சமையல் அறையில் எப்போதும் நிறைவாக இருக்க வேண்டிய பொருட்களில் இதுவும் ஒன்று! இந்த தானியம் நிறைந்திருந்தால், வீட்டில் செல்வ வளமும் சந்தோஷமும் நிறைந்திருக்கும்.

kitchen1

வீட்டில் இருக்கக்கூடிய செல்வ வளத்திற்கும் தன தானியத்திற்கும் என்றுமே பஞ்சம் ஏற்படக் கூடாது என்பதுதான் மனிதர்களுடைய ஆசையாக இருந்து வருகிறது. அந்த வரிசையில் எந்த ஒரு பொருளையும் நம்முடைய வீட்டில் சுத்தமாக துடைத்து வைக்கக்கூடாது. அதாவது அரிசி பருப்பு முதற்கொண்டு தானிய வகைகள் வரை, முழுமையாக தீருவதற்கு முன்பாகவே அதை வாங்கி நம் வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். அதுதான் வளமான வாழ்க்கையை நமக்கு தரும். எந்த வீட்டில் ‘இல்லை’ என்ற வார்த்தை இல்லாமல் இருக்கின்றதோ அந்த வீட்டில் எதுவுமே இல்லாமல் இருக்காது என்பதுதான் உண்மை.

women7

முடிந்த வரை வீட்டில் இருக்கும் குடும்பத் தலைவிகள், குடும்ப சூழ்நிலையை புரிந்துகொண்டு, இல்லை என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல் சாமர்த்தியமாக குடும்பத்தை நடத்தி வந்தால், அந்த குடும்பம் சுபிட்சம் நிறைந்த குடும்பமாக, படிப்படியான முன்னேற்றத்தை பெறும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது.

குடும்பத் தலைவிகளின் ஆதிக்கம் நிறைந்த சமையலறை சுக்கிர பகவானுக்கு உரியது. இந்த சுக்கிர பகவானை நாம் மன நிறைவு செய்து விட்டால் போதும். நம் வீட்டு தனதான்யங்கள் நிறைந்திருக்கும். நம் வீட்டு பீரோவில் செல்வமும் கடாட்சமும் நிறைந்திருக்கும். பூஜை அறையில் மகாலட்சுமியும் நிறைந்திருப்பாள். நம் வீட்டு சமையல் அறையில் கல் உப்பை எப்படி குறையாமல் பார்த்துக் கொள்கின்றோமோ, அதேபோல சுக்கிர பகவானுக்கு உரிய தானியமான மொச்சையையும் எப்போதும் நம் வீட்டில் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

mochai

சுக்கிர பகவானுக்கு உரியது மொச்சை. மகாலட்சுமிக்கு உரியது கல் உப்பு என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். சுக்கிர பகவானுக்கு உரிய உலோகம் வெள்ளி. ஆக இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து வடகிழக்கு மூலையில் சமையல் அறையில் வைக்க வேண்டும்.

- Advertisement -

ஒரு சிறிய கண்ணாடி கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை முதலில் போட்டுக் கொள்ள வேண்டும். அடுத்த படியாக ஒரு கைப்பிடி அளவு மொச்சையை போட வேண்டும். உங்கள் வீட்டில் இருக்கும் ஏதாவது ஒரு வெள்ளி சம்பந்தப்பட்ட பொருளை மொச்சை தானியத்திற்கு மேல் வைத்து விடுங்கள். இந்த கண்ணாடி கிண்ணத்தை அப்படியே வடகிழக்கு மூலையில் அல்லது மேற்குப் பக்கத்தில் சமையலறையில் வைப்பது வீட்டிற்கு செல்வ செழிப்பை தேடித்தரும் என்று சொல்லப்பட்டுள்ளது.

uppu

வாரம் வரக்கூடிய வியாழக்கிழமை அன்று உப்பை எடுத்து தண்ணீரில் கரைத்து விட்டு, மொச்சையை பசுமாட்டிற்கு கொடுத்துவிட வேண்டும். மீண்டும் புதியதாக இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து, அந்த கண்ணாடி கிண்ணத்தை சமையலறையில் வைத்துக் கொள்ளலாம்.

sukkiran

எத்தனை வாரங்கள் இப்படி செய்வது. 11 வாரங்கள் பரிகாரத்தை செய்து பார்த்து, இந்த பரிகாரத்தின் மூலம் உங்களுக்கு மன திருப்தி ஏற்பட்டு, வீட்டில் செல்வ வளத்தில் நல்ல முன்னேற்றம் தெரிந்தால் தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.