ஹோட்டல் சுவையில் சூப்பரான தேங்காய் சட்னி அரைக்க இந்த 1 பொருளும் சேர்த்துக் கொண்டால் போதுமே!

coconut-chutney-recipe
- Advertisement -

எல்லோருக்குமே இட்லி, தோசையுடன் சுவையான தேங்காய் சட்னி வைத்து கொடுத்தால் ரொம்பவே பிடிக்கும். விதவிதமான தேங்காய் சட்னி வகைகளில் ஹோட்டல் சுவையில் இருக்கும் கெட்டியான தேங்காய் சட்னிக்கு இந்த ஒரு பொருளும் சேர்ப்பது தான் ருசியை அதிகரிக்கச் செய்கிறது. வெறும் தேங்காயுடன் பொட்டுக்கடலை, மிளகாய் சேர்த்து அரைத்தால் போதாது! இதே போல நீங்களும் கூடுதல் பொருட்களை இதே அளவுகளில் போட்டு அரைத்து செய்து கொடுத்துப் பாருங்கள். இன்னும் கூடுதலாக இரண்டு இட்லி, தோசை உள்ளே இறங்கும். அந்த அளவிற்கு ருசியை அதிகரிக்க செய்யக் கூடிய அந்த ரகசிய பொருளென்ன? சுவையான தேங்காய் சட்னியை நாமும் எப்படி வீட்டில் அரைப்பது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

தேங்காய் சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
தேங்காய் – அரை மூடி, உடைத்த கடலை – கால் கப், பச்சை மிளகாய் – ஒன்று, வர மிளகாய் – 1, இஞ்சி – ஒரு சிறு துண்டு, சின்ன வெங்காயம் – 5, உப்பு – தேவையான அளவு, தாளிக்க: கடுகு – கால் டீஸ்பூன், உளுந்து – கால் டீஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, வர மிளகாய் – ஒன்று.

- Advertisement -

தேங்காய் சட்னி செய்முறை விளக்கம்:
முதலில் தேங்காய் அரை மூடி அளவிற்கு எடுத்து அதனை பூப்போல துருவி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் தேவையான எல்லாப் பொருட்களையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த தேங்காய் சட்னி அரைப்பதற்கு மிக முக்கியமான பொருள் சின்ன வெங்காயம் தான். எனவே இதனை தவிர்க்க வேண்டாம்.

coconut-chutney0

ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் துருவி வைத்துள்ள தேங்காய் துருவலுடன் அரை கப் அளவிற்கு பொட்டு கடலை சேர்த்துக் கொள்ளுங்கள். முழு பொட்டு கடலையாக இருந்தால் இன்னும் சூப்பராக இருக்கும். பொட்டு கடலைக்கு பதிலாக வேர்கடலை சேர்த்தால் சுவையான வேர்க்கடலை சட்னி இதே முறையில் தயாராகி விடும்.

- Advertisement -

இவற்றுடன் ஒரு சிறு துண்டு இஞ்சி, 5 தோல் உரித்து வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் தேவையான அளவிற்கு உப்பு போட்டுக் கொள்ளுங்கள். ஒரு பச்சை மிளகாய், ஒரு வர மிளகாய் சேர்த்துக் கொள்ளுங்கள். பச்சை மிளகாய், வர மிளகாய் இரண்டும் சேரும் பொழுது அது இன்னும் கூடுதல் சுவையை கொடுக்கும். பின்னர் மிக்ஸியை இயக்கி தேங்காய் சட்னியை நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

coconut-chutney

பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு தாளிப்பு கரண்டியை வையுங்கள். தாளிக்கத் தேவையான அளவிற்கு எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்து வரும் பொழுது கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்க வேண்டும். உளுந்து பொன்னிறமாக வறுத்து வந்ததும் ஒரு கொத்து கறிவேப்பிலை, கொஞ்சம் ஜீரகம், ஒரு வர மிளகாயை கிள்ளி சேர்த்து சட்னியுடன் தாளித்துக் கொட்டி சுடச்சுட இட்லி, தோசையுடன் சாப்பிட்டுப் பாருங்கள், அவ்வளவு ருசியாக இருக்கும். இதே முறையில் நீங்களும் முயற்சி செய்து பார்த்து உங்கள் வீட்டில் இருக்கும் அனைவரின் மனதிலும் இடம் பிடித்து விடலாமே!

- Advertisement -