கருத்த சருமம் உடனே வெள்ளையாக மாற

black skin white skin
- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் எல்லோரும் பணிக்கு செல்லக் கூடிய சூழ்நிலையில் இருக்கிறோம். இதனால் தங்களுடைய ஆரோக்கியத்தையும் அழகையும் பராமரித்துக் கொள்ள போதுமான நேரம் யாருக்கும் கிடைப்பதில்லை. அதிலும் முகம் பொலிவாக இல்லை என்றால் நிச்சயம் நம்முடைய தன்னம்பிக்கையை இழந்தது போன்ற ஒரு உணர்வு இருக்கும்.

ஆகையால் தான் முக அழகை வெளிப்படுத்துவதில் பெரும்பாலானோர் அதிக ஈடுபாட்டுடன் இருக்கிறார்கள். இது ஒரு புறம் இருக்க நம்முடைய நிறம் வெயில் பட்டு கருத்து போவது மற்றும் ஒரு பெரிய பிரச்சினை. ஒரே ஒரு முறை வெயிலில் சென்று வந்து விட்டால் போதும் மீண்டும் பழைய நிறத்தை கொண்டு வர பல நாட்கள் ஆகி விடும். அதற்காக வெளியில் செல்லாமல் இருக்க முடியாது அல்லவா.

- Advertisement -

இயற்கையிலே நிறம் கருமையாக இருந்தாலும் சரி, அல்லது வெயிலினால் முகம் கருத்து போயிருந்தாலும் சரி இந்த ஒரு பேக்கை பயன்படுத்தும் போது உடனடியான பலனை பெற முடியும். அது என்ன பேக் எப்படி செய்ய வேண்டும் என்பதை எல்லாம் அழகு குறிப்பு குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கருத்த முகம் உடனே வெள்ளையாக

முதலில் இந்த பேக்கை தயாரிக்க தேவையான பொருட்களை பார்க்கலாம். இதற்கு ஒரு டம்ளர் பால், 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை, 2 டேபிள் ஸ்பூன் காபித் தூள், 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், கடலை மாவு சிறிதளவு.

- Advertisement -

முதலில் அடுப்பில் பாத்திரம் வைத்து பால் ஊற்றி கொதிக்க விடுங்கள். பால் கொதித்து வரும் போது அதில் மஞ்சள் தூள், சர்க்கரை, காபித் தூள் மூன்றையும் சேர்த்து விட்டு அடுப்பை சிம்மில் வைத்து விடுங்கள். பால் நன்றாக கொதித்துகெட்டியான பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைத்து விடுங்கள். இப்போது எடுத்து வைத்திருக்கும் கடலை மாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக போட்டு இதை ஒரு நல்ல பேஸ்ட் பதத்திற்கு குழைத்துக் கொள்ளுங்கள்.

இந்த பேக்கில் சர்க்கரை சேர்த்துக் கொள்ள விருப்பம் இல்லாதவர்கள் தேன் சேர்த்து செய்யலாம். இந்த பேக்கை போடுவதற்கு முன்பு உங்களுடைய முகம் கை கால் கழுத்து பகுதிகளை முதலில் நன்றாக தண்ணீர் வைத்து துடைத்து சுத்தம் செய்து விடுங்கள். அதன் பிறகு இந்த பேக்கை போட்டு 20 நிமிடம் வரை அப்படியே விட்டு விடுங்கள்.

- Advertisement -

20 நிமிடம் கழித்து லேசான மசாஜ் செய்த பிறகு சுத்தமான தண்ணீர் கொண்டு துடைத்து விடுங்கள். இப்போது உங்கள் முகத்தையும் கை கால்களையும் பாருங்கள் முன்பு இருந்ததற்கும் இப்போது நிறத்திற்கு அவ்வளவு வித்தியாசம் இருக்கும். ஒரே பேக்கிலே இத்தனை நிறத்தை உடனே கொண்டு வர முடியுமா என்று நிச்சியம் ஆச்சரியப்படுவீர்கள்.

இதையும் படிக்கலாமே: முடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஹேர் பேக்

ஒரு முறை தயார் செய்து இந்த பேக்கை ஒரு வாரம் வரை ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்து பயன்படுத்தலாம். இதை வாரம் ஒரு முறை அல்லது இருமுறை பயன்படுத்துங்கள். வெளியில் சென்று வந்தால் உடனே இந்த பேக்கை போட்டு விடுங்கள். வெயிலில் கருத்த முகம் உடனே பளிச்சென்று மாறி விடும். இந்த ஃபேஸ் பேக் முறை உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்.

- Advertisement -