என்ன குழம்பு வைப்பது என்று யோசனையாக இருக்கிறதா? அப்போது உடனே இந்த போண்டா மோர்க்குழம்பு செய்து பாருங்கள்

MOR
- Advertisement -

பெருமளவு சாதத்துடன் சேர்த்து சாப்பிட சாம்பார், கார குழம்பு, மீன் குழம்பு, கறி குழம்பு, கீரை போன்ற குழம்பு வகைகள் தான் செய்வதுண்டு. ஒரு சில வீடுகளில் தயிரை தினமும் சாதத்துடன் சேர்த்து சாப்பிடுவார்கள். ஆனால் ஒருமுறை இவ்வாறு போண்டா செய்து மோர்க்குழம்புடன் ஊற வைத்து சாதத்துடன் சேர்த்து சுவைத்துப் பாருங்கள். மிகவும் அருமையான சுவையில் இருக்கும். இவ்வாறு வித்தியாசமான உணவு வகைகளை அனைவரும் விருப்பமாகவே சாப்பிடுவார்கள். என்றாவது ஒருநாள் உங்களது தினத்தை ஸ்பெஷலாக மாற்ற இவ்வாறு மோர்க்குழம்பு செய்து பாருங்கள். இதனை எவ்வாறு செய்வது என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

manathakkali

தேவையான பொருட்கள்:
உளுத்தம் பருப்பு – 250 கிராம், சீரகம் – அரை ஸ்பூன், உப்பு – ஒன்றரை ஸ்பூன், எண்ணெய் – 200 கிராம், பெருங்காயத் தூள் – ஒரு ஸ்பூன், தேங்காய் – 2 சில்லு, பச்சை மிளகாய் – 5, வெண்டைக்காய் – 6, தயிர் – அரை லிட்டர், சீரகம் – ஒரு ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, கடுகு – அரை ஸ்பூன், ஊறவைத்த கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன், பச்சரிசி – ஒரு ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் உளுத்தம் பருப்பை இரண்டு, மூன்று முறை நன்றாக கழுவி, ஒன்றரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் உளுத்தம் பருப்பை மிக்ஸியில் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு வடை பதத்திற்கு அரைத்துக் கொள்ளவேண்டும். பிறகு இதனுடன் அரை ஸ்பூன் சீரகம், அரை டீஸ்பூன் பெருங்காயத்தூள் மற்றும் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும்.

ulundhu

பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் உளுத்தமாவினை சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் சேர்த்து பொரித்தெடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் 2 சில்லு தேங்காய், 2 பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் பச்சரிசி மற்றும் ஊறவைத்த கடலைப்பருப்பு சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு அடுப்பின் மீது கடாயை வைத்து, ஐந்து ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு ஆறு வெண்டைக்காயை பொடியாக நறுக்கி, எண்ணெய்யில் சேர்த்து வதக்கி, தனியாக எடுத்து வைக்க வேண்டும். பிறகு அதே எண்ணெயில் அரை ஸ்பூன் சீரகம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, உப்பு, மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.

mor

பின்னர் இவற்றுடன் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு, அடுப்பை அனைத்து விட வேண்டும். பிறகு இவற்றுடன் அரை லிட்டர் தயிர் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பிறகு வதக்கி வைத்துள்ள வெண்டைக்காயையும், பொரித்து வைத்துள்ள போண்டாவையும் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, இறுதியாக கொத்தமல்லி தழைகளைத் தூவவேண்டும். அவ்வளவுதான் சுவையான போண்டா மோர்க்குழம்பு தயாராகிவிட்டது.

- Advertisement -