அட, இந்த சுவாமியின் படத்தை இப்படி வைத்து வழிபாடு செய்தால் வருமானம் குறையுமா? இத்தனை நாட்களாக இது தெரியாமல் போய்விட்டதே!

perumal

எந்த தெய்வமும் தன்னை நம்பி வழிபடக்கூடிய பக்தர்களுக்கு கெடுதலை நினைப்பது கிடையாது. இருப்பினும் நம்முடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு நம்மை சுற்றி அமைத்துக் கொள்ளக் கூடிய சூழல் என்பது நேர்மறையாக இருக்க வேண்டும். நாம் எதை பார்க்கின்றோமோ, எதை நினைத்துக் கொண்டே இருக்கின்றோமோ, அதுதான் நம்முடைய வாழ்வில் நடக்கும். நேர்மறை எண்ணங்கள் நேர்மறை சிந்தனைகள், நேர்மறையான பலனைக் கொடுக்கின்றது. எதிர்மறை எண்ணங்கள், எதிர்மறை சிந்தனைகள் எதிர்மறை பலனைக் கொடுக்கின்றது.

5 god

அந்த வரிசையில் தொழில் செய்யும் இடத்தில் நாம் எப்படிப்பட்ட தெய்வத்தின் திரு உருவப்படத்தை வைக்க வேண்டும். வீட்டில் எப்படிப்பட்ட தெய்வப் படங்களை வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பற்றிய தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

பொதுவாகவே தொழில் செய்யும் இடத்தில் யாரும் வெறுமனே அமர்ந்து இருக்க கூடாது. சோர்வடைய கூடாது. சுறுசுறுப்பாக செயல்பட்டு கொண்டே இருக்க வேண்டும். வேலைகள் ஓடிக்கொண்டே இருக்கவேண்டும். வேலை செய்யும் இடத்தில் யாரேனும் ஒருவர் சோர்ந்து அமர்ந்து விட்டால் அவரை பார்க்கும் மற்றவருக்கும் வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் வராது.

இதே போல் தான் வேலை செய்யும் இடத்தில், அமர்ந்து இருக்கக்கூடிய தெய்வங்களின் திருவுருவப்படத்தை வைப்பது அவ்வளவு சரியல்ல என்று சொல்லப்பட்டுள்ளது. வேலை செய்யும் இடத்தில், தொழில் செய்யும் இடத்தில் நம் கண்முன்னே படக்கூடிய தெய்வ படங்கள் நின்றபடி இருக்க வேண்டும். ராஜ அலங்காரத்தில் நின்று கொண்டிருக்கும் முருகனின் திரு உருவம், முழு அலங்காரத்தோடு இருக்கக்கூடிய பெருமாளின் படம் இப்படியாக நின்றபடி இருக்கக்கூடிய தெய்வங்களின் படத்தை தொழில் செய்யும் இடத்தில் வைத்து வழிபாடு செய்தால், வேலையும் எந்த சூழ்நிலையிலும் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கும் என்ற ஒரு கருத்து உள்ளது. முயற்சி செய்து பாருங்கள். குறிப்பாக தொழில் செய்யும் இடத்தில் விஸ்வகர்மாவின் திருவுருவப் படத்தை வைப்பது மிகவும் நல்லது என்றும் சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

இதேபோல் பைனான்ஸ் தொழில் செய்பவர்களுக்கு, லட்சுமிதேவி எப்போதுமே உள்ளே வருவதும் போவதுமாக இருப்பார்கள். அதாவது பணபரிமாற்றம் அதிகமாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு ஸ்தாபனங்கள் வைத்திருப்பவர்கள் லக்ஷ்மிதேவியின் திருவுருவப்படத்தை நின்றபடி தங்களுடைய கடையில், அலுவலகத்திலும் வைத்துக்கொள்ளலாம் தவறு கிடையாது.

தொழில் செய்யும் இடத்தில், கல்லாப்பெட்டி இருக்கும் இடத்திலோ அல்லது பணம் வைக்கும் மேஜை, டிரா இவைகளின் மேல் பக்கத்தில் எப்போதுமே ஒரு பச்சை நிறத் துணியை விரித்து, அதன் மேலே ஒரு சிறிய கண்ணாடி பௌலில் தோழியை கோபுரமாக நிரப்பி வைத்துக் கொள்ளுங்கள். அந்த சோழிக்கு நடுவே 3 ஏலக்காய்களையும் வைத்து விடுங்கள். பணம் வைக்கும் இடத்தில் பச்சை நிறமும், ஏலக்காய் தோழி இந்த மூன்று பொருட்களும் வைத்தால் தொழிலில் அதிக லாபம் கிடைக்கும். முயற்சி செய்து பாருங்கள்.

murugan-poosam

வீட்டு பூஜை அறையில் முடிந்தவரை நின்றபடி இருக்கக்கூடிய தெய்வங்களை வைக்காமல், அமர்ந்திருக்கும் தெய்வங்களாக வைத்து வழிபடுவது நன்மையை கொடுக்கும். குறிப்பாக லட்சுமி தேவி நின்றிருக்கும் படி, இருக்கக்கூடிய படம் வீட்டில் இருக்கவேண்டாம். அமர்ந்தபடி லட்சுமிதேவி இருப்பது நன்மையைத் தரும். வீட்டிற்குள் நுழையும் போது, வாசலுக்கு மேல்பக்கம் வீட்டிற்கு உள்ளே பார்த்தவாறு இரண்டு யானைகளை, இரண்டு பக்கம் கொண்டபடி கஜலட்சுமியின் திருவுருவப் படத்தை வைப்பது வீட்டிற்கு அதிகப்படியான நன்மைகளை சேர்க்கும்.