தீய சக்திகள் துர் தேவதைகள், எதிர்கள் என எதுவும் நீங்கள் இருக்கும் திசை பக்கம் கூட அருகில் கூட வராமல் தடுக்க சரபேஸ்வருக்கு இந்த தீபம் ஏற்றி வழிபட்டாலே போதும்.

- Advertisement -

நரசிம்மர் இரணியனை வதம் செய்த பின்பு கோபம் தனியாமல் உக்கிரமாக இருந்த சமயத்தில் தேவர்கள் அனைவரும் சிவனிடம் உதவி நாடி சென்றதாகவும் அப்போது இவரின் கோபத்தை தணிப்பதற்காக சிவன் எடுத்த அவதாரமே இந்த சரபேஸ்வரர் அவதாரம் என்று சொல்லப்படுகிறது. இந்த சரபேஸ்வரர் இரண்டு முகமும், நான்கு கைகளும், எட்டு கால்களும் கூறிய நகங்களும் உடைய தோற்றத்தைக் கொண்டவர். இத்தனை ஆக்ரோஷமான தோற்றத்தை உடைய சரபேஸ்வரர் தான் தீயவைகளை நீக்கி நம்மை நல்ல முறையில் வாழ வைப்பதற்கான அருளையும் அருள்வார். அந்த வழிபாட்டு முறையை தான் இப்போது ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் கண் திருஷ்டி போன்றவை நீங்க சரபேஸ்வரர் வழிபாடு
பொதுவாகவே இந்த ஆக்ரோஷமான தெய்வங்களை வழிபடுவது கூடாது என்பன போன்ற கருத்துக்கள் நிலவுகிறது. ஆனால் இந்த அவதாரங்களை இவர்கள் எடுத்தது எளிய மக்களை காப்பதற்காகவே இதை நாம் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். ஆகையால் நம்முடைய இன்னல்கள் தீர இவர்களை வணங்கும் போது விரைவிலே அதற்கான பலனையும் பெற முடியும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். அப்படி ஒரு ஆக்ரோஷமான தெய்வம் தான் இந்த சரபேஸ்வரர் அவரை நம்முடைய இன்னல் தீர எப்படி வழிபட வேண்டும் என்று பார்க்கலாம்.

- Advertisement -

நம் வீட்டில் இருக்கும் தீய சக்தி, பிறர் மூலம் ஏவப்பட்டிருக்கும் துர்சக்திகள், கண் திருஷ்டி என எது எந்த கோளாறாக இருப்பினும் அவை அனைத்தும் தூள் தூளாக வேண்டும் எனில் சரபேஸ்வரருக்கு தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இந்த வழிபாடை நீங்கள் எந்த நாளில் வேண்டுமானாலும் தொடங்கலாம். அதற்கு சரபேஸ்வரர் புகைப்படம் ஒன்றை சின்னதாக வாங்கி பூஜறையில் வைத்து வணங்க வேண்டும். அவ்வாறு வணங்கும் போது அவருக்கு 9 அகல் விளக்கு நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை தொடர்ந்து ஒன்பது வாரங்கள் ஏற்றி வரும் போது வீட்டில் இருக்கும் துர் சக்திகள், நம்மை தொடரும் துர்சக்திகள் என அனைத்தும் நீங்கி விடும். உங்கள் வீட்டின் அருகில் சரபேஸ்வரர் ஆலயம் இருந்தால் அங்கு இந்த தீப வழிபாடு செய்யலாம் இல்லாத பட்சத்தில் வீட்டிலேயே செய்யலாம்.

எதிரிகள் தொல்லை நீங்க சரபேஸ்வரர் வழிபாடு
ஒரு மனிதனை வாழவே விடாமல் தடுக்கும் இன்னொரு சக்தி என்றால் அது இன்னொரு மனிதன் என்று தான் சொல்ல வேண்டும். நாம் ஒரு படி முன்னேறி விட்டால் அவர்கள் இரண்டு படி நம்மை இழுத்து கீழே தள்ளி விடுவார்கள். இது போன்ற எண்ணம் உடையவர்களை நாம் அருகிலே வர விடாமல் காக்கக் கூடிய ஒரு தெய்வமெனில் அது சரபேஸ்வரர் தான்.

- Advertisement -

எதிரிகள் தொல்லையிலிருந்து நாம் விடுபட சர்வேஸ்வரருக்கு 9 அகல் தீபம் ராகு காலத்தில் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை வேப்பெண்ணை ஊற்றி தான் ஏற்ற வேண்டும். சரபேஸ்வரர் ஆலயம் இருந்தால் அங்கு தீபம் ஏற்றலாம் அல்லது சிவாலயத்தில் ஏற்றலாம், பெருமாள் கோவிலில் ஏற்றலாம், அதுவும் இல்லையனில் ஆஞ்சநேயர் கோவில் இந்த நான்கு இடத்திலும் கூட சரபேஸ்வரரை நினைத்து இந்த ஒன்பது அகல் தீபத்தை ஏற்றி உங்களுடைய எதிரி தொல்லை நீங்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: தாராளமாக வீட்டில் தங்கம் சேர்ந்து கொண்டே இருக்க வேண்டுமா? பூஜை அறையில் இந்த 1 பூவை மட்டும் வைத்து வழிபாடு செய்தால், நீங்கள் தவறவிட்ட தங்கத்தை கூட மீண்டும் மீட்டு எடுக்கலாம்.

ஆலயமே செல்ல முடியாது அருகில் எதுவும் ஆலயமே இல்லை என்பவர்கள் மட்டும் வீட்டில் சரபேஸ்வரர் புகைப்படத்தை வாங்கி வைத்து அகல் விளக்கில் வேப்பெண்ணை ஊற்றி தீபம் ஏற்றுங்கள். இது ஆலயம் சென்று செய்ய முடியாத பட்சத்தில் மட்டும் தான் செய்ய வேண்டும். நம்முடைய வாழ்க்கையில் பிரதானமான பிரச்சனை இந்த தீய சக்தியும், எதிரிகளின் தொல்லையும் இந்த இரண்டிலிருந்தும் வெளிவர சுலபமான வழிபாட்டு முறை தான். இந்த சரபேஸ்வரர் தீப வழிபாட்டு முறை இந்த முறையில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் சரபேஸ்வரர் நம்பிக்கையுடன் வணங்கி வாழ்க்கையில் தடை இன்றி முன்னேறி நிம்மதியாக வாழலாம்.

- Advertisement -