கஷ்டம் தீர செய்ய வேண்டிய தானம்

ammam abisegam
- Advertisement -

மனிதனுடைய வாழ்க்கையில் பிரச்சனைகளுக்கு அளவே கிடையாது. ஒவ்வொருவர் வாழ்க்கையில் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் இருந்து கொண்டே தான் இருக்கிறது. ஒரு சிலர் தீராத வியாதியால் துன்பப்படுபவர்கள். ஒரு சிலர் கடன் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் ஒரு சிலர் வீட்டில் சண்டை சச்சரவு என எப்போதும் மன உளைச்சலில் இருப்பார்கள்.

இப்படி பிரச்சனைகள் பலவிதமாக இருந்தாலும், அதை தீர்க்க நாம் சரணடையும் ஒரே இடம் தெய்வம் தான். அப்படி வழிபடும் தெய்வத்திற்கு சில பொருட்களை தானமாக வாங்கிக் கொடுப்பதன் மூலம் நம்முடைய பிரச்சனைகள் நீங்கும் என்று சொல்லப்படுகிறது. அது எந்த பிரச்சனைக்கு என்ன பொருளை தானமாக வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

துன்பங்கள் தீர தானம்

ஒரு சில வீடுகளில் எப்பொழுதும் யாரேனும் ஒருவருக்கு ஏதாவது ஒரு வியாதி வந்து கொண்டே இருக்கும். அது ஜுரமாக இருக்கலாம் அல்லது கை கால் வலி, உடம்பு வலி போன்ற சாதாரணமான உடல் உபாதையாக இருக்கலாம். ஆனால் ஏதோ ஒன்று வந்து கொண்டே இருக்கும். இப்படியானவர்கள் வீட்டின் அருகில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு இளநீரை வாங்கி கொடுக்க வேண்டும்.

இந்த இளநீரால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யும் போது அம்மன் மன குளிர்வது போல, குடும்பத்தில் உள்ளவர்களின் மனதும் குளிரும் என்று சொல்லப்படுகிறது. இந்த தானத்தின் மூலம் வீட்டில் நோய் வாய்ப்பட்டு துன்பத்தில் இருப்பவர்களும் சீக்கிரம் அதிலிருந்து வெளி வருவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

- Advertisement -

இதில் ஒரு சிலருக்கு தோல் சம்பந்தமான வியாதிகள் இருக்கும். அது அவ்வளவு சீக்கிரத்தில் சரியாகாது. எத்தனை மருந்து மாத்திரைகள் எடுத்தாலும் இது போன்ற வியாதிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். அப்படியானவர்கள்அம்மன் ஆலயத்தின் குளத்தின் தண்ணீரில் வெள்ளம், கல் உப்பு இரண்டையும் கரைத்து விட வேண்டும்.

அடுத்து அனைவருக்கும் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை. இந்த பண பிரச்சனை நீங்கி வாழ்க்கையில் செல்வ வளம் பெருக வேண்டும். நாமும் நிம்மதியான முறையில் வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் அம்மன் ஆலயத்திற்கு ஒரு கிலோ வெல்லத்தை தானமாக வாங்கி கொடுக்க வேண்டும்.
இதற்கு மேலும் வாங்கிக் கொடுக்கலாம். ஆனால் குறைந்தது ஒரு கிலோவாது வாங்கி கொடுக்க வேண்டும்.

- Advertisement -

இந்த தானங்களை ஒரு வாரம் மட்டும் செய்து விட்டு அப்படியே விட்டு விடக் கூடாது. உங்களால் முடிந்த வரையில் இந்த தானங்களை தொடர்ந்து செய்து வரும் போது இந்த நோய்களின் தாக்கம் குறைந்து அதிலிருந்து வெளிவரவும் பணப் பிரச்சனைகள் நீங்கி உங்களின் செல்வநிலை உயரவும் அம்மன் அருள் புரிவார் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்காலமே: வேண்டுதல் நிறைவேற தேய்பிறை சஷ்டி வழிபாடு

நம்முடைய பிரச்சனைகள் தீர செய்ய வேண்டிய இந்த தான வழிப்பாட்டு முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் அம்மனை மனதார பிரார்த்தனை செய்து கொண்டு இந்த தானத்தை செய்யுங்கள். எந்த ஒரு வழிபாடும் பரிகாரமும் செய்வதற்கு முன்பு நம்முடைய நம்பிக்கையும் முயற்சியும் அவசியம் தேவை. அத்துடன் சேர்த்து இதையும் செய்யுங்கள் நல்ல பலன் கிடைக்கும்.

- Advertisement -