நீங்க எந்த வேலையை செய்ய சென்றாலும், உங்களுக்கு முன்னாடி, உங்களுடைய துரதிர்ஷ்டம் தான், போய் நிக்குதா? ஒருவாட்டி உங்க கையில இதை எடுத்துட்டு போய் பாருங்க!

kula-dheivam-veppilai-vetrilai

‘அதிர்ஷ்டம் ஏரோபிளைன் வேகத்தில போனா, துரதிஷ்டம் ஜெட் வேகத்தில் போய் அதுக்கு முன்னாடி நிக்குது’. இந்த வார்த்தையை நம்மில் பலபேர் சொல்லி, கட்டாயம் கேள்விப்பட்டிருப்போம். சிலபேருக்கு எந்த வேலைக்கு சென்றாலும், எந்த ஒரு செயலை புதியதாக தொடங்கினாலும் சரி, அதில் தோல்வி ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். தடங்கல்கள், இன்னல்கள் வந்துகொண்டே இருக்கும்.

arugampul-vinayagar

வேலை வெற்றிகரமாக முடிந்து விட்டது போல் இருக்கும், கடைசி சமயத்தில் ஏதாவது ஒரு பிரச்சனை வந்து அந்த வேலை முடியாமல் இழுத்துக் கொண்டே போகும். இப்படிப்பட்டவர்களுக்கான பிரச்சனை தீர, இவர்களிடம் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி, இவர்களுக்கும் அதிர்ஷ்ட காற்று வீச ஒரு வழி இருக்கிறது. இது ஒரு சுலபமான பரிகாரம் தான். நம்பிக்கை உள்ளவர்கள் இப்படி செய்து பாருங்கள்!

பல பேருக்கு இதுல கட்டாயம் நம்பிக்கை இருக்காது. இருந்தாலும், நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு ஒரு முறை செஞ்சு பாருங்கள். பலன் அளித்ததால், பரிகாரத்தை செய்தவர்களுக்கு கட்டாயம் நன்மைதானே! இதற்கு நமக்கு தேவை எலுமிச்சைப் பழமும், வேப்பிலையும், வெற்றிலையும் தான்.

Neem

எலுமிச்சை பழத்திற்கு எந்த ஒரு எதிர்மறை ஆற்றலையும் விரட்டக் கூடிய, சக்தி இருப்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றே. இதேபோல் அம்மனின் அம்சம் கொண்டது வேப்பிலை என்ற நம்பிக்கையும் நம்மில் பல பேருக்கு உண்டு. முதலில் இந்த வேப்பிலைகளை எடுத்து, காம்பிலிருந்து உருவி, ஒரு தாம்பூல தட்டில் போட்டு, நன்றாக உளர்த்திக் கொண்டு, அதை கற்பூர தீயில் போட்டு பஸ்பமாக்கி கொள்ளவேண்டும்.

- Advertisement -

அதை எரியவிட்ட உடன் அது கருப்பு நிறமாக மாறிவிடும் அல்லவா? அதை எல்லாம் ஒரு டப்பாவில் போட்டு சேகரித்து வைத்துக்கொண்டு, சிறிதளவு நெய் விட்டு மை போல் தயாரித்து வைத்துக் கொள்ளலாம். இதை நெற்றியில் தினந்தோறும் இட்டுக் கொண்டால் எந்த ஒரு தீவினையும் நம்மை அண்டாது என்று சொல்லுவார்கள்.

lemon

நீங்கள் முக்கியமான காரியத்திற்காக வெளியே செல்லும்போது, ஒரே ஒரு எலுமிச்சை பழத்தை மட்டும் உங்கள் வீட்டு பூஜையறையில் வைத்து, உங்கள் வீட்டு குல தெய்வத்தையும், அம்மனையும், மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். அதன் பின்பு ஒரு வெற்றிலை எடுத்துக்கொள்ளுங்கள். அந்த வெற்றிலையில், உங்கள் வீட்டில் இருக்கும், அந்த வேப்பிலை மையை எடுத்து ஒரு சொட்டு தடவிக் கொள்ளுங்கள்.

அதன் பின்பு வெற்றிலையின் மேல், இந்த எலுமிச்சம்பழத்தை வைத்து, மடித்து ஒரு பேப்பரில் வைத்தோ, ஒரு கவரில் வைத்தோ உங்கள் பையிலோ அல்லது பாக்கெட்டிலோ வைத்துக்கொள்ளலாம். இப்படி உங்கள் கையில் இந்த மூன்று பொருட்களையும் எடுத்துக்கொண்டு சென்றால், உங்களுக்கு தடைபட்டுக் கொண்டே இருக்கும் காரியமும் நிச்சயம் வெற்றியடையும். கட்டாயம் உங்களுடைய அதிர்ஷ்டம் உங்களுக்கு முன்னால் செல்லும் என்பதில் சந்தேகமே இல்லை.

vetrilai

ஆனால், இதில் எந்த மாய மந்திர வித்தைகளும் கிடையாது. எலுமிச்சம்பழத்திற்கு உண்டான சக்திவாய்ந்த மகத்துவம் அது. வேப்பிலைக்கு உண்டான அம்மன் அருள் மகத்துவம் அது. வெற்றிலைக்கு உண்டான வெற்றியை தரும் மகத்துவம் அது. இவை மூன்றும் ஒன்றாக சேர்ந்து உங்கள் குலதெய்வ சக்தியோடு இணையும் போது, உங்களுக்கு ஏற்படும் கெட்டதை தடுக்கக்கூடிய சக்தி இதற்கு உள்ளது என்பது மட்டும் உண்மை. மனதார நம்பிக்கை வைத்து, இந்த பரிகாரத்தை செய்து தான் பாருங்களேன்! பலன் அளித்தால் தொடர்ந்து நல்ல காரியத்திற்கு செல்லும் போது இப்படி செய்து கொள்ளலாம் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

இதையும் படிக்கலாமே
‘திதி’ கொடுக்கும் போது இதையும் செஞ்சா வாழ்க்கையில் எதிர்பாராத அதிசயங்கள் நிகழும் தெரிந்து கொள்ளுங்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Kariyam vetri pera Tamil. Vetri pera tips. Vetri pera valigal. Vetri pera valigal in Tamil.