இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள சுவையான தக்காளி டால். ஒருமுறை இவ்வாறு சமைத்து கொடுத்து பாருங்கள். தட்டு நிறைய 10 தோசை கொடுத்தாலும் பத்தாது.

sambar
- Advertisement -

காலை மாலை இருவேளையும் வீட்டில் எப்பொழுதும் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி இது போன்ற உணவுகளை தான் இன்றைய தலைமுறையினர் விரும்பி சாப்பிடுகிறார்கள். முந்தைய காலத்தில் எல்லாம் காலையில் சாதம் வடித்து குழம்பு வைத்தால் அதனையே மூன்று வேளையும் சாப்பிட்டு நிம்மதியாக உறங்கி விடுவார்கள். ஆனால் இன்றைய தலைமுறையினருக்கு காலை, மதியம், இரவு என்று மூன்று வேளையும் விதவிதமாக சமைத்து கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இவ்வாறு இட்லி, தோசைக்குத் தொட்டுக்கொள்ள சுலபமாகவும், சுவையாகவும் இருக்க கூடிய தக்காளி பருப்பு டால் எப்படி செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

Idli

தேவையான பொருட்கள்:
துவரம்பருப்பு – ஒரு டம்ளர், பெரிய தக்காளி – 3, வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 3, பூண்டு – 10 பல், நல்லெண்ணெய் – 2 ஸ்பூன், நெய் – ஒரு ஸ்பூன், தனி மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன், பெருங்காயத் தூள் – அரை ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், வெந்தயம் – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, புளி – நெல்லிக்காய் அளவு கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து, உப்பு – முக்கால் ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் குக்கரில் ஒரு டம்ளர் துவரம்பருப்பை சேர்த்து நன்றாகக் கழுவி, தண்ணீர் ஊற்றி, சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் தக்காளி மற்றும் வெங்காயத்தை நான்கு துண்டுகளாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைத்து விட வேண்டும். அதன்பின் நெல்லிக்காய் அளவு புளியை அரை டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து நன்றாக கரைத்து புளித்தண்ணீர் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

cooker2

அதன்பின் துவரம்பருப்புடன் அரிந்து வைத்துள்ள தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் இவற்றை சேர்த்து அதனுடன் அரை ஸ்பூன் மஞ்சள்தூள், அரை ஸ்பூன் பெருங்காயத்தூள், ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் மற்றும் முக்கால் ஸ்பூன் உப்பு இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, மூடி போட்டு குக்கரில் 3 விசில் வரும் வரை பருப்பை வேக வைக்க வேண்டும்.

- Advertisement -

அதன் பின் குக்கரை இறக்கி வைத்து குக்கரில் பிரஷர் குறைந்ததும் மத்து வைத்து பருப்பை நன்றாகக் கடைந்துவிட வேண்டும். அதன் பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கடுகு, சீரகம், வெந்தயம் போட்டு அவை நன்றாக பொரிந்ததும் காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். அதன் பின் கடைந்து வைத்துள்ள பருப்பு இவற்றுடன் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.

siru-paruppu-sambar

பின்னர் கரைத்து வைத்துள்ள புளி தண்ணீரை இதனுடன் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து இறுதியாக அரை ஸ்பூன் நெய் மற்றும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி வைத்தால் போதும். கமகம வாசத்துடன் தக்காளி பருப்பு டால் தயாராகிவிடும். இட்லி மற்றும் தோசைக்கு தொட்டுக் கொள்ள இந்த தக்காள் டாலை சேட்டு பரிமாறி கொடுங்கள். தின்ன தின்ன திகட்டாமல் எத்தனை இட்லி தோசை கொடுத்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம்.

- Advertisement -