நாளை(6/3/2021) சனிக்கிழமை ‘தேய்பிறை அஷ்டமி’ இந்த நிற மலரால் பைரவரை அர்ச்சித்தால் உங்கள் கடன் எல்லாம் காணாமல் போகும் தெரியுமா?

kala-bairavar-sevvarali

இந்தப் பிரபஞ்சத்தில் நல்லது என்று ஒன்று இருக்கும் பொழுது, தீயது என்று ஒன்றும் இருக்கும். இரண்டும் சேர்ந்தது தான் இந்த உலகம். அந்த வகையில் தீயசக்திகள் நம்மை சுற்றியும், நம் வீட்டை சுற்றியும் நமக்கு தெரியாமல் உலாவிக் கொண்டிருக்கும். இத்தகைய தீய சக்திகளை அழிக்கக் கூடிய ஆற்றல் கால பைரவருக்கு உண்டு. வீட்டில் அடிக்கடி துர் சம்பவங்கள் நடக்கும் பொழுது, கால பைரவரை வணங்கினால் உடனே உங்கள் பிரச்சனைகள் தீரும். அது மட்டுமல்லாமல் எவ்வளவு கடன்கள் இருந்தாலும், அவை காற்றில் கரைவது போல் கரைந்து விட கால பைரவரை வணங்கி வழிபடலாம்.

swarna-bairavar3

செல்வம் சேர குபேரனுடன், சொர்ண பைரவரை வழிபட்டால் பணமும், தங்கமும் மேலும் மேலும் சேர்ந்து கொண்டே இருக்கும். அடகு வைத்த தங்க நகைகளை மீட்க சொர்ண பைரவரை முறையாக வழிபடலாம். பைரவர்களின் அவதாரத்தில் 64 வகைகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதில் காலபைரவர் முதன்மையானவராக விளங்குகின்றார். அனைத்துக் கோவில்களையும் காலபைரவர் பாதுகாப்பதாக கூறப்படுகிறது. கோவில் நடை சாத்திய பிறகு இவரிடம் சாவியை வைத்த பிறகு தான் கொண்டு செல்வார்களாம்.

கோவிலை காக்கும் காலபைரவர், மனிதர்களையும் இந்த கலியுகத்தில் உண்மையில் காப்பதாக மக்களால் தீவிரமாக நம்பப்பட்டு வருகிறது. இவருக்கு உகந்த மலர்களை கொண்டு அர்ச்சனை செய்யும் பொழுது நாம் வேண்டிய வேண்டுதல்கள் அத்தனையும் அப்படியே பலிக்கும். கால பைரவர் உடைய அருள் பெற அவருடைய வாகனமாக விளங்கும் நாய்களுக்கு உணவு தானம் செய்ய வேண்டும். இரவில் மீந்து போகும் சாப்பாட்டை வீணாக்காமல், தனியாக ஒரு தட்டு வைத்து அதில் நாய்களுக்கு உணவிட்டால் நவக்கிரஹ தோஷங்கள் விலகும்.

Moondram pirai

பைரவரை வழிபட அஷ்டமி நாட்கள் மிகவும் விசேஷமானதாகும். வளர்பிறை அஷ்டமி, தேய்பிறை அஷ்டமி ஆகிய இரண்டு நாட்களும் பைரவருக்கு விசேஷ பூஜைகள் நடைபெறுகிறது. அதில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு வேண்டிய வேண்டுதல்கள் நிறைவேறும். வளர்பிறை அஷ்டமியை விட, தேய்பிறை அஷ்டமிக்கு பைரவர் உடைய சக்திகள் அதீதமானதாக இருக்கும். தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வணங்குபவர்களுக்கு வாழ்வில் தோல்வியே ஏற்படுவதில்லை.

கலியுகத்திற்கு காலபைரவர் என்கிற பெயரும் உண்டு. கலியுகத்தில் காக்கும் கடவுளாக நிற்பவர், பக்தர்களின் கூக்குரலுக்கு ஓடோடி வருபவர். 8 தேய்பிறை அஷ்டமிகள் பைரவர் வழிபாடு செய்பவர்களுக்கு தொழில் விருத்தி, வருமான விருத்தி, வியாபார விருத்தி, பகைவர்கள் தொல்லை, தீய சக்திகள், கண் திருஷ்டி கோளாறுகள், கட்டுக்கடங்காத கடன்கள், எமபயம் போன்ற பிரச்சனைகள் நீங்குவதாக ஐதீகம் உள்ளது.

sathur-kala-bairavar

அந்த வகையில் வாங்கிய கடன்களுக்கு வட்டி கட்ட முடியாமல் திணறுபவர்களுக்கு, பைரவர் வழிபாடு நல்லதொரு தீர்வாக இருக்கும். நாளை(6/3/2021) தேய்பிறை அஷ்டமி திதியில், பைரவர் சன்னிதிக்குச் சென்று, மிளகு தீபம் அல்லது நெய் தீபம் ஏற்றி செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். செவ்வரளி மலர்கள் இல்லை என்றாலும் சிவப்பு நிற மலர்கள் எதுவாயினும் அவற்றைக் கொண்டு பைரவர் மந்திரங்களை உச்சரித்தபடி அர்ச்சனை செய்ய வேண்டும். இந்நாளில் கடன்கள் தீர இவரை மனதார வழிபட்டால் விரைவில் உங்களுடைய முழு கடன்களும் அடைந்துவிடும், நம்பிக்கையோடு செய்து பயனடையுங்கள்.