திருமண தடை நீங்க தீப பரிகாரம்

murugan thirumanam
- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையில் திருமணம் நடந்தால் தான் அவருடைய வாழ்க்கை முழுமை பெற்றதாக கருதப்படுகிறது. என்னதான் நல்ல குடும்பத்தில் பிறந்திருந்தாலும், நன்றாக படித்து இருந்தாலும், கை நிறைய சம்பளம் வாங்கி இருந்தாலும், சொத்துக்கள் அதிகம் சேர்ந்திருந்தாலும், திருமணம் என்ற ஒன்று நடைபெறவில்லை என்றால் அவருடைய வாழ்க்கை முழுமை அடையவில்லை என்றுதான் அர்த்தம்.

அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த திருமணம் அதற்குரிய வயதில் நடைபெற வேண்டும். அப்படி நடைபெறவில்லை என்னும் பட்சத்தில் திருமண தடை ஏற்பட்டு இருக்கிறது என்று பொருள்படும். இந்த திருமண தடையை நீக்குவதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

பொதுவாக திருமண சம்பந்தப்பட்ட விஷயங்களில் தாமதங்களோ தடைகளோ ஏற்பட்டிருந்தால் முதலில் குலதெய்வ வழிபாட்டை முறையாக மேற்கொள்ள வேண்டும். குலதெய்வ வழிபாட்டை மேற்கொண்ட பிறகு திருமண தடை நீங்க வேண்டும் என்பதற்காக முருகப்பெருமானை நினைத்து தீபம் ஏற்றி வழிபட வேண்டும். ஒருவருடைய ஜாதகத்தில் நவகிரகங்களின் அமைப்பு சாதகமாக இருக்கும் பட்சத்தில் அவர்களுடைய வாழ்க்கையும் நல்ல விதமாக அமையும்.

ஏதாவது ஒரு கிரகத்தின் பாதிப்பு ஏற்பட்டால் கூட அவர்களுடைய வாழ்க்கையில் நடக்கக்கூடிய நல்ல விஷயங்கள் தடைப்பட்டு போவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் நம் முருகப்பெருமானை நினைத்து நவகிரகங்களின் அருளையும் பெறுவதற்கு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை செவ்வாய்க்கிழமையும் வியாழக்கிழமையும் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

அருகில் இருக்கக்கூடிய முருகன் ஆலயத்திற்கு செல்லுங்கள். அவ்வாறு செல்லும் பொழுது புதிதாக வாங்கிய 9 அகல் விளக்குகளை எடுத்துக்கொண்டு செல்லவேண்டும். இதோடு மட்டுமல்லாமல் நவகிரகங்களுக்குரிய தானியங்களை தனித்தனியாக வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும். முருகப்பெருமானுக்கு முன்பாக இந்த 9 அகல விளக்குகளுக்கும் சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு இதை வரிசையாக வைத்து ஒவ்வொரு நவகிரகங்களுக்கும் ஒவ்வொரு கிரகத்திற்கும் உரிய தானியத்தை வரிசையாக சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது என்று வரிசையாக அவர்களுக்குரிய தானியத்தை ஒவ்வொரு அகல் விளக்கிலும் பாதி அளவு நிரம்பும் படி போட வேண்டும். பிறகு அந்த அகல் விளக்கில் நல்லெண்ணையை ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இதுதான் நவதானிய தீபம்.

- Advertisement -

இந்த முறையில் நவதானிய தீபத்தை முருகப்பெருமானின் சன்னதியில் ஏற்றி வைத்துவிட்டு யாருக்கு திருமண தடை ஏற்பட்டு இருக்கிறதோ அவர்களின் பெயரில் திருமணம் நடைபெற வேண்டும் என்று அர்ச்சனை செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒன்பது வாரங்கள் செவ்வாய்க்கிழமையும் வியாழக்கிழமையும் முருகனின் ஆலயத்தில் இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

இப்படி மேற்கொண்டும் திருமணம் ஆகவில்லை என்று வருத்தப்படுபவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் தாடிக்காரகொம்பு என்னும் ஊரில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று ரதி மன்மத பூஜையை செய்துவர விரைவிலேயே திருமணம் நடைபெறும்.

இதையும் படிக்கலாமே: சொந்த தொழில் சிறப்பாக நடக்க வழிபாடு

முழு நம்பிக்கையுடன் முருகப்பெருமானின் சன்னிதியில் நவதானிய விளக்குகளை ஏற்றி வைத்து வழிபட விரைவிலேயே நவகிரகங்களின் அருளாலும் முருகப்பெருமானின் அருளாலும் திருமணம் நடைபெறும்.

- Advertisement -