காலை உணவிற்காக இந்த கோதுமை தேங்காய்ப்பூ ரொட்டி மற்றும் மிளகாய் சட்னியை செய்து கொடுங்கள். வீட்டில் உள்ளவர்கள் இன்னும் இரண்டு வேண்டும் என்று கேட்டு சாப்பிடுவார்கள்.

adai
- Advertisement -

பெரும்பாலும் காலை உணவு என்றாலே இட்லி, தோசை தான் அதிகமாக இருக்கும். அதிலும் சற்று மாறுதலாக செய்தால் பொங்கல், சப்பாத்தி, பூரி என்று இருக்கும். இதைத் தவிர வேறு என்ன செய்வது என்று பலருக்கும் பலவித யோசனைகள் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இவ்வாறு காலை உணவிற்காக ஒரு சுவையான, ஆரோக்கியமான கோதுமை மாவு தேங்காய் பூ ரொட்டி மற்றும் அதற்கு தொட்டுக்கொள்ள மிளகாய் சட்னி, எப்படி செய்வது என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

weat

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – ஒரு கப், தேங்காய் துருவல் – முக்கால் கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் – முக்கால் கப், நறுக்கிய பச்சை மிளகாய் – 5, உப்பு – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 3 ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவு, தேங்காய் துருவல், வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து, அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். அதாவது எப்பொழுதும் செய்யும் அடை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் அவற்றை கொஞ்சம் பெரிய உருண்டைகளாக பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

Wheat-rava-adai

அதன்பின் ஒரு வாழை இலையின் மீது லேசாக எண்ணை தடவி அதில் கோதுமை மாவு உருண்டைகளை ஒவ்வொன்றாக வைத்து அடை தட்டுவது போல் தட்டிக் கொள்ளவேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதன் மீது தோசைக்கல்லை வைத்து, தட்டி வைத்துள்ள மாவினை தோசைக்கல்லின் மீது சேர்க்க வேண்டும். ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சிறிது நேரத்தில் அதனை திருப்பிப் போட்டு இருபுறமும் சிவந்த பிறகு தோசை கல்லில் இருந்து எடுத்து கட்டில் வைக்க வேண்டும். இவ்வாறு அனைத்து உருண்டைகளையும் அடை போல் தட்டி வேக வைத்து எடுக்க வேண்டும்.

- Advertisement -

மிளகாய் சட்னி:
தேவையான பொருட்கள்:
வர மிளகாய் – 7, தேங்காய் – கால் கப், கறிவேப்பிலை – ஒரு கொத்து, சின்ன வெங்காயம் – 15, பூண்டு பல் – 7, புளி – சிறிய துண்டு, உப்பு – அரை ஸ்பூன்.

chutni

செய்முறை:
அடுப்பின் மீது ஒரு கடாயை வைத்து அதில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் காய்ந்த மிளகாய்களை சேர்த்து நன்றாக வறுத்து கொள்ள வேண்டும். பின்னர் அதே எண்ணெயில் கருவேப்பிலையை சேர்த்து நன்றாக பொரித்து எடுக்க வேண்டும். அதன் பின் பூண்டு மற்றும் புளியையும் அதே எண்ணெயில் நன்றாக வறுத்து எடுத்து அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் செய்து வைத்துள்ள கோதுமை ரொட்டியுடன் இந்த சட்னியையும் சேர்த்து சாப்பிடக் கொடுத்தால் வீட்டில் உள்ளவர்கள் இன்னும் இரண்டு வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். எப்பொழுதும் செய்யும் கோதுமை தோசை, சப்பாத்தி, பூரி யை விட இதன் சுவை சற்று வித்தியாசமாக தான் இருக்கும்.

- Advertisement -