தீராத தொல்லை தீர குங்கும வழிபாடு

mana kastam
- Advertisement -

வாழ்க்கையில் யாருக்கு தான் கஷ்டமில்லை? யாருக்கு தான் தொல்லைகள் இல்லை? பலருக்கும் தீர்க்கவே முடியாத பல தொல்லைகளும் பிரச்சனைகளும் இருக்கின்றன. ஒரு சிலருக்கு வெளியில் கூட சொல்ல முடியாத அளவிற்கு மனக்கவலைகள் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் மகிஷாசுரமர்த்தினியை நினைத்து குங்குமத்தை வைத்து எப்படி பூஜை செய்வது என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

நம்முடைய கஷ்டங்களை தீர்க்க முன் வரும் தெய்வங்களில் முதன்மையான தெய்வங்களாக விளங்குவது பெண் தெய்வங்களே. அப்படிப்பட்ட பெண் தெய்வங்களில் சந்தமாக இருக்கும் தெய்வங்களும் இருக்கிறார்கள். உக்கிரமாக இருக்கும் தெய்வங்களும் இருக்கிறார்கள். ஒவ்வொரு தெய்வத்தின் குணநலத்திற்கேற்றவாறு பிரார்த்தனைகளை நாம் அவர்களிடம் வைக்க வேண்டும். அப்படி நம்முடைய மனக்கவலைகள் நீக்குவதற்கு நம்முடைய வேண்டுதலை மகிஷாசுரமர்த்தினி இடம் வைக்க வேண்டும்.

- Advertisement -

பல தொல்லைகளை கொடுத்த மகிஷாசுரனை அழித்த மகிஷாசுரமர்த்தினியை நாம் வழிபடுவதன் மூலம் நமக்கு இருக்கக்கூடிய அனைத்து விதமான தொல்லைகளையும் அவள் நீக்குவாள். அப்படிப்பட்ட மகிஷாசுரமர்த்தினியை குங்குமத்தை வைத்து எப்படி வழிபட வேண்டும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.

இந்த வழிபாட்டை நமக்கு மனக்கவலை அல்லது தொல்லைகள், பிரச்சனைகள் ஏற்படும் பொழுது செய்யலாம். யாரிடமும் சொல்ல முடியாத அளவிற்கு கவலை இருக்கும் பொழுது வீட்டிலேயே இந்த பூஜையை செய்து விட வேண்டும். ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சுத்தமான தண்ணீரை ஊற்ற வேண்டும். அதில் குங்குமத்தை போட்டு நன்றாக கரைக்க வேண்டும். சந்தனத்தை கரைக்கும் பொழுது எந்த அளவிற்கு கொல கொலவென்று இருக்குமோ அந்த அளவிற்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இப்பொழுது அந்த பாத்திரத்தை சுற்றி சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும். பிறகு 16 அல்லது 54 செவ்வரளி பூக்களை எடுத்து மகிஷாசுரமர்த்தினியை மனதார நினைத்தவாறு அந்த குங்கும கிண்ணத்திற்குள் ஒவ்வொன்றாக போட்டு அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு அந்த கிண்ணத்திற்கு சாம்பிராணி தூபம் போட்டு, கற்பூரம் காட்டி மகிஷாசுரமர்த்தினியை மனதார நினைத்து இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.

இனிப்பால் செய்யப்பட்ட பொருட்களை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். இதில் ஒரு மடங்குக்கு பதிலாக இரண்டு மடங்கு இனிப்பை சேர்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது ஒரு டம்ளர் அரிசி போட்டு சர்க்கரை பொங்கல் வைப்பதாக இருந்தால் இரண்டு டம்ளர் அளவிற்கு இனிப்பை அதில் சேர்க்க வேண்டும்.

- Advertisement -

பிறகு இந்தக் கிண்ணத்தை அப்படியே எடுத்துக் கொண்டு போய் ஓடுகின்ற நீரில் ஊற்றி விட வேண்டும். அவ்வாறு ஓடும் நீர் இல்லாதவர்கள் மூன்று தெருக்கள் ஒன்றாக சேரும் முச்சந்தியில் ஊற்றிவிட்டு திரும்பி பார்க்காமல் வந்து விட வேண்டும். வீட்டிற்குள் வரும் பொழுது அந்த பாத்திரத்தை சுத்தமாக கழுவி விட்டு கை கால் முகங்களை நன்றாக கழுவி விட்டு உள்ளே வரவேண்டும். இந்த பூஜை செய்த இடத்தையும் துடைத்து விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: குடும்ப கஷ்டம் நீங்க வழிபாடு

இவ்வாறு செய்து வருவதன் மூலம் மகிஷாசுரமர்த்தினியின் அருளால் மனக்கவலைகளும் தீராத தொல்லைகளும் தீரும். நிம்மதி கிடைக்கும்.

- Advertisement -