கொத்தமல்லி போட்டு இப்படி ஒருமுறை தக்காளி சட்னி வச்சு பாருங்க திரும்ப திரும்ப கேட்டுட்டே இருப்பாங்க!

kothamalli-kara-chutney
- Advertisement -

தினமும் ஒரே விதமான சட்னி செய்பவர்களுக்கு இந்த கொத்தமல்லி தக்காளி சட்னி ரொம்பவே வித்தியாசமான சுவையைக் கொடுக்கும். புளிப்பும், காரமும் நிறைந்துள்ள இந்த சட்னி இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள சைட் டிஷ்ஷாக வைத்து கொடுத்தால் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம். குறிப்பாக குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடக் கூடிய இந்த கொத்தமல்லி தக்காளி சட்னி எப்படி செய்வது? என்பதை இந்த பதிவின் மூலம் கற்றுக் கொள்வோம்.

கொத்தமல்லி தக்காளி சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
கொத்தமல்லி – ஒரு கைப்பிடி, தக்காளி – 2, பெரிய வெங்காயம் – 2, இஞ்சி – ஒரு சிறு துண்டு, வர மிளகாய் – 3, புளி – சிறு நெல்லிக்காய் அளவு, உளுந்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன், கடலைப் பருப்பு – ஒரு டீஸ்பூன்.

- Advertisement -

கொத்தமல்லி தக்காளி சட்னி செய்முறை விளக்கம்:
கொத்தமல்லி தக்காளி சட்னி செய்ய முதலில் கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து மெல்லிய தண்டுகளுடன் கூடிய இலைகளை மட்டும் எடுத்து ஒன்றிரண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் தக்காளி மற்றும் வெங்காயம் போன்றவற்றை சுத்தம் செய்து தோல் உரித்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இஞ்சியை தோல் நீக்கி ஒரு சிறு புளி கொட்டை அளவிற்கு எடுத்துக் கொண்டால் போதும். இஞ்சியை அதிகம் சேர்த்தால் இஞ்சி வாசனை சட்னியை கெடுத்துவிடும். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்து கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள்.

எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் உளுந்தம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பு ஆகிய பருப்புகளை சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளுங்கள். இவை நன்கு பொன்னிறமாக வறுபட்டதும், காய்ந்த மிளகாய், புளி, இஞ்சி ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். இவை லேசாக வதங்கிய பின்பு பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் கண்ணாடி பதம் வரை நன்கு வதங்கி வரும் பொழுது தக்காளி துண்டுகளை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

- Advertisement -

கடைசியாக எடுத்து வைத்துள்ள கொத்தமல்லி தழைகளை போட்டு ஒருமுறை பிரட்டி விடுங்கள். வெங்காயம், தக்காளி அனைத்தும் மசிய வதங்கி வந்த பின்பு அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். இப்போது ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்து இதனை அவற்றுடன் சேர்த்து நன்கு நைசாக அரைக்காமல் கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் தாளிக்க ஒரு தாளிக்கும் கரண்டியை அடுப்பில் வைத்து பற்ற வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் சிறிதளவு உளுத்தம் பருப்பு, சிறிதளவு சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு கொத்து கறிவேப்பிலையை உருவி சேர்த்து தாளித்து சட்னியுடன் போட்டு இறக்கினால் அற்புதமான சுவையுள்ள கொத்தமல்லி தக்காளி சட்னி ரெடி! இதே முறையில் நீங்களும் ஒருமுறை வீட்டில் செய்து வீட்டில் இருக்கும் அனைவரின் மனதிலும் இடம் பிடித்து விடலாமே!

- Advertisement -