தோஷங்களில் இருந்தும், விபத்துகளில் இருந்தும் நம்மை காப்பாற்ற ஆஞ்சநேயரை செவ்வாய் கிழமையில் இப்படி வழிபட்டு பாருங்கள். அனைத்து நன்மைகளையும் அவர் வாரி வழங்குவார்.

hanuman valipadu
- Advertisement -

அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயரை நாம் மனதார நினைத்து அவரை வழிபட்டால், அவர் நமக்கு பல நன்மைகளை வழங்குவார் என்பது நமக்குத் தெரியும். அவரை வணங்குவதற்கு நாம் சிரமப்பட வேண்டிய அவசியமே இல்லை. ராம் ராம் என்று கூறினாலேயே அவரின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும். அவ்வளவு சிறப்பு மிகுந்த ராம பக்தனான ஆஞ்சநேயர் விபத்துகளில் இருந்து நம்மை காப்பாற்றவும், தோஷங்களில் இருந்து நம்மை விடுவிக்கவும் எந்த கிழமையில் வழிபட வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பொதுவாக ஹனுமன் வழிபாடு என்றதும் நம் நினைவிற்கு வருவது சனிக்கிழமை தான். சனிக்கிழமையில் அனுமனை வழிபட வேண்டும் என்றுதான் பலரும் நினைத்திருக்கிறார்கள். ஆனால் அது உண்மை அல்ல. அவரை தினமும் வழிபடலாம். ஒவ்வொரு கிழமையும் நாம் அவரை வழிபடுவதால் நமக்கு ஒவ்வொரு விதமான பலன்கள் ஏற்படும். அந்த வகையில் தான் சனிக்கிழமை அன்று வழிபடுவதால் சனிபகவானின் தோஷத்தில் இருந்து நம்மால் விடை பெற முடியும் என்ற காரணத்தினாலேயே நம் முன்னோர்கள் சனிக்கிழமை அன்று அனுமனை வழிபட வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.

- Advertisement -

மாங்கல்ய தோஷம் முதற்கொண்டு ஏனைய பிற தோஷங்களும் நம்மை விட்டு நீங்க வேண்டும் என்றால் செவ்வாய்க்கிழமை அன்று ஆஞ்சநேயருக்கு செந்தூரத்தை வழங்கி வழிபட வேண்டும். மேலும் இந்த செந்தூரத்தில் மல்லிகை எண்ணெயை கலந்து நாம் நெற்றியில் பூசுவதால் நம்முடைய தோஷங்கள் மட்டும் அன்றி மனமும் நிம்மதி பெறும் என்று கூறப்படுகிறது. செவ்வாய்க்கிழமை அன்று ஹனுமனுக்கு துளசி மாலை வாங்கி சாற்ற வேண்டும். பிறகு அவரை வழிபட்டு, அந்த துளசி இலையை பிரசாதமாக உண்ணுவதால் நமக்கு நன்மைகள் உண்டாகும்.

ஆஞ்சநேயருக்கு மிகவும் பிடித்தமான பெயராக ராம் என்னும் பெயர் விளங்குகிறது. செவ்வாய்க்கிழமை அன்று ஒரு சிவப்பு நிற துணியை எடுத்துக் கொள்ள வேண்டும். அதை முக்கோண வடிவில் வெட்ட வேண்டும். பிறகு அதில் ராம் என்று எழுத வேண்டும். இந்த முக்கோண வடிவ சிவப்பு துணியை ஆஞ்சநேயரின் பாதத்தில் வைத்து பூஜிக்க வேண்டும். பிறகு அந்த துணியை கொடியாக நம் வாகனங்களின் முன்பு கட்ட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நமக்கு விபத்துகள் நேராமல் ஆஞ்சநேயர் நம்மை காப்பாற்றுவார்.

- Advertisement -

ராம் ராம் என்றோ, ராமஜெயம் என்றோ நம் மனதிற்குள் உச்சரித்தவாறு எந்த செயலை செய்தாலும், அந்த செயல் நியாயமான செயலாக இருக்கும் பட்சத்தில் அது நிறைவேறும். செவ்வாய்க்கிழமை அன்று ஆஞ்சநேயரை நாம் வழிபடும் பொழுது அவருக்கு லட்டு, சுண்டல் மற்றும் கொய்யாப்பழம் போன்றவற்றை நெய்வேத்தியமாக வைத்து வழிபட வேண்டும். அவ்வாறு வழிபட்டால் அவருடைய முழு ஆசிர்வாதமும் நமக்கு கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: பணக்கஷ்டம் நீங்கி பணவரவு ஏராளமாக வர இருக்க அரச மரத்தடியில் நின்று இந்த ஒரு வார்த்தையை சொன்னால் போதும். ஆண்டியையும் அரசனாக்கும் அற்புத அரச மர பரிகாரம்.

நம்முடைய பிரச்சினைகளுக்கு ஏற்ற வகையில் எந்த கிழமையில் எந்த தெய்வத்தை எப்படி வழிபட வேண்டும் என்பதை புரிந்து கொண்டு, அதன் அடிப்படையில் நாம் வழிபட்டால் நம்முடைய பிரச்சனைகள் அனைத்தும் தீரும். அந்த தெய்வத்தின் முழு ஆசீர்வாதத்தையும் நம்மால் பெற முடியும்.

- Advertisement -