கிறதா? என்றால் அதுவும் இல்லை என்று சிலருக்கு ஆகிவிடுகிறது. எனவே கொஞ்சம் கொஞ்சமாக மனதில் இருக்கும் இந்த அழுத்தத்தை போக்கி, உங்களுடைய முதுகு எலும்பு, இடுப்பு எலும்பு ஆகியவற்றை பலப்படுத்தக்கூடிய அற்புதமான ஒரு ஆசனத்தை பற்றிய தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

‘சுகாசனம்’ எனப்படும் இந்த ஆசனம் யார் வேண்டுமானாலும், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தாராளமாக செய்யலாம். குழந்தைகள் கூட தினமும் 20 நிமிடங்கள் இந்த ஆசனத்தை செய்வதன் மூலம் அவர்களுடைய உடல் மற்றும் மூளை வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். அது மட்டுமல்லாமல் மனம் சார்ந்த பிரச்சனைகளையும் தீர்க்கக் கூடிய இந்த ஒரு ஆசனத்தை அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.

- Advertisement -

சுகாசனம் எனப்படும் இந்த ஆசனத்தை செய்வதற்கு முதலில் ஒரு அமைதியான இடத்தைத் தேர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு பாய் அல்லது ஏதாவது ஒரு மெல்லிய துணியை விரித்து அதன் மீது அமர்ந்து கொள்ளுங்கள். சம்மணங்கால் போட்டு அமர்ந்து நேராக உங்கள் முதுகு தண்டு இருக்குமாறு நிமிர்ந்து கொள்ளுங்கள். பின்னர் இரு கைகளையும் உங்கள் கால் மூட்டுகளின் மீது வைத்துக் கொள்ள வேண்டும்.

உள்ளங்கை மேலே பார்த்த வாழும் அடிப்பகுதி உங்கள் மூட்டின் மீதும் இருக்க வேண்டும் உங்களுடைய ஆள்காட்டி விரல் மற்றும் கட்டை விரல் இரண்டின் நுனி பகுதியும் ஒன்றுடன் ஒன்று இணைந்து இருக்க வேண்டும். மற்ற மூன்று விரல்கள் நேராக இருக்க வேண்டும். இப்படி ஒரு முனிவர் தவம் செய்வது போல அமர்ந்து கொள்வது தான் சுகாசனம் எனப்படுகிறது. அமர்ந்த பின் கண்களை மூடிக் கொண்டு, மூச்சை மெதுவாக உள்ளே இழுத்து, மெதுவாக வெளியில் விட வேண்டும். இந்த சுகாசனம் செய்யும் பொழுது மனம் அமைதி பெறுகிறது. இதனால் மனதில் இருக்கும் தேவையற்ற எண்ணங்கள் அல்லது குழப்பங்கள் எதுவாக இருந்தாலும் பத்து நிமிடத்தில் தீர்ந்து போய்விடும்.

- Advertisement -

மனதில் பதட்டம், மன அழுத்தம், மன சோர்வு ஆகிய பிரச்சனைகளை நம்மிடம் இருந்து துரத்தி அடிக்க கூடிய ஆற்றல் இந்த சுகாசனத்திற்கு உண்டு. அது மட்டுமல்லாமல் நீங்கள் நேராக நிமிர்ந்து அமருவதன் மூலம் உங்களுடைய முதுகு எலும்பு வலியிலிருந்து விடுதலை பெற்று நன்கு பலம் பெறுகிறது. இதனால் உங்களால் அதிக நேரம் நடக்கவும், நிற்கவும் முடியும். இடுப்பு எலும்புகள் பலப்படவும் இது போல நேராக அமர்ந்து சுகாசனம் செய்ய வேண்டும்.

உங்களுக்கு ஓய்வு கிடைக்கும் நேரத்தில் 20 நிமிடத்தை மட்டும் ஒதுக்கி தினமும் இந்த சுகாசனத்தை செய்து வருபவர்களுக்கு நிச்சயம் கொஞ்ச நாட்களிலேயே அதன் பலன்களை அனுபவிக்க கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆண்களை விட, பெண்கள் இதை செய்வது இன்னும் கூடுதல் பலன்களை அவர்களுக்கு அள்ளிக் கொடுக்கும். சாப்பிட்ட அரை மணி நேரத்திற்கு முன்னும், பின்னும் இந்த ஆசனத்தை செய்வதை தவிர்ப்பது நல்லது. மற்ற நேரங்களில் நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் சுகாசனத்தை செய்து பயன் அடையலாம்.

- Advertisement -