ரொம்ப ரொம்ப ஈஸியா சுவையா தக்காளி இஞ்சி சட்னி அரைப்பது எப்படி? புதுவிதமான சுவையில் இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிட புதுவிதமான சட்னி ரெசிபி.

thakkali-chutney
- Advertisement -

இட்லி தோசைக்கு தக்காளியை வைத்து விதவிதமாக எத்தனையோ வகைகளில் சட்னி செய்திருப்போம். ஆனால், கொஞ்சம் வித்தியாசமான முறையில் இஞ்சி சேர்த்த தக்காளி சட்னி எப்படி அரைப்பது என்பதை பற்றி தான் இன்றைய சமையல் குறிப்பில் தெரிந்து கொள்ளப் போகின்றோம். காரசாரமான இந்த சட்னிக்கு தொட்டு சாப்பிட பத்து இட்லி இருந்தாலும் பத்தாது என்று சொல்லலாம். வாங்க நேரத்தை கலக்காமல் இன்ட்ரஸ்ட் ஆன இந்த சட்னியை எப்படி அரைப்பது என்று பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்வோம்.

செய்முறை

இதற்கு முதலில் மூன்று இன்ச் அளவு இஞ்சியை தோல் சீவி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். வறுத்த வேர்க்கடலை 2 டேபிள் ஸ்பூன் அளவு தேவை. வேர்க்கடலையை தோல் உரித்து வைத்துக் கொள்ளுங்கள்.  வறுக்காத வேர்க்கடலையாக இருந்தால் ஒரு கடாயில் போட்டு நன்றாக வறுத்து தோல் உரித்து ஆற வைத்துக் கொள்ளவும்.

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்து 1 ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய இஞ்சி துண்டுகள், வரமிளகாய் 3, நெல்லிக்காய் அளவு புளியை போட்டு நன்றாக வதக்குங்கள். இஞ்சியின் பச்சை மனம் நீங்கி வரும்போது, 200 கிராம் அளவு நறுக்கிய தக்காளி பழங்களை இதில் போட்டு வதக்க வேண்டும். தக்காளியின் பச்சை வாடை நீங்க வதங்கி வந்த உடன் அடுப்பை அணைத்து இதை நன்றாக ஆற வைத்து விடுங்கள்.

ஆறிய இந்த விழுதை மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு உப்பு போட்டு, சட்னி அரைத்துக் கொள்ளவும். கொஞ்சம் திக்காக இந்த சட்னி இருக்கட்டும். இதற்கு ஒரு தாளிப்பு கொடுக்கலாம். இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெயில் கடுகு, உளுந்து, கருவேப்பிலை, பெருங்காயம், தாளித்து அடுப்பை அணைத்துவிட்டு எண்ணெய் லேசாக சூடு ஆறிய பின்பு மிளகாய்த்தூள் 1 ஸ்பூன் அந்த தாளிப்பு எண்ணெயிலேயே போட்டு இதை அப்படியே அரைத்து வைத்திருக்கும் சட்னியில் கொட்டி கலந்து பரிமாறி பாருங்கள். (எண்ணெயில் மிளகாய் தூள் போடுவது உங்களுடைய விருப்பம் தான். தேவை என்றால் போட்டுக் கொள்ளுங்கள். இல்லை என்றால் அதை தவிர்த்து விடுங்கள்.)

- Advertisement -

இஞ்சியின் வாசம் வேர்க்கடலையின் வாசம் தக்காளியின் சுவை சேர்த்த இந்த சட்னி ஒரு வித்தியாசமான ருசியை கொடுக்கும். சுட சுட இட்லிக்கு இந்த சட்னியோடு, தேவை என்றால் கொஞ்சம் தண்ணீராக தேங்காய் சட்னி காரசாரமாக வைத்துக் கொள்ளுங்கள். வெள்ளை சட்னிக்கும், இந்த சிவப்பு சட்னிக்கும் செம காம்பினேஷன் ஆக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: இனி தயிர் உரைய காத்திருக்க வேண்டாம் பத்தே நிமிஷத்தில் பாலை தயிராக மாற்ற ஒரு சூப்பர் ட்ரிக்ஸ் இருக்கு. இது போல ஒரு ஐடியா இருக்குன்னு இதுவரைக்கும் தெரியாம போச்சே.

சுட சுட இட்லி, சுட சுட கல் தோசை, பணியாரம் இவைகளுக்கு இது செம சைடிஷ்ங்க. மிஸ் பண்ணாம ரெசிபி ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -