கேரட், பீன்ஸ் பொரியலை மிகவும் எளிமையாக இவ்வாறு செய்தால் போதும். நீங்கள் செய்த உடனேயே கடாய் முழுவதும் காலியாகிவிடும்

carrot
- Advertisement -

உணவு வகைகளில் சைவ உணவில் மட்டும் தான் அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் அதிகம் நிறைந்து இருக்கிறது. ஆனால் பெரும்பாலான மக்கள் அதிகமாக விரும்பி சாப்பிடுவது அசைவ உணவுகளை தான். இந்த அசைவ உணவுகளின் மூலம் தான் உடம்பிற்குத் தேவையில்லாத நோய்கள் வந்து சேருகின்றன. என்னதான் மருத்துவர்கள் ஆலோசனை சொன்னாலும் இது போன்ற தவறுகளை தான் நாம் மறுபடியும் செய்துகொண்டே இருக்கிறோம். அசைவ உணவுகளை சாப்பிட வேண்டாம் என்று எவரும் சொல்லவில்லை. ஆனால் அதிகப்படியான காய்கறி உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று தான் மருத்துவர்கள் கூறுகிறார்கள். எனவே தினமும் ஒரு காய்கறியை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். அப்படி அனைவரும் விருப்பமாக சாப்பிட ஏற்ற வகையில் இந்த கேரட், பீன்ஸ் காய்கறி பொரியலை மிகவும் சுவையாக எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்:
வெங்காயம் – 2, கேரட் – கால் கிலோ, பீன்ஸ் – கால் கிலோ, எண்ணெய் – 5 ஸ்பூன், பச்சை மிளகாய் – 2, வர மிளகாய் – 3, கடுகு – அரை ஸ்பூன், உளுத்தம்பருப்பு – ஒரு ஸ்பூன், தேங்காய் – 3 செல்லு, பூண்டு – 4 பல், கறிவேப்பிலை – ஒரு கொத்து, உப்பு – முக்கால் ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் வெங்காயம், கேரட், பீன்ஸ் இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்க வேண்டும். பின்னர் மூன்று வர மிளகாயை இரண்டாக உடைத்து வைக்க வேண்டும். பிறகு நான்கு பல் பூண்டை சிறிய உரலில் வைத்து தட்டி வைக்க வேண்டும்.

பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைக்க வேண்டும். கடாய் நன்றாக காய்ந்ததும் அதில் நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். பின்னர் எண்ணெய் சூடேறியதும் அதில் அரை ஸ்பூன் கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

- Advertisement -

பின்னர் தட்டி வைத்துள்ள பூண்டு சேர்த்து வதக்கி விட்டு, நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய் வரமிளகாய் சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு நறுக்கிய வெங்காயம் மற்றும் அதனுடன் கறிவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் வெட்டி வைத்துள்ள கேரட் பீன்ஸை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் இதனுடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

பிறகு இவற்றுடன் கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு, கடாயின் மீது தட்டு போட்டு மூடி, அடுப்பை சிம்மில் வைத்து, காய்கறிகளை வேக விட வேண்டும். அதே சமயத்தில் ஒரு மிக்ஸி ஜாரில் 3 சில்லு தேங்காயை பொடியாக நறுக்கி சேர்த்து, துருவலாக அரைத்து கொள்ள வேண்டும். பிறகு காய்கறிகள் அனைத்தும் நன்றாக வெந்ததும் தேங்காய் துருவலை சேர்த்து கலந்து விட்டு, அடுப்பை அனைத்துவிட வேண்டும்.

- Advertisement -