சட்னி அரைக்க வெங்காயம், தக்காளி, தேங்காய் எதுவுமே இல்லையா? அப்படின்னா இந்த சட்னிய இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க!

kadalai-paruppu-chutney
- Advertisement -

இட்லி, தோசைக்கு திடீரென தொட்டுக் கொள்ள சட்னி அரைக்க எதுவுமே வீட்டில் இல்லையா? வெங்காயம், தக்காளி, தேங்காய் இது போன்ற பொருட்கள் இல்லாமல் ஒரு சட்னியை வைப்பது அவ்வளவு எளிதானது அல்ல. ஆனால் இந்த முறையில் நீங்கள் இந்த எந்த பொருளுமே இல்லாமல் சூப்பரான சுவையில் சட்னியை நொடியில் அரைத்து விடலாம். வெறும் பருப்புகளையும், கடலைகளையும் வைத்து செய்யும் இந்த சட்னி அலாதியான சுவையைக் கொடுக்கும். எனவே நீங்களும் ஒருமுறை இப்படி சட்னி அரைத்து பாருங்க! இந்தச் சட்னியை எப்படி அரைப்பது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து பதிவை நோக்கி பயணிப்போம்.

chutney5

சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
பூண்டு பற்கள் – 5, சமையல் எண்ணெய் – தேவையான அளவு, கடலை பருப்பு – 2 டேபிள் ஸ்பூன், உளுத்தம் பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், வேர்கடலை – மூன்று டேபிள் ஸ்பூன், பொட்டுக் கடலை – 2 டேபிள்ஸ்பூன், வர மிளகாய் – 5, உப்பு – தேவையான அளவு, புளி – ஒரு துண்டு, தாளிக்க: கடுகு – ஒரு டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து.

- Advertisement -

சட்னி செய்முறை விளக்கம்:
முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் முதலில் பூண்டு பற்களை துண்டுகளாக்கி லேசாக பச்சை வாசம் போக வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதே எண்ணெயில் கடலைப் பருப்பை போட்டு வறுக்க வேண்டும். கடலைப் பருப்பு இலேசாக வறுபட்டவுடன் உளுந்தம் பருப்பு போட்டு பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

inji-chutney2

கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு ரெண்டு பருப்புகளும் நன்கு பொன்னிறமாக வெந்து வரும் சமயத்தில் வேர்கடலையை சேர்க்க வேண்டும். வேர்க்கடலை பச்சை வேர்கடலையாக இருந்தாலும் பரவாயில்லை. வறுக்காத பச்சை வேர்க்கடலையை தோல் கூட நீக்க தேவையில்லை. அப்படியே சேர்த்து நன்கு வறுக்க வேண்டும். அந்த எண்ணையின் சூட்டிலேயே வேர்க்கடலை ஆனது நன்கு வெந்து விடும்.

- Advertisement -

பின்னர் பொட்டுக்கடலையும் சேர்த்து வறுக்க வேண்டும். இந்த எல்லா பருப்புகளும் நன்கு ஒரு சேர வறுபட்டு வெந்த பிறகு அதனுடன் ஐந்து வரமிளகாய்களைகள் காம்பு நீக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். மிளகாய் உங்கள் காரத்திற்கு ஏற்ப கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம். பின்னர் இந்த சட்னிக்கு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

ulunthu-chutney

ஒரு துண்டு புளி சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த சட்னிக்கு புளி சேர்த்தால் தான் சுவை நன்றாக இருக்கும் எனவே இதனை தவிர்த்து விடாதீர்கள். பின்னர் நீங்கள் விருப்பப்பட்டால் தேங்காய் துண்டுகளையும் சேர்க்கலாம். இல்லையென்றால் விட்டுவிடலாம். ஒருமுறை நன்கு வதக்கிய பின்னர் அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். இவை நன்கு ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்த சட்னிக்கு இப்பொழுது ஒரு சிறிய தாளிப்பு கொடுக்க வேண்டியது தான். ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் ஒரு கொத்து கறிவேப்பிலையை கழுவி உருவி சேர்த்து தாளித்து கொட்ட வேண்டியது தான். ரொம்ப ரொம்ப சுலபமாக செய்யக்கூடிய இந்த சட்னியை நீங்களும் இதே முறையில் செய்து பார்த்து வீட்டில் இருக்கும் அனைவரையும் அசத்தி விடுங்கள்.

- Advertisement -