திருமணத்தடை நீங்க துர்க்கை அம்மன் வழிபாடு

thirumana thadai
- Advertisement -

எந்த ஒரு நல்ல காரியமும் அதற்குரிய காலத்தில் நடந்தால்தான் அதற்கு மதிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. காலம் பார்த்து அறுவடை செய்ய வேண்டும் என்பதும் இதற்கு ஒரு பெரிய உதாரணம். அப்படிப்பட்ட ஒரு நல்ல காரியமாக தான் திருமண வைபோகம் இருக்கிறது. குறிப்பிட்ட வயதில் ஒருவருக்கு திருமணம் நடக்கவில்லை என்றால் அதனால் அவர் மட்டுமல்லாமல் அவர் குடும்பமே மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். அப்படிப்பட்டவர்கள் துர்க்கை அம்மனை எந்த முறையில் வழிபட வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

திருமண தடையை விலக்குவதற்கு பல பரிகாரங்கள் இருக்கின்றன. பல தெய்வங்களை வழிபடும் முறையும் இருக்கிறது. அவற்றில் மிகவும் எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இன்று நாம் பார்க்கப் போகிறோம். இந்த வழிபாட்டை நாம் துர்க்கை அம்மன் மீது முழு நம்பிக்கை வைத்து செய்ய வேண்டும். நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய தடைகளை விளக்குவதற்காக தான் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழ தீபம் ஏற்றி வழிபடுகிறோம்.

- Advertisement -

துர்க்கை அம்மனுக்கு உகந்த நாளாக செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை திகழ்கிறது. அதே சமயம் ராகு காலமும் துர்க்கை அம்மனுக்குரிய காலமாக திகழ்கிறது. இந்த வழிபாட்டை செவ்வாய்க்கிழமை அல்லது வெள்ளிக்கிழமையில் தொடங்க வேண்டும். ராகு காலத்தில் தான் செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை செய்வதற்கு அருகில் இருக்கும் ஆலயத்திற்கு சென்று அங்கு இருக்கக்கூடிய துர்க்கை அம்மனுக்கு இரண்டு நெய் தீபங்களை ஏற்றி வைத்து துர்க்கை அம்மனின் பாதத்தில் 6 கற்பூரம், 36 கிராம்பு, ஒரு கைப்பிடி அளவு அரிசி, மஞ்சள் தூள் இவை அனைத்தையும் வைக்க வேண்டும். பிறகு துர்க்கை அம்மனை மனதார வழிபட வேண்டும்.

செவ்வாய்க்கிழமை செய்வதாக இருந்தால் தொடர்ந்து ஒன்பது செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமை செய்வதாக இருந்தால் தொடர்ந்து 9 வெள்ளிக்கிழமையும் இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் இவ்வாறு இந்த வழிபாட்டை மேற்கொள்ளும் பொழுது செவ்வரளி பூக்களை துர்க்கை அம்மனுக்கு வாங்கி தர வேண்டும். மேலும் அன்றைய தினம் நடக்கும் ராகுகால பூஜையில் கலந்துகொண்டு அபிஷேகத்திற்காக தங்களால் இயன்ற அளவு பொருட்களை வாங்கித் தர வேண்டும். மேலும் இந்த ராகு கால பூஜை முடியும் வரை விரதம் இருந்து வழிபட்டால் அதன் பலன் மிகவும் அதிகமாகவே இருக்கும்.

- Advertisement -

ஒன்பதாவது வாரம் நிறைவடையும் பொழுது துர்க்கை அம்மனுக்கு ஏதாவது ஒரு பிரசாதத்தை செய்து நெய்வேத்தியமாக படித்து அங்கு வரும் பக்தர்களுக்கு வழங்க வேண்டும். மேலும் அங்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு திருமாங்கல்ய செட்டை கொடுத்து அவர்களிடம் ஆசீர்வாதம் பெறுவதன் மூலம் துர்க்கை அம்மனின் பரிபூரண அருளை பெற முடியும்.

இதையும் படிக்கலாமே: கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு

துர்க்கை அம்மனை இந்த முறையில் ராகு காலத்தில் முழு நம்பிக்கையுடன் வழிபடுவதன் மூலம் திருமண தடைகள் விலகி விரைவிலேயே திருமணம் கைகூடும்.

- Advertisement -