- Advertisement -
Homeவீட்டு குறிப்புகள்என்ன துணிகளில் படிந்த கறையை நீக்க லைசால் போதுமா? ஆச்சரியமா இருக்கா? லைசால் வீட்டு தரையில...

என்ன துணிகளில் படிந்த கறையை நீக்க லைசால் போதுமா? ஆச்சரியமா இருக்கா? லைசால் வீட்டு தரையில உள்ள கறையை போக்கும் ஆனால் துணியில உள்ளது எப்படி போகும் யோசிக்கிறீங்களா வாங்க தெரிஞ்சிக்கலாம்

- Advertisement -

துணி துவைக்கிறதே ஒரு கஷ்டமான வேலை தான். என்னதான் வாஷிங் மெஷின் இருந்தாலும் எல்லா துணியும் ஒன்னா போட முடியாது. அது இல்லாம அழுக்கு நிறைய இருக்க துணி, காலர் அழுக்கு துணி இதெல்லாம் தனியா தான் துவைத்து ஆகணும். இதுல சாயம் போற துணி, சாயம் போகாத துணி, இப்படி எல்லா துணியும் தனித்தனியா போட்டு எடுக்குறதுக்கே ஒரு நாள் ஆயிடும். இதுல தெரியாம நாம சாயம் போற துணியை மற்ற துணிகளோட போட்டுடா அவ்வளவு தான் முடிஞ்சுது கதை. இந்த குழந்தைகள் வேற பேனாவில் சட்டை எல்லாம் கிறுக்கி கொண்டு வந்து போடுவாங்க. அதைத் துவைப்பதெல்லாம் பெரிய சவால் தான். இப்படியே கறை வந்துருச்சின்னு பேசிக்கிட்டே இருந்தா எப்படி அதை சரி செய்யறது எப்படின்னு தான் இப்போ இந்த பதிவில் நாம தெரிஞ்சுக்க போறோம். இப்படி குழந்தைங்க சட்டைல கிறுக்கி வைத்த இந்த பேனா கறையும், அது மட்டும் இல்லாம சாயம் போற துணியோட மத்த துணிகளை சேர்த்து போட்டு அதுல புடிச்ச சாயக்கறையும் எப்படி ஈஸியா அதுவும் மிஷின் யூஸ் பண்ணாம கிளீன் பண்ண முடியும் அப்படிங்கறத பத்தி தான் இப்ப தெரிஞ்சுக்க போறோம்.

முதலில் சாயக் கறை படிந்த துணிகளை எப்படி சுத்தம் பண்றதுன்னு பாப்போம். அதுக்கு ஒரு பாத்திரத்தில் துணி முழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி, அதில் ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடா, 2 டீஸ்பூன் வினிகர் சேர்த்து கொள்ளுங்கள். நீங்கள் போடும் துணியின் அளவைப் பொறுத்து இந்த இதன் அளவை கூட்டியோ குறைத்தோ போட்டுக் கொள்ளுங்கள். ஆனால் ஒரு ஸ்பூன் பவுடருக்கு இரண்டு ஸ்பூன் வினிகர் என்பது தான் அளவு.

- Advertisement -

இந்த பேக்கிங் சோடாவும் வினிகரும் சேர்ந்து தண்ணீரில் சாய கறை படிந்த துணியை ஒரு அரை மணி நேரம் ஊற வைத்து விடுங்கள். அதன் பிறகு எடுத்து அந்த சாயம் உள்ள பகுதியில் குளிப்பதற்கு பயன்படுத்தும் சோப்பு, நீங்கள் உபயோகிக்கும் எந்த சோப்பாக இருந்தாலும் சரி அதை பயன்படுத்தி கறை உள்ள இடத்தில் லேசாக தேய்த்தாலே போதும். சாயக்கறை அனைத்தும் காணாமல் போய் துணி பழைய நிறத்திற்கு வந்து விடும். பேண்ட் போன்ற கடினமான துணிகளில் கறை படிந்து இருந்தால் அங்கு ஸ்கிரப்பர் கொண்டு தேய்க்கலாம். துணி தேய்க்க பயன்படுத்தும் பிரஷ், துணி சோப்பு போட்டு தேய்க்கும் அளவிற்கு கடினமாக இருக்காது.

அடுத்து குழந்தைகள் சட்டையில் கிறுக்கி வைத்த கறை அதுவும் வெள்ளை சட்டையில் கிறுக்கி வைத்து விட்டால் கேட்கவே வேண்டாம். அது போன்று கடினமான கறைகளை லைசால் கொண்டு எப்படி எளிமையாக நீக்குவது என்பதை தான் இப்போது பார்க்க போகிறோம்.

- Advertisement -

அதற்கு முதலில் பேனாவில் கிறுக்கி கறை படிந்த இடத்தில் கொஞ்சம் பேக்கிங் சோடா போட்டு அதன் மேல் சிறிதளவு லைசாலை ஊற்றி விடுங்கள். லைசால் நன்றாக அந்த இடத்தில் கூறிய பிறகு ஒரு சாதாரண பிரஷ், துணி துவைக்கும் பிரஷ் வேண்டாம். உங்கள் வீட்டில் ஏதாவது வேஸ்ட் டூத்பிரஷ் இருந்தால் அதை கொண்டு லேசாக அந்த இடத்தை மட்டும் தேய்த்து பிறகு எப்போதும் போல் தண்ணீரில் முக்கி கறை உள்ள இடத்தை கொஞ்சமாக கசக்கினாலே போதும். கறை இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும். இதன் பிறகு அந்த துணிகளை எப்போதும் போல் தண்ணீரில் சோப்பு பவுடர் போட்டு இதனுடன் கூடவே ஒரே ஒரு ஸ்பூன் கல் உப்பையும் சேர்த்து ஊற வைத்து துவைத்து எடுத்து விடலாம். துணியின் நிறமும் மங்காது கறையும் மறைந்துவிடும்.

இதையும் படிக்கலாமே: இனி கரப்பான்பூச்சி, பல்லி தொல்லையிலிருந்து நிரந்தர விடுதலை தான்‌. ஒரே ஒரு மூடி இந்த லிக்விடை சிங்க் ஓட்டையில் ஊற்றி விடுங்க போதும்.

இந்த இரண்டு டிப்ஸ்மே இல்லத்தரசிகளுக்கு மிக மிகப் பயனுள்ளதாக தான் இருக்கும். இனி கறை பற்றிய கவலையை விட்டு விடுங்கள்.

சற்று முன்