இன்றைய ராசி பலன் – 15-10-2019

Rasi Palan

மேஷம்:

mesham
காலையில் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் அவசியம். தாயிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. மாலையில் நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும்.
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும்.

ரிஷபம்:

rishabam
தாய்வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உற்சாகமான சூழ்நிலையே காணப்படுகிறது. வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கக்கூடும். இன்று கடன் கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம். சிலருக்கு வெளியூர்ப் பயணம் செல்லக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சியான அனுபவங்கள் உண்டாகும்.

மிதுனம்:

Midhunam
உங்களுடைய முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். காரியங்களில் தடை ஏற்பட்டாலும், முடிவு சாதகமாகவே இருக்கும். தந்தையுடன் இருந்து வந்த பிணக்குகள் தீருவதற்கான வாய்ப்பு ஏற்படக்கூடும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். பயணங்களையும் தவிர்க்கவும்.

- Advertisement -

கடகம்:

Kadagam
அலுவலகப் பணியின் காரணமாக வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சி தரும்.
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நல்லவர்களின் நட்பும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கக் கூடும்.

சிம்மம்:

simam
இன்று உற்சாகமான நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். தாய்வழி உறவுகளால் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். ஒரு சிலருக்கு குடும்பத்துடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களைத் தவிர்ப்பதுடன் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

கன்னி:


காரியங்களில் அனுகூலம் உண்டாகும். செலவுகள் அதிகரிக்கும் என்பதால் கடன் வாங்கவும் நேரிடும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நிகழக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததைவிட கூடுதலாக இருக்கும்.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.

துலாம்:


வாழ்க்கைத்துணையிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். புதிய காரியங்களில் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும். சிலருக்கு முக்கிய பிரமுகர்களின் தொடர்பும் அதனால் ஆதாயமும் கிடைக்கும்.
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும் வாய்ப்பு உண்டாகும்.

விருச்சிகம்:


பெரிய மனிதர்களின் அறிமுகமும், அவர்களால் அனுகூலமும் ஏற்படக்கூடும். சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும். ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பும் அமையும். குருவருளால் மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறும் வாய்ப்பு உண்டு.
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குருவினால் திடீர் அதிர்ஷ்ட யோகம் உண்டாகக் கூடும்.

தனுசு:


உற்சாகமான நாள். புதிய முயற்சிகள் எதுவும் இன்றைக்கு வேண்டாம். தெய்வப் பணிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பும் சிலருக்கு ஏற்படக்கூடும். தாயின் ஆதரவு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். சிலருக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

மகரம்:

magaram
தாய்வழி உறவினர்களின் வருகை குடும்பத்தில் மகிழ்ச்சி தரும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதால் உற்சாகமாக இருப்பீர்கள். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மகாலட்சுமி கடாட்சம் உண்டாகும்.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சியான அனுபவங் கள் ஏற்படக்கூடும்.

கும்பம்:


கணவன் – மனைவி இடையில் சிறுசிறு விவாதங்கள் ஏற்படக்கூடும். ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். முக்கிய பிரமுகர்களின் நட்பும், அவர்களால் ஆதாயமும் உண்டாகும். சிலருக்கு வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும்.
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையை அனுசரித்துச் செல்லவேண்டியது அவசியம்.

மீனம்:


முக்கிய பிரமுகர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சகோதரர்களால் வீண் செலவுகல் ஏற்படக்கூடும். சிலருக்கு திடீர்ப் பயணங்களை மேற்கொள்ளவேண்டி இருக்கும். குடும்பத்தில் உறவினர்களின் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். மாலையில் குடும்பத்துடன் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆடை, ஆபரண சேர்க்கைக்கும் வாய்ப்பு ஏற்படும்.