இன்று ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து தேய்பிறை அஷ்டமி திதியும் வந்திருக்கிறது. நீங்கள் செய்யும் வேலையில் நல்ல முன்னேற்றம் கிடைக்க, செய்யும் தொழில் லாபகரமாக செல்ல, வேலையிலும் தொழிலிலும் இருக்கக்கூடிய எதிரிகள் விலக, பண வசியம் ஏற்பட, ஜனவசியம் ஏற்பட வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்.
இன்றைய தினம் காலபைரவர் கோவிலுக்கு உங்கள் கைகளால் இந்த ஒரு பொருளை வாங்கிக் கொண்டு போய் கொடுத்து, அவர் பாதத்தில் வைத்து உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து அந்த பொருளை மீண்டும் வீட்டுக்கு கொண்டு வந்து தினமும் நெற்றியில் இட்டு வர வேண்டும். அது என்ன பொருள் ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
பண வசியம் தரும் புனுகு
கால பைரவருக்கு இந்த புனுகு ரொம்ப ரொம்ப பிடித்தமானது. கால பைரவருக்கு அலங்காரம் செய்துவிட்டு, இந்த புனுகை அவர் மேல் வாசனைக்காக பூசி விடுவார்கள். ஒரு சின்ன டப்பா நாட்டு மருந்து கடைகளில் விற்கும் புனுகு வாங்கிக் கொள்ளுங்கள். கூடவே செவ்வரளி பூக்களையும் வாங்கிக் கொண்டு போய் காலபைரவருக்கு கொடுத்து உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். இந்த புனுகை கால பைரவர் பாதத்தில் வைத்துத் தரும்படி குருக்களிடம் சொன்னால் அவர் அதை அப்படியே செய்வார்.
கால பைரவருக்கு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு பைரவர் சன்னிதானத்தில் சிறிது நேரம் அமர்ந்து உங்கள் கஷ்டங்களைச் சொல்லி மனதாரப் பிரார்த்தனை செய்து இந்த புனுகு டப்பாவை வாங்கி வீட்டிற்கு வரவும். இதை பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள். தினமும் காலையில் எழுந்து சுத்தமத்தமாக குளித்துவிட்டு, வேலைக்கு செல்லும்போது, வியாபாரத்துக்கு செல்லும்போது, இந்த புனுகை நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் உச்சந்தலையில் தடவிக் கொண்டாலும் சரிதான்.
தினமும் கால பைரவரை நினைத்து இந்த புனுகை வைத்துக் கொண்டு சென்றால் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். செய்யும் வேலையில் சிறந்து விளங்குவீர்கள். தொழிலில் இருக்கக்கூடிய எதிரிகள் உங்களை விட்டு விலகுவார்கள். நஷ்டம் அடைந்த தொழில் கூட லாபமாக செல்லும். எல்லா அனுகிரகத்தையும் ஆசீர்வாதத்தையும் அந்த காலபைரவர் உங்களுக்கு கொடுப்பார்.
இதையும் படிக்கலாமே: ஆடி கிருத்திகை வழிபாடு
ஜன வசியம், பண வசியம், முக வசியம், அனைத்து வசியங்களை ஏற்படுத்தி தரக்கூடிய பொருள்தான் புனுகு. அது காலபைரவர் பாதத்தில் இருந்து எடுக்கப்பட்ட புனுதாக இருக்கும்போது, அதற்கான சக்தியும் இன்னும் இரண்டு மடங்கு பெருகும். இன்று மாலை ராகு கால நேரம் 4:30 மணியிலிருந்து 6:00 மணி வரை. எல்லா பைரவர் சன்னிதானத்திலும் சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடக்கும் அதில் சென்று கலந்து கொள்ளுங்கள் பைரவரின் ஆசிர்வாதத்தை பெற்று வளமாக வாழுங்கள்.