தேவையில்லாத செலவை குறைக்க பர்ஸில் இருக்க வேண்டிய முக்கியமான பொருள் இதுதான்.

purse
- Advertisement -

இன்று நிறைய பேருக்கு இருக்கக்கூடிய பிரச்சனை இது. பர்ஸில் வைத்த பணம் எப்படித் தான் செலவாகுது என்று தெரியவில்லை. தண்ணீர் மாதிரி பணம் கரைந்து போகிறது. மாச கடைசியில் பர்ஸ் காலி. இந்த வீண் செலவுகளை குறைப்பதற்கு நிறைய பரிகாரங்கள் ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ளது. அந்த வரிசையில் இன்று சுலபமான ஆன்மீகம் சொல்லும் தாந்திரீக பரிகாரம் இது.

உங்களுடைய செலவை கட்டுப்படுத்த முடியவில்லை எனும் பட்சத்தில் இந்த ஒரு பரிகாரத்தையும் செய்து பாருங்கள். இது நிறைய பேருக்கு வெற்றி கண்ட பரிகாரம். செலவை உடனடியாக குறைக்கும் பரிகாரம். பணக்கஷ்டத்தில் சிக்கி தவிப்பவர்கள் வீண்விரய செலவால் சொத்தை அழிப்பவர்கள், பதிவை தொடர்ந்து படித்து பலன் பெறலாம்.

- Advertisement -

வீண் செலவு குறைய பூண்டு பரிகாரம்

இந்த பரிகாரத்திற்கு நமக்கு ஒரு பல் பூண்டு போதும். பீரோவில் இருந்து பணத்தை எடுத்து பரிசில் வைக்கும் போதோ, பேங்கில் இருந்து பணத்தை எடுக்கும் போது, செலவுக்காக பர்ஸில் பணம் வைக்கும் அந்த சமயத்தில் இந்த பரிகாரத்தை செய்ய தொடங்கணும். இதற்கு ஒரே ஒரு பூண்டு பல் போதும்.

ஒரு பூண்டு எடுத்து உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு, செலவை குறைக்கணும், செலவை குறைக்கணும், செலவை குறைக்கணும் என்று சொல்லி அந்த பூண்டை பர்ஸில் வைத்துக் கொள்ளுங்கள். (ஒருமுறை பூண்டை பர்ஸில் வைத்து விட்டால் போதும் ஒரு மாதத்திற்கு அதை மாற்ற வேண்டாம்.)

- Advertisement -

பர்ஸிலிருந்து பணத்தை எடுத்து செலவு செய்வதற்கு முன்பாக அந்த பூண்டை வலது கை ஆள்காட்டி விரலால் தொட்டு, செலவை குறைக்கணும் என்று சொல்லிவிட்டு, பணத்தை செலவு செய்ய வேண்டும். இப்படி செய்தால் 100 ரூபாய் செலவு செய்ய வேண்டிய இடத்தில், செலவானது குறையும். 70 ரூபாய் செலவு செய்வீங்க. மீதி பணத்தை சேமிக்கவும் தொடங்கி விடுவீர்கள்.

இந்த பூண்டு பல்லை எப்போது மாற்றுவது. மாதத்திற்கு ஒருமுறை மாற்றினால் போதும். பூண்டை பார்க்கும் போதெல்லாம், மனதில் செலவை குறைக்கணும் என்ற வார்த்தையை சொல்லி பழகுங்கள். தவறே கிடையாது. இந்த வார்த்தை காலப்போக்கில் உங்கள் மனதில் பதிந்து, பிறகு வீண் செலவை நீங்களே செய்வதை முழுமையாக குறைத்துக் கொள்வீர்கள். பிறகு சேமிப்பு உண்டாகும்.

- Advertisement -

சில பேர்தான் கையில் இருக்கும் பணத்தை வீணாக, அவசியமில்லாத பொருட்களை வாங்கி செலவு செய்வார்கள். ஆனால். சில பேருக்கு வீண் செலவு செய்ய ஆசை இருக்காது. ஆனால் மருத்துவ செலவு ஆகும். வேறு ஏதாவது எதிர்பாராத பிரச்சனைகளின் மூலம் வீண்விரய செலவுகள் வந்து கொண்டே இருக்கும். அப்படிப்பட்டவர்களும் இந்த பரிகாரத்தை முயற்சி செய்து பார்க்கலாம்.

இதையும் படிக்கலாமே: வாழ்க்கை முன்னேற்றத்திற்கு ஒவ்வொரு ராசிக்கும் உரிய மலர் வழிபாடு

பின்குறிப்பு: சமையலறையில் பயன்படுத்தக்கூடிய இந்த பூண்டுக்கு என்று ஒரு தனி மகத்துவம் இருக்கிறது. தாந்திரீக பரிகாரங்களில் அடிப்படையில் சொல்லப்பட்டுள்ள பரிகாரம் இது. ஆகவே நம்பிக்கை இருந்தால் மட்டும் இதை முயற்சி செய்து பாருங்கள். நம்பிக்கை இல்லாதவர்களுக்கு பரிகாரம் பலன் தராது.

- Advertisement -