சமைத்த உணவுகள் வீணாகாமல் இருக்க சில எளிய சமையல் குறிப்புகள் இதோ உங்களுக்காக.

kitchen1
- Advertisement -

வீடுகளில் சில நேரங்களில் விரைவாக சமைக்கும் பொழுது உங்களையும் அறியாமல் நீங்கள் சில தவறுகளை செய்ய வாய்ப்புகள் உள்ளது. இவ்வாறு உண்டாகும் தவறுகளை எப்படி சரி செய்ய வேண்டும் என்று பலருக்கும் தெரியாமல் திணறிக் கொண்டு இருப்பார்கள். அதுமட்டுமல்லாமல் சமைத்த உணவு மீதி ஆனாலும் அவற்றை என்ன செய்வது என்பது பற்றியும் பலருக்கு தெரியாது. அதுபோல் சமைப்பதற்காக உபயோகப்படுத்தும் பொருட்கள் மற்றும் பாத்திரங்களை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை பற்றியும் சிலர் சரியாக அறிந்திருப்பதில்லை. இவ்வாறு சமையலறையில் நீங்கள் அறிந்திராத பல விஷயங்களுக்கான எளிய குறிப்புகளையே இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

குறிப்பு 1:
பெரும்பாலும் வீட்டில் இட்லியை காலை உணவாக இருக்கும். இந்த இட்லியை சிலசமயங்களில் மிருதுவாக இல்லாமல் சற்று கெட்டியாக இருக்கும். இதனை சரி செய்வதற்கு நான்கு அல்லது ஐந்து பச்சை அப்பளங்களை நீரில் ஊறவைத்து இட்லி மாவுடன் சேர்த்து கரைத்து விட்டால் இட்லி மிருதுவாக பூ போன்று வரும்.

- Advertisement -

குறிப்பு 2:
சைவ உணவிற்காக வீடுகளில் அதிகமாக செய்வது சாம்பார் தான். இந்த சாம்பாரை மாலை வேளையில் ஒரு முறை சூடு செய்ய மறந்து விட்டால் அது விரைவில் வீணாகிவிடும். இவ்வாறு சாம்பார் சீக்கிரத்தில் வீணாகாமல் இருக்க துவரம் பருப்பை வேகவைக்கும் பொழுது அதனுடன் ஒரு கால் ஸ்பூன் வெந்தயம் சேர்த்து வேக வைக்கவேண்டும்.

Vendhayam

குறிப்பு 3:
அடுப்பு, சமையல் மேடை, அடுப்பை சுற்றியுள்ள பகுதிகள் இவை அனைத்தும் எண்ணெய் பசை அதிகமாக ஒட்டியிருக்கும் இவற்றை ஒரு துணி அல்லது சாதாரண பேப்பர் என்னால் லேசாக துடைத்து விட்டு வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு சோடா உப்பு சேர்த்து அந்த கலவையை அடுப்பு மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் தடவி விட்டு சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும் பின்னர் ஒரு துணியினை வைத்து லேசாக துடைத்து விட்டால் போதும் அந்த இடங்கள் பளபளவென்று மாறிவிடும்.

- Advertisement -

குறிப்பு 4:
சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அப்பளம் பொரிக்கும் பொழுது அது கூடுதலாக இருந்து மீதம் ஆகி விட்டால், அந்த அப்பளத்திணை ஒரு பாலிதீன் கவரில் வைத்து நன்றாக சுற்றிக் கொண்டு, அதனை ஃபிரிட்ஜில் வைத்து விட்டால் ஒரு வாரம் ஆனாலும் மொறு மொறுவென்று இருக்கும்.

appalam7

குறிப்பு 5:
அடை மற்றும் வடை மாவில் சற்று தண்ணீர் அதிகமாகிவிட்டால் அதனை சரிசெய்ய சிறிதளவு கான் ஃபிளாக்ஸை பொடி செய்து, இந்த மாவுடன் கலந்துவிட்டால் மாவு கெட்டியாகி அதன் சுவையும் அபாரமாக இருக்கும்.

adai4

குறிப்பு 6:
டீ போடும் பாத்திரம் அல்லது நீங்கள் சமைத்த பாத்திரம் ஏதேனும் ஒன்று மிகவும் அடி பிடித்திருந்தால், அந்தப் பாத்திரத்தினுள் ஒரு வெங்காயத்தை நறுக்கி சேர்த்துக்கொண்டு, அதனுடன் தண்ணீர் சேர்த்து, நன்றாக கொதிக்கவைத்து, பின்னர் பாத்திரத்தை கழுவினால் கரை முழுவதுமாக சுத்தமாகிவிடும்.

vellarikai

குறிப்பு 7:
வெயில் காலங்களில் எப்பொழுதும் சமையலறையிலும், அலமாரிகளிலும் எரும்பு தொல்லைகள் அதிகமாக இருக்கும். எறும்பு தொல்லையிலிருந்து விடுபட உலர்ந்த வெள்ளரிக்காய் தோலினை எறும்பு அதிகம் வரக்கூடிய இடங்களில் வைத்து விட்டால் அங்கு நிச்சயம் எறும்பு வராமல் இருக்கும். இந்த எளிய குறிப்புகள் உங்கள் சமையலறையில் உங்களுக்கு நிச்சயமாக பயன் அளிக்கும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -