குக்கரில் சுவையான தக்காளி சாதம் செய்வது இவ்வளவு ஈஸியா? இப்படி வித்தியாசமாக தக்காளி சாதம் செய்தால் தின்னத் தின்னத் திகட்டாது.

cooker-tomato-rice1
- Advertisement -

தக்காளி சாதம் செய்முறை என்பது பல வகைகளில் செய்யலாம். அதில் குறிப்பாக குக்கரில் செய்யும் தக்காளி சாதம் அனைவருக்கும் மிகவும் பிடித்தமானதாக இருக்கும். தக்காளி சாதத்தை குக்கரில் செய்தால் சாப்பிடுவதற்கு பிரியாணி போலவே சுவையாக இருக்கும். இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொட்டுக்க கூட எதுவுமே கேட்க மாட்டாங்க.. சாப்பிட்டுக் கொண்டே இருப்பாங்க. குறைவான பொருட்களையும், ஆரோக்கியம் தரும் பொருட்களையும் வைத்து குக்கரில் சுலபமாக பத்தே நிமிடத்தில் எப்படி வித்யாசமான தக்காளி சாதம் செய்வது? என்பதை அறிய நீங்களும் தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

தக்காளி

தக்காளி சாதம் செய்ய தேவையான பொருட்கள்:
பெரிய தக்காளி – 5, பெரிய வெங்காயம் – 3, மல்லித்தழை – ஒரு கைப்பிடி, கறிவேப்பிலை – ஒரு கொத்து, வெந்தயக் கீரை – ஒரு கைப்பிடி, புதினா இலைகளை – ஒரு கைப்பிடி, சோம்பு, சீரகம் – தலா அரை டீஸ்பூன், ஏலக்காய், பட்டை, கிராம்பு – தலா ஒன்று, பச்சை மிளகாய் – 3, அரிசி – 2 ஆழாக்கு, இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவையான அளவிற்கு.

- Advertisement -

தக்காளி சாதம் செய்முறை விளக்கம்:
முதலில் அரிசியை இரண்டு ஆழாக்கு அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். 2 ஆழாக்கு என்பது அரை கிலோ அளவிற்கு வரும். ஆறு பேர் தாராளமாக இந்த சாதத்தை பகிர்ந்து சாப்பிடலாம். அரிசியை நன்கு களைந்து ஊற வைத்துக் கொள்ளுங்கள் அதற்குள் வெட்டி வைக்க வேண்டிய காய்கறிகளை வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். மல்லித்தழை, புதினா இலை மற்றும் வெந்தயக் கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

vendhaya-keerai

பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் குக்கர் ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் தாளிக்க வேண்டிய மசாலா பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும். கிராம்பு, சீரகம், பட்டை, லவங்கம், சோம்பு, ஏலக்காய் ஆகியவற்றை தாளித்தம் செய்யுங்கள். பின்னர் ஒரு கொத்து கறிவேப்பிலை போட்டு, பச்சை மிளகாய்களை கீறி சேர்த்துக் கொள்ளுங்கள். பின் நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள்.

- Advertisement -

வெங்காயம் பொன்னிறமாக வதங்கி வரும் சமயத்தில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இஞ்சி பூண்டு பேஸ்ட் பச்சை வாசம் போனதும், தக்காளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். தக்காளி நன்கு மைய வதங்கியதும் அலசி வைத்துள்ள கீரைகளை சேர்த்து மீண்டும் நன்கு வதக்க வேண்டும். கீரை சுருள வதக்கி வரும் சமயத்தில் அதில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள், தேவையான அளவிற்கு உப்பு ஆகியவற்றை சேர்த்து ஒருமுறை நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

cooker-tomato-rice

2 நிமிடம் நன்கு வதங்கி மசாலா வாசம் போனதும் ஊற வைத்த அரிசியை வடிகட்டி அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அரிசியையும், மசாலா கலவைகளையும் சேர்த்து நன்கு ஒரு இரண்டு நிமிடத்திற்கு அப்படியே கிண்டிக் கொண்டே இருங்கள். அதன் பிறகு எந்த அளவிற்கு அரிசியை எடுத்தீர்களோ, அதே அளவில் இரண்டு பங்கு தண்ணீர் ஊற்ற வேண்டும் 2 ஆழாக்கு அரிசிக்கு, 4 ஆழாக்கு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 3 விசில் விட்டு திறந்து பார்த்தால் சுவையான வித்தியாசமான தக்காளி சாதம் தயார் ஆகிவிட்டிருக்கும். நீங்களும் இது போல் வித்தியாசமான சுவையுடன் கூடிய ஆரோக்கியமான தக்காளி சாதம் ஒரு முறை செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -