திருநெல்வேலி பொடி இட்லி ஒரு முறை இந்த பக்குவத்தில் செய்து பாருங்கள். நாவில் எச்சில் ஊற அவ்வளவு சுவையாக இருக்கும்

idli
- Advertisement -

காலை உணவாக அடிக்கடி செய்யும் இட்லியை ஒரு சிலர் விருப்பமாக சாப்பிடுவார்கள். ஆனால் பெரும்பாலானோர் இட்லியை விட தோசையை தான் அதிகம் விரும்புவார்கள். இந்த இட்லியுடன் தொட்டுக்கொள்ள சுவையான கார சட்னி, புதினா சட்னியை சேர்த்து கொடுத்தால் சற்று ஆர்வமாக சாப்பிடுவார்கள். ஆனால் தோசையை விட இட்லி தான் எப்போதும் உடலுக்கு ஆரோக்கியமானது. இவ்வாறான இட்லியை சற்று புது விதமான சுவையில் செய்து கொடுத்தால் அனைவரும் விருப்பமாகவே சாப்பிடுவார்கள். அவ்வாறு பலரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கக் கூடிய இந்த திருநெல்வேலி பொடி இட்லியை எவ்வாறு செய்வது என்பதைப் பற்றி இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

dosai

இட்லி பொடி செய்முறை:
முதலில் ஒரு கடாயை அடுப்பின் மீது வைத்து தோலுடன் கூடிய உடைத்த உளுத்தம் பருப்பை ஒரு கப் அளவு சேர்த்து, அடுப்பை சிம்மில் வைத்துக் கொண்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். தோலுடன் கூடிய உளுத்தம் பருப்பு இல்லை என்றால் தோல் நீக்கிய உளுத்தம்பருப்பையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

அதன் பின்னர் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் சிறிதளவு பெருங்காயத்தை சேர்த்து நன்றாகப் பொறித்துக் கொள்ள வேண்டும். அதன்பின் 6 பல் பூண்டை இடித்து எண்ணெயில் சேர்த்து பொன்னிறமாக சிவந்து வருமாறு பொறிக்க வேண்டும். பிறகு அதே கடாயில் காரத்திற்கு தகுந்தாற்போல் ஏழு அல்லது எட்டு வரமிளகாய் மற்றும் இட்லி பொடிக்கு தேவையான கல் உப்பையும் சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும்.

dry-fry

அதன்பின் கால் கப் எள் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொண்டு எள் நன்றாக பொரிந்து வரும் வரை வறுக்க வேண்டும். பின்னர் இவை அனைத்தையும் நன்றாக ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அதன் பின் எப்பொழுதும் போல இட்லியை செய்து ஒவ்வொரு இட்லியையும் நான்கு துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பின் மீது கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு சேர்த்து தாளித்து அதனுடன் வெட்டி வைத்துள்ள இட்லி துண்டுகளை சேர்க்க வேண்டும்

Idli

இவற்றை நன்றாக கிளறி விட்டு அதனுடன் பொடித்து வைத்துள்ள இட்லி பொடியை இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் சேர்த்து நன்றாக பிரட்ட வேண்டும். 5 நிமிடம் சிறிய தீயில் அப்படியே வைத்து கிளறிக்கொண்டே இருக்கவேண்டும். இறுதியாக ஒரு கொத்து கறிவேப்பிலையை சேர்த்து ஒரு முறை கிளறி விட்டு அடுப்பை அனைத்து விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான திருநெல்வேலி பொடி இட்லி தயாராகிவிட்டது.

idli-podi2

இந்த இட்லி பொடியை ஒரு டப்பாவில் போட்டு வைத்து அதனை ஃப்ரிட்ஜில் வைத்தும் ஒரு மாதத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த இட்லி பொடியுடன் நல்லெண்ணெய் சேர்த்து கலந்து இட்லி மற்றும் தோசையுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட்டோம் என்றால் அவ்வளவு அசத்தலான சுவையில் இருக்கும்.

- Advertisement -