சுட சுட கார குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட இப்படி சுவையான அவியல் செய்து பாருங்கள் அவ்வளவு அருமையான சுவையில் இருக்கும்.

aviyal3
- Advertisement -

தினமும் மதிய உணவாக சாதம் சாப்பிடுவது தான் அனைவரின் பழக்கமாக இருக்கிறது. இவ்வாறு வெள்ளை சாதத்துடன் சாம்பார், காரக்குழம்பு, கீரை குழம்பு, குருமா குழம்பு இதுபோன்ற குழம்புவகைகள் செய்யப்படுகிறது. இவற்றுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட ஏதாவது ஒரு காய்கறி பொரியலும் செய்யப் படுகிறது. ஆனால் காய்கறிகளை செய்து வைத்தால் வீட்டில் உள்ள அனைவரின் விருப்பமாக சாப்பிடுவதில்லை. ஆனால் காய்கறிகளில் உடம்பிற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கிறது. எனவே காய்கறிகளை எப்படியாவது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியமாக இருக்கிறது. எனவே இந்த காய்கறிகளையும் வீட்டில் உள்ளவர்கள் தட்டாமல் சாப்பிட அவற்றை இப்படி வித்தியாசமான சுவையில் சமைத்து கொடுத்தால் விருப்பமாக சாப்பிடுவார்கள். வாருங்கள் அப்படி வித்தியாசமான இந்த அவியலை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
முருங்கைக்காய் – ஒன்று, கருணை கிழங்கு – 100 கிராம், வாழைக்காய் – ஒன்று, கத்தரிக்காய் – 3, பூசணிக்காய் – 100 கிராம், கேரட் – 2, தேங்காய் – கால் மூடி, பச்சை மிளகாய் – 6, எண்ணெய் – 2 ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், உளுத்தம்பருப்பு – அரை ஸ்பூன், தயிர் – 100 கிராம், உப்பு – முக்கால் ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் முருங்கைக்காயை 5 துண்டுகளாக வெட்டி வைக்க வேண்டும். பிறகு கருணைக் கிழங்கின் மீதுள்ள தோலை சுத்தமாக நீக்கிவிட்டு, அவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதேபோல் வாழைக்காயையும் தோல் நீக்கி, பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பின்னர் கத்தரிக்காயின் காம்பை அகற்றி சிறு துண்டுகளாக நறுக்க வேண்டும்.

பிறகு பூசணிக்காயின் மீது உள்ள தோலை சீவி விட்டு அதனையும் பொடியாக நறுக்க வேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைக்க வேண்டும். கடாய் நன்றாக சூடேறியதும் அதில் பூசணிக்காயை தவிர வெட்டி வைத்துள்ள மற்ற காய்கறிகள் அனைத்தையும் சேர்க்க வேண்டும்.

- Advertisement -

பின்னர் இவற்றுடன் உப்பு மற்றும் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, ஒரு தட்டு போட்டு மூடி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, காய்கறிகளை வேக வைக்க வேண்டும். பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் கால் மூடி தேங்காயை பொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும். அதனுடன் 6 பச்சை மிளகாயையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு காய்கறிகள் பாதியளவு வெந்ததும் அதனுடன் பூசணிக்காய் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும். பின்னர் இவற்றுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு இறுதியாக தயிர் ஊற்றி கலந்து விட்டு, இரண்டு நிமிடத்திற்கு பிறகு கொத்தமல்லி தழை தூவ வேண்டும். பின்னர் ஒரு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அதனை அவியலுடன் சேர்த்து விட வேண்டும்.

- Advertisement -