மணக்க மணக்க நெல்லை சாம்பார் புளி சேர்க்காமல் இப்படி ஒருமுறை செஞ்சி பாருங்க, நீங்களா சாம்பார் செஞ்சிங்கன்னு எல்லாரும் ஆச்சரியப்படுவாங்க!

sambar1
- Advertisement -

நெல்லை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் இருக்கும் மக்கள் பெரும்பாலும் சாம்பார் வைக்க புளியை பயன்படுத்துவது இல்லை. ஆனால் சென்னை வாசிகளுக்கு புளி இல்லாமல் சாம்பார் வைக்கவே தெரியாது. புளி சேர்க்காமல் தேங்காய் அரைத்து விட்டு இப்படி ஒரு முறை நீங்களும் சாம்பார் வச்சு பாருங்க, வீடே மணமணக்கும். இந்த சாம்பார் நீங்களா வைத்தீர்கள்? என்று உங்கள் வீட்டினர் ஆச்சர்யப்பட்டு போவார்கள். சுவையான நெல்லை சாம்பார் எளிமையாக எப்படி செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

சாம்பார் செய்ய தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு – 100 கிராம், சின்ன வெங்காயம் – 15, பெரிய தக்காளி – ஒன்று, பச்சை மிளகாய் – 3, பூண்டு – 2 பல், உப்பு – தேவையான அளவு, காய்கறி – விருப்பத்திற்கு ஏற்ப, சீரகம் – ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், தேங்காய் – கால் மூடி, பெருங்காயத் தூள் – கால் டீஸ்பூன், தாளிக்க: கடுகு – கால் டீஸ்பூன், உளுந்து – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, நறுக்கிய – வெங்காயம் சிறிதளவு, நறுக்கிய – மல்லித்தழை சிறிதளவு.

- Advertisement -

சாம்பார் செய்முறை விளக்கம்:
முதலில் 100 கிராம் துவரம் பருப்பை நன்கு சுத்தம் செய்து கழுவி ஊற வைத்துக் கொள்ளுங்கள். 15 நிமிடம் நன்கு ஊறியதும் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். ஒரு டம்ளர் அளவிற்கு தண்ணீர் சேர்த்து ஊற வைத்த துவரம் பருப்பை வடிகட்டி சேர்த்துக் கொள்ளுங்கள். பாதி அளவிற்கு பருப்பு வெந்ததும், தோல் உரித்து வைத்துள்ள சின்ன வெங்காயம், பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி துண்டுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். வெங்காயத்தில் கொஞ்சம் மட்டும் தனியாக தாளிக்க எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் உங்கள் காரத்திற்கு ஏற்ப மீடியம் சைஸ் பச்சை மிளகாய் 3, இரண்டு பூண்டு பற்கள் சேர்த்து, உங்களுக்கு விருப்பமான காய்கறிகளை நறுக்கி சேர்த்து கொள்ளுங்கள். இப்போது காய்கறிகள் அனைத்தும் நன்கு வெந்து வர தேவையான அளவிற்கு உப்பு மற்றும் தண்ணீரை சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதில் கால் மூடி அளவிற்கு சிறிய அளவிலான தேங்காயிலிருந்து தேங்காயை துண்டுகளாக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் சீரகம், கொஞ்சம் மஞ்சள் தூள் போட்டு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த விழுதினை சாம்பாருடன் சேர்க்க வேண்டும். பின்னர் பச்சை வாசம் போக கொஞ்ச நேரம் கொதித்து சாம்பார் சரியான பதத்திற்கு வந்ததும், அடுப்பை அணைத்து நறுக்கிய கொத்தமல்லிதழை தூவி கொள்ளுங்கள்.

பின்னர் ஒரு ஒரு தாளிப்பு கரண்டியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு நன்கு பொரிந்ததும் உளுந்து சேர்த்து கொள்ளுங்கள். பின்னர் ஒரு கொத்து கறிவேப்பிலை, கொஞ்சம் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து கொள்ளுங்கள். அதனுடன் நீங்கள் எடுத்து வைத்துள்ள கொஞ்சம் வெங்காயத்தை சேர்த்து நன்கு கருகி போகாமல் பொன்னிறமாக சிவக்க வறுக்க வேண்டும். வெங்காயம் தாளிக்கும் மணம் நன்றாக வீச துவங்கும். அந்த சமயத்தில் அடுப்பை அணைத்து தாளித்து கொட்டுங்கள். மணக்க மணக்க சுவையான அரைத்து விட்ட சாம்பார் தயார் இதே முறையில் நீங்களும் ஒருமுறை செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -