இப்படியும் கூட தக்காளி கொத்தமல்லி சட்னியை அரைக்கலாமா? இத்தனை நாட்களாக இது தெரியாமல் போச்சே.

- Advertisement -

கொத்தமல்லியை வைத்து விதவிதமாக சட்னி வகைகளை செய்யலாம். அதில் கொத்தமல்லியையும் தக்காளியையும் வைத்து ஒரு சட்னி எப்படி அரைப்பது என்பதைப் பற்றித்தான் நாம் தெரிந்துகொள்ளப் போகிறோம். காரசாரமான இந்த சட்னி, இட்லி தோசைக்குத் தொட்டுக்கொள்ள அட்டகாசமாக இருக்கும். குறிப்பாக இட்லிக்கு இந்த சட்னியை வைத்துக்கொண்டு இதன் மேலே நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் ஊற்றி சாப்பிட்டு பாருங்கள். இதன் சுவைக்கு சொல்ல வார்த்தையே இல்லை. சரி இந்த சட்னி ரெசிபியை நேரத்தைக் கடத்தாமல் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

thakalli-thokku2

முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் மீடியம் சைசில் இருக்கும் – 7 தக்காளி பழங்கள், மல்லித்தழை – 2 கைப்பிடி, வரமிளகாய் – 5, பச்சைமிளகாய் –  3, பெரிய நெல்லிக்காய் அளவு – புளி, பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன், வெல்லம் சிறிய துண்டு, தேவையான அளவு உப்பு, இந்த பொருட்களை எல்லாம் போட்டு விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் எதுவும் ஊற்றி அரைக்க வேண்டாம். தக்காளியில் விடும் தண்ணீரே போதுமானது.

- Advertisement -

தக்காளிப் பழங்களை மிக்ஸி ஜாரில் போட்டு போது நான்கு துண்டுகளாக வெட்டி சேர்த்துக் கொள்ள வேண்டும். மல்லி தழைகளை கொஞ்சம் சிறியதாக வெட்டி சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அரைத்த இந்த விழுது அப்படியே இருக்கட்டும்.

malli-chutney1

அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ளுங்கள். அந்த கடாயில் 4 டேபிள்ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் ஊற்றி அது நன்றாகக் காய்ந்ததும், 1 ஸ்பூன் கடுகு மட்டும் போட்டு தாளிக்க வேண்டும். கடுகு பொரிந்தவுடன் மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் விழுதை இந்த கடாயில் ஊற்றி கொள்ள வேண்டும்.

- Advertisement -

சட்னி நன்றாக கொதித்து வர வேண்டும். சட்னியில் ஊற்றி இருக்கும் எண்ணெய் பிரிந்து மேலே வரும். அதுவரை சட்னி மிதமான தீயில் கொதிக்க விடவும். இடையிடையே கரண்டியை வைத்து கலந்து கொண்டே இருங்க. (5லிருந்து 8 நிமிடங்கள் சட்னியை கொதிக்க வைத்தால் போதும்.) சட்னியின் பச்சை வாடை நீங்கும் வரை கொதிக்க வைத்து விட்டு இந்த சட்னியை அப்படியே இட்லிக்கு பரிமாறி பாருங்கள். இது ஒரு வித்தியாசமான சட்னி ரெசிபி. அதேசமயம் சுலபமாக செய்யக்கூடிய சட்னி ரெசிபியும் கூட. இந்த சட்னி கொஞ்சம் காரசாரமாக தான் இருக்க வேண்டும். அப்போது தான் சுவையாக இருக்கும்.

kothamalli-chutney

இந்த குறிப்பு உங்களுக்கு பிடிச்சிருந்தா உங்க வீட்ல மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க. ஒரு முறை செஞ்சு இந்த சட்னியை சுவைத்தால், திரும்பத்திரும்ப செஞ்சுக்கிட்டே தான் இருப்பீங்க.

- Advertisement -