இப்படி புதுவித சுவையில் செட்டிநாட்டு அவியல் செய்து, இட்லி தோசையுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட கொடுத்தால் எவ்வளவு சாப்பிட்டாலும் போதும் என்று தோன்றாது

aviyal
- Advertisement -

அவியல் என்றாலே அதில் தேங்காய், தயிர், பச்சை மிளகாய் இவற்றை மட்டும் சேர்த்து செய்யக்கூடிய கேரளா அவியல் மட்டும்தான் அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் இப்படிச் செட்டிநாட்டு சுவையில் மசாலா அரைத்து அவியல் செய்வது மிகவும் அற்புதமாக இருக்கும். இதன் சுவை அவ்வளவு அருமையாக இருக்கும். இட்லி தோசைக்கு, சட்னி சாம்பார் சேர்த்து சாப்பிடுவதை விட இந்த அவியல் சேர்த்து சாப்பிடும் பொழுது மிகவும் அற்புதமான சுவையில் இருக்கும். இரண்டு இட்லி சாப்பிடுபவர்கள் கூட இன்னும் இரண்டு இட்லி சேர்த்து சாப்பிடுவார்கள். இதனை சரியான பக்குவத்தில் செய்தால் மட்டுமே நல்ல சுவையில் இருக்கும். எனவே இதில் சேர்க்கப்படும் மசாலாக்கள் அனைத்தையும் கவனமாக சேர்க்க வேண்டும். வாருங்கள் இந்த புதுமையான சுவைமிக்க செட்டிநாட்டு அவியலை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
வெங்காயம் – 2, தக்காளி – 2, உருளைக்கிழங்கு – 1, கத்தரிக்காய் – 2, பச்சை மிளகாய் – 6, புளி – எலுமிச்சம்பழ அளவு, மஞ்சள்தூள் – அரை ஸ்பூன், கரம் மசாலா – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 3 ஸ்பூன், புளி – சிறிய நெல்லிக்காய் அளவு, பொட்டுக்கடலை – 2 ஸ்பூன், தேங்காய் துருவல் – ஒரு கப், சோம்பு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், கசகசா – அரை ஸ்பூன், மிளகு – 10, தனியா – 2 ஸ்பூன், கறிவேப்பிலை – இரண்டு கொத்து, பிரியாணி இலை – ஒன்று, பட்டை சிறிய துண்டு – ஒன்று, கிராம்பு – 2, ஏலக்காய் – 2, அன்னாசிப்பூ – ஒன்று.

- Advertisement -

செய்முறை:
முதலில் தக்காளி வெங்காயம் மற்றும் காய்கறிகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பிறகு அடுப்பின் மீது ஒரு கடாயை வைத்து தனியா, மிளகு, கசகசா, சோம்பு, சீரகம், பொட்டுக்கடலை இவை அனைத்தையும் தனித்தனியாக வறுத்து ஒரு தட்டில் மாற்றிக்கொள்ள வேண்டும். பிறகு ஒரு கப் தேங்காய் துருவலையும் சேர்த்து மிதமாக வறுத்தெடுக்க வேண்டும்.

பின்னர் கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, அதில் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, இதனை வறுத்து வைத்துள்ள பொருட்களுடன் சேர்த்து கொள்ள வேண்டும். பிறகு இவை அனைத்தையும் ஆற வைத்து, மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு மீண்டும் கடாயில் எண்ணெய் ஊற்றி பிரியாணி இலை, பட்டை, அன்னாசிப்பூ, ஏலக்காய், கிராம்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் தக்காளியையும் சேர்த்து வதக்கி, நறுக்கி வைத்துள்ள காய்கறிகளையும் சேர்த்து, அதனுடன் உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.

பிறகு இவற்றுடன் மஞ்சள் தூள் மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்றாக கலந்து, சிறிது நேரம் எண்ணெயில் வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு நெல்லிக்காய் அளவு புளியைக் கரைத்து, புளிக்கரைசலையும் இவற்றுடன் சேர்த்து இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி, நன்றாக கொதிக்க விடவேண்டும். சிறிது நேரம் கழித்து இவை நன்றாக கொதித்து வந்ததும் அடுப்பை அனைத்து விட வேண்டும்.

- Advertisement -