நல்லா கமகமன்னு ஊரே மணக்குற அளவுக்கு தக்காளி ரசத்தை ஒரு முறை இப்படி வச்சு பாருங்க. ரசமெல்லாம் ஒரு குழம்பானு கேக்குறவங்க கூட இனி ரசம் மட்டும் இருந்தா போதும்னு சொல்லி குண்டா சோறு சாப்பிடுவாங்க.

takkali rasam
- Advertisement -

முன்பெல்லாம் வீட்டில் என்ன குழம்பு செய்தாலும் கொஞ்சமாக ரசம் செய்து விடுவார்கள். அந்த அளவிற்கு நம்முடைய உணவு வழக்கத்தில் தவிர்க்க முடியாத ஒரு குழம்பாக ரசம் இருந்தது இப்பொழுது உள்ள சூழ்நிலையில் அப்படியெல்லாம் யாராலும் செய்ய முடிவதில்லை. இன்று பல நேரங்களில் ரசம் மட்டுமே குழம்பாக பல வீடுகளில் உள்ளது. இதனால் ரசம் என்றாலே அலரும் படி ஆகிவிட்டது. இந்த சமையல் குறிப்பு பதிவில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ஒரு அருமையான தக்காளி ரசம் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

செய்முறை 

இந்த ரசம் வைக்க முதலில் சிறிய எலுமிச்சை பழ அளவு புளியை ஊற வைத்து கரைத்து தண்ணீரை வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் . அடுத்து நான்கு பழுத்த தக்காளி பழத்தை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி இந்த தக்காளியை அதில் சேர்த்து ஐந்து நிமிடம் வரை கொதிக்க விடுங்கள்.

- Advertisement -

இதற்குள்ளாக மிக்ஸி ஜாரில் ஒரு காய்ந்த மிளகாய், ஒரு பச்சை மிளகாய், கொஞ்சம் கருவேப்பிலை, ஒன்றரை டீஸ்பூன் மிளகு, ஒரு டீஸ்பூன் சீரகம் இவை எல்லாம் சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது நாம் வேக வைத்திருக்கும் தக்காளி நன்றாக வெந்து ஆறியிருக்கும் அதன் பிறகு தக்காளி மேலிருக்கும் தோலை மட்டும் எடுத்து விட்டு தக்காளி வேக வைத்த அந்த தண்ணீரிலே தக்காளியை நன்றாக மசித்து விட்டுக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பில் கடாய் வைத்து சூடானவுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். எண்ணெய் காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு, கால் டீஸ்பூன் வெந்தயம், ஒரு காய்ந்த மிளகாய், பத்து பல் பூண்டை நசுக்கி சேர்த்த பிறகு ஒரு கொத்து கருவேப்பிலை இவை அனைத்தும் சேர்த்து பொரிந்த பிறகு கொஞ்சமாக பெருங்காயம் சேர்த்த பிறகு கரைத்து வைத்த தக்காளி கரைசலை அதில் ஊற்றி விடுங்கள்.

- Advertisement -

அடுத்ததாக நாம் ஏற்கனவே கரைத்து வைத்திருக்கும் புளி கரைசலையும் ஊற்றிய பிறகு அரை ஸ்பூன் உப்பையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் மிளகு சீரகத்தையும் இதில் சேர்த்து கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் அனைத்தையும் சேர்த்த பிறகு இரண்டு கப் அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து விடுங்கள். கடைசியாக கால் டீஸ்பூன் வெல்லத்தை இதில் சேர்த்து ரசம் லேசாக நுரைத்து கொதிக்க வரும் தருவாயில் கைப்பிடி அளவு கொத்தமல்லியை பொடியாக அரிந்து அதில் தூவி அடுப்பு அணைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: அட பூண்டு சட்னியை இப்படி கூட அரைக்கலாமா? இந்த சட்னி ரெசிபி வித்தியாசமா இருக்கே! ஒருமுறை இந்த சட்னி அரைத்து விட்டால் மீண்டும் மீண்டும் இதே சட்னி தான் வேண்டும் என்று வீட்டில் இருப்பவர்கள் அடம்பிடிப்பாங்க.

நல்ல கம கமவென்று ஊரே தூக்கும் வாசத்துடன் தக்காளி ரசம் தயார். இப்படி ரசம் வைத்து விட்டால் போதும். இதற்கு சைட் டிஷ் கூட எதுவும் வேண்டாம் என்று சாப்பிட்டு விடுவார்கள். அந்த அளவிற்கு சுவையான அட்டகாசமாக இருக்கும் மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -