சப்பாத்திக்கு சுவையான தக்காளி‌ தொக்கு பெர்ஃபெக்டா இப்படித்தான் செய்யணும்.

thakkali-thokku
- Advertisement -

தக்காளி தொக்கு தானே. இது யாருக்குத்தான் செய்ய தெரியாது. எல்லோர் வீட்டிலும் தக்காளி தொக்கு செய்வோம். ஆனால், சுவையாக சரியான அளவில் வெங்காயம் தக்காளியை எந்த அளவுகளில் சேர்த்தால் இதனுடைய சுவை சூப்பராக கிடைக்கும். தக்காளி தொக்கை கூட சுவையாக செய்யக்கூடிய கை பக்குவம் ஒரு சில பேருக்கு தான் இருக்கும். ஒரு சில பேர் தக்காளி தொக்கு வைத்தால் புளிக்கும் அல்லது சில பேர் தக்காளி தொக்கு வைத்தால் இனிக்கும். நல்ல ருசியை கொடுக்காது. ருசி தரும் தக்காளி தொக்கு ரெசிபி இதோ உங்களுக்காக.

செய்முறை

இதற்கு நமக்கு மீடியம் சைஸில் இருக்கும் 2 வெங்காயம், மீடியம் சைஸில் இருக்கும் 4 தக்காளி தேவை. இரண்டு வெங்காயத்திற்கு நான்கு தக்காளி என்ற அளவு சரியாக இருக்கும். தக்காளியையும் வெங்காயத்தையும் முடிந்தவரை ஒரே சைசில் எடுத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் சுவை மாறாது. வெங்காயத்தை நைசாக நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும். தக்காளியை சாப்பரில் போட்டு பொடியாக நறுக்கலாம். இல்லையென்றால் கத்தியால் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்து கடுகு 1 ஸ்பூன், போட்டு அது வெடித்து வந்ததும் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வதக்கவும். கருவேப்பிலை 2 கொத்து போட்டுக் கொள்ளுங்கள். வெங்காயம் கண்ணாடி பதம் வரை வதங்கி வந்து, இன்னும் கொஞ்சம் கூடுதலாக வதங்க வேண்டும். அதற்காக பிரவுன் நிறத்திற்கு வெங்காயம் மாறக்கூடாது. அந்த சமயத்தில் நறுக்கிய தக்காளி பழங்களை இதில் போட்டு குழைய குழைய வதக்க வேண்டும்.

தக்காளி பழம் கண்ணுக்கே தெரியக்கூடாது. வெங்காயமும் தக்காளியும் சேர்ந்து மசிந்து இருக்க வேண்டும். அந்த சமயத்தில் மிளகாய் தூள் 2 ஸ்பூன், மல்லித்தூள் 2 ஸ்பூன், மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, போட்டு எல்லா பொருட்களையும் நன்றாக ஒரு முறை கலந்து விடுங்கள். அடுத்து தண்ணீர் 1/2 கப் எடுத்து இந்த வெங்காயம் தக்காளி தொக்கில் ஊற்றி நன்றாக வேக வைக்க வேண்டும்.

- Advertisement -

வெங்காயம் தக்காளியும் நாம் ஊற்றிய தண்ணீரில் நன்றாக வெந்து தொக்கு பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைத்து விட வேண்டும். இப்படி தக்காளி தொக்கு செய்தால் ருசி மிக மிக சுவையாக வரும். கொஞ்சம் தளதளவென இருக்கும்போதே அடுப்பை அணைத்து தேவைப்பட்டால் இதில் இறுதியாக 1/2 ஸ்பூன் சர்க்கரை அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து கலந்து பரிமாறலாம். சுவையெல்லாம் சீராக நமக்கு கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: இப்ப தக்காளி விக்கிற விலைக்கு தக்காளியை சேர்க்காமல் வெங்காயம் வைத்து செய்ற இந்த கார பச்சடிய தெரிஞ்சு வச்சுக்கிட்டீங்கன்னா டிபன் சாப்பாடு என எல்லாத்துக்கும் சமாளிச்சு விடலாம்.

வெறும் தக்காளி தொக்காக இருந்தாலும் அதையும் ஒரு முறைப்படி செய்யும்போது தான் ருசி நமக்கு நிறைவாக கிடைக்கும். வெறும் வெங்காயம் தக்காளியை வணக்கி விட்டு உப்பு காரம் போட்டால் ருசி நிச்சயம் வராது. கூட கொஞ்சம் பாசத்தையும், மேலே சொன்ன ரெசிபியும் சேர்த்து பாருங்கள். வேற லெவல் தக்காளி தொக்கு உங்க வீட்டு சப்பாத்திக்கு பக்கத்துல இருக்கும். ஆனா இப்போ தக்காளியின் விலை கொஞ்சம் அதிகம். அதனால இந்த தக்காளி தொக்கு ரெசிபி இப்ப தேவையான்னு திட்டாதீங்க. விலை குறையும் போது தக்காளி தொக்கு ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -