வீட்டில் காய்கறியே இல்லையா? சட்டென 10 நிமிடத்தில் இந்த ஆரோக்கியம் மிகுந்த குழம்பை நீங்களும் ஒருமுறை செய்து பாருங்கள்! சப்புக் கொட்டிச் சாப்பிடுவார்கள்.

karuveppilai-kuzhambu2
- Advertisement -

கமகமக்கும் கருவேப்பிலை மணத்துடன் கெட்டியான குழம்பும், சுடச்சுட சாதமும் இருந்தால் ஒரு குண்டான் சாப்பாடு இருந்தால் கூட நமக்கு பத்தவே பத்தாது. காய்கறிகள் இல்லாத சமயங்களில் சட்டென கறிவேப்பிலையை உருவிப் போட்டு குழம்பு வைத்துச் சாப்பிட்டுப் பார்த்தால் அவ்வளவு அருமையாக இருக்கும். மேலும் கறிவேப்பிலையில் இருக்கும் சத்துக்களும், நமக்கு முழுமையாக வந்தடையும். எனவே அடிக்கடி இந்த குழம்பை சமைத்து பார்க்கலாம், ருசி மிகுந்த கருவேப்பிலை குழம்பு எப்படி செய்வது? என்பதை நாமும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

karuvepilai

கருவேப்பிலை குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
வறுத்து அரைக்க: சீரகம் – அரை டீஸ்பூன், மிளகு – அரை டீஸ்பூன், பூண்டு பல் – 4, பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 1, கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி நிறைய, தேங்காய் துருவல் – அரை கப், உப்பு – தேவையான அளவு, தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், பெருங்காயத் தூள் – 2 சிட்டிகை, சின்ன வெங்காயம் – 15, பூண்டு பற்கள் – 10, மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன், தனியாத் தூள் – ஒரு டீஸ்பூன், குழம்பு தூள் – ஒரு டீஸ்பூன், புளி – எலுமிச்சை அளவு.

- Advertisement -

கறிவேப்பிலை குழம்பு செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு எலுமிச்சை பழம் அளவிற்கு புளியை அரை கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். இப்போது வறுத்து அரைக்க ஒரு வாணலியை அடுப்பில் வைத்து பற்ற வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் மிளகு, ஜீரகம், நான்கு பல் பூண்டு தோலுரித்து சேர்த்துக் கொள்ளுங்கள். இவை நன்கு வறுபட்டதும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்குங்கள். பின்னர் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளித் துண்டுகளைச் சேர்த்து வதக்குங்கள்.

karuveppilai-kuzhambu

தக்காளி மற்றும் வெங்காயம் நன்கு வதங்கி வர ஒரு கைப்பிடி நிறைய பச்சையாக பிரஷ்ஷாக இருக்கும் கருவேப்பிலைகளை நன்கு கழுவி சுத்தம் செய்து பின்னர் சேர்த்துக் கொள்ளுங்கள். கருவேப்பிலை பச்சை வாசம் போக நன்கு வதங்கியதும் துருவி வைத்துள்ள தேங்காய் துருவல் அரை கப் அளவிற்கு சேர்த்து ஒருமுறை நன்கு கலந்து விடுங்கள். பின்னர் அடுப்பை அணைத்து விட்டு அப்படியே ஆற விட்டு விடுங்கள். நன்கு ஆறிய பின்பு மிக்ஸியில் சேர்த்து நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் அடுப்பை பற்ற வைத்து வாணலியை வைத்து கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். பின்னர் சீரகம், உளுந்து, பெருங்காயத் தூள் ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். பிறகு தோல் உரித்து வைத்துள்ள பூண்டு பற்கள் மற்றும் தோல் உரித்து வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். சின்ன வெங்காயம் சேர்க்கும் பொழுது கருவேப்பிலை குழம்பு ரொம்பவே ருசியாக இருக்கும்.

karuveppilai-kuzhambu1

இவை நன்கு வதங்கிய பின்பு தேவையான அளவிற்கு உப்பு போட்டு கலந்து கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் அரைத்து வைத்துள்ள மசாலாவையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது ஊற வைத்துள்ள புளியை நன்கு கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், குழம்பு மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசம் போக நன்கு பிரட்டி விடுங்கள். பின்னர் நீங்கள் ஊற வைத்து கரைத்த புளி தண்ணீரை சேர்த்துக் கொள்ளுங்கள். புளி கரைத்த தண்ணீர் மற்றும் மிக்ஸி ஜாரை கழுவிய தண்ணீரை மட்டும் சேர்த்தால் போதும். அதிகம் தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியமில்லை! குழம்பு கொதித்து கெட்டியான பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து சுடச்சுட சாதத்துடன் பரிமாற வேண்டியது தான் இதே முறையில் நீங்களும் செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -