வீடே மணக்கும் சைடிஸ் அல்லது குழம்பு நொடியில் செய்து அசத்த ஒரே 1 சௌசௌ இருந்தால் போதுமே!

chow-chow-kulambu1
- Advertisement -

நீர் சத்து நிறைந்துள்ள சௌசௌ ரொம்ப சுவையானதொரு காய்கறி வகையாகும். இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நீர்கடுப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும். சௌசௌ குழம்பு கெட்டியாக இருக்கும் என்பதால் இட்லி, தோசைக்கு கூட சைட் டிஷ் ஆக தொட்டுக் கொள்ளலாம். அல்லது சாதத்திற்கு குழம்பாகவும் ஊற்றி பிசைந்து சாப்பிடலாம். காரக்குழம்பு, வத்த குழம்பு போன்றவற்றுக்கு கூட்டாகவும் வைத்து சாப்பிடலாம். இப்படி எல்லா வகையிலும் செய்து சாப்பிடக்கூடிய இந்த சௌசௌ குழம்பு எப்படி செய்வது? என்பதை நாமும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

chow-chow

சௌசௌ குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
வறுத்து அரைக்க: மிளகு – ஒரு டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், மல்லி விதை – ஒரு டேபிள்ஸ்பூன், கிராம்பு – 4, பட்டை – 2, வர மிளகாய் – 2. தேங்காய்த் துருவல் – 2 டேபிள் ஸ்பூன், பெரிய தக்காளி – 2, பெரிய வெங்காயம் – 2, சௌசௌ – ஒன்று, எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, பச்சை மிளகாய் – 2, மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, கொத்தமல்லித்தழை – சிறிதளவு.

- Advertisement -

சௌசௌ குழம்பு செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு மீடியம் சைஸ் சௌசௌ ஒன்றை எடுத்துக் கொண்டு அதில் மேல் தோலை சீவி துண்டு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் தேவையான காய்கறிகளை நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இப்போது வறுத்து அரைக்க தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு அடுப்பை பற்ற வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு வாணலியை வைத்து மிளகு, சீரகம், மல்லி விதை, கிராம்பு, பட்டை, வர மிளகாய் ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு லேசாக வறுக்க வேண்டும். மிதமான தீயில் வைத்து வறுக்கவும்.

chow-chow-kuzhambu3

வறுத்து எடுத்தவற்றை நன்கு ஆறிய பின் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி அதில் சேர்த்துக் கொள்ளுங்கள். இவற்றுடன் தேங்காய்த் துருவல், பழுத்த தக்காளி துண்டுகள் சேர்த்து நன்கு நைசாக கெட்டியாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்து எடுத்த இந்த விழுதை ஓரமாக வைத்துவிட்டு மீண்டும் அடுப்பை பற்ற வைத்து அதே வாணலியில் ஒரு இரண்டு டேபிள்ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள்.

- Advertisement -

கடுகு பொரிந்து வந்ததும் கருவேப்பிலை மற்றும் பச்சை மிளகாயை கீறி சேர்த்து தாளியுங்கள். பின்னர் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதம் வதங்கி வந்த உடன் வெட்டி வைத்துள்ள சௌசௌ துண்டுகளை சேர்த்து வதக்க வேண்டும். சௌசௌ தண்ணீர் விடும் எனவே தண்ணீர் சேர்க்க தேவையில்லை அப்படியே மூடி வைத்து 5 நிமிடம் காத்திருங்கள். ஐந்தே நிமிடத்தில் சட்டென சூப்பராக வெந்திருக்கும். பின்னர் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

chow-chow-kulambu

இவை கொதித்து வரும் சமயத்தில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து நன்கு எண்ணெய் தெளிய கொதிக்க விட வேண்டும். மிக்ஸி ஜாரை கழுவிய தண்ணீரையும் ஊற்றி கொள்ளுங்கள். எண்ணெய் தெளிய மேலே கெட்டியாக குழம்பு கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்து விட வேண்டியது தான். பின்னர் மேலே மல்லித்தழையை பொடியாக நறுக்கி தூவி பரிமாறலாம். ரொம்ப ரொம்ப சுலபமாக செய்யக் கூடிய இந்த சௌசௌ குழம்பு ரொம்பவே அற்புதமான சுவையில் இருக்கும். இதே முறையில் நீங்களும் செய்து உங்கள் வீட்டில் இருக்கும் அனைவரையும் அசத்தி விடுங்கள்.

- Advertisement -