இந்தத் தண்ணீரில் உங்கள் பாதங்களை கழுவினால் போதும். எவ்வளவு பெரிய கண் திருஷ்டி, ஏவல், பில்லி, சூனியம், எதுவாக இருந்தாலும் உங்கள் உடலைவிட்டு பாதங்களின் வழியாக வெளியே சென்றுவிடும்.

ketta-sakthi
- Advertisement -

உங்களுடைய சந்தோஷமான வாழ்க்கையை பார்த்து லட்சம் பேர் கண் வைத்திருந்தாலும் சரி, அல்லது உங்களுடைய எதிரி, உங்களுக்கு எதிராக எதிர்மறை ஆற்றலை ஏவிவிட்டு இருந்தாலும் சரி, நீங்கள் வீதியில் செல்லும் போது ஏதாவது கழிப்பை தாண்டியதன் மூலம் உங்கள் உடலுக்குள், உங்களுக்கு தெரியாமலேயே கெட்ட சக்தி புகுந்து இருந்தாலும் சரி, வாழ்க்கையில் நிச்சயம் பிரச்சனை இருக்கத்தான் செய்யும். இப்படிப்பட்ட எதிர்மறை ஆற்றலின் தாகம் கொண்டவர்களுடைய முகம் திடீரென கருத்து போயிருக்கும். சுறுசுறுப்பு இல்லாமல் சோர்ந்து போய் இருப்பார்கள். திடீரென காய்ச்சல் வரும். திடீரென மயக்கம் போட்டு விடுவார்கள். திடீரென கோபப்படுவார்கள். திடீரென அழுவார்கள். அவர்களையே அறியாமல் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் குழப்பத்தில் நிறைய வேலைகளை செய்வார்கள்.

இப்படி இனம்புரியாத பிரச்சனை வாழ்க்கையில் வரும் போது, நமக்கே பயம் வந்துவிடும். யாரோ நமக்கு ஏதோ செய்து விட்டார்கள். நாம் ஏதோ ஒரு கெட்ட சக்தியிடம் சிக்கியிருக்கலாம், என்ற பயம் நமக்குள்ளே வந்துவிடும். ஆனால் இப்படிப்பட்ட பிரச்சனைகளைக் கண்டு இனி அனாவசியமாக யாரும் பயந்து அஞ்ச வேண்டாம். பயத்தை தூக்கி வெளியே வீசி எறியுங்கள். நம்மை யாராலும் எந்த கெட்ட சக்தியாலும் எதுவும் செய்ய முடியாது என்ற நம்பிக்கையை முதலில் கொண்டு வாருங்கள். அதற்கு பின்பு இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.

- Advertisement -

ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டில் வெதுவெதுப்பாக இருக்கும் சுடு தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். அதில் 2 வெற்றிலைகளை கிழித்து போட்டுக்கொள்ளுங்கள். இதோடு கொஞ்சமாக மஞ்சள்பொடி, ஒரு கைப்பிடி அளவு கல்லுப்பு, மருதாணி இலைகள், மருதாணி விதைகள் கொஞ்சமாக போட்டு, அந்த தண்ணீரை நன்றாக கலந்து விட்டு உங்களுடைய பாதங்களை இந்த தண்ணீரில் 10 நிமிடம் அப்படியே வைக்க வேண்டும்.

ஏதாவது உக்கிரமான ஒரு தெய்வத்தை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். காளி, அங்காளபரமேஸ்வரி, துர்க்கை அம்மன், நரசிம்மர், பிரத்தியங்கிரா தேவி, இப்படி எந்த உக்கிர தெய்வத்தை, உங்கள் இஷ்ட தெய்வத்தை மனதில் நினைத்துக் கொண்டாலும் சரி. அனுமனை கூட நினைத்துக் கொள்ளலாம் தவறு கிடையாது. உங்கள் கால் பாதங்கள் பத்து நிமிடம் போல அந்த தண்ணீரிலேயே இருக்கட்டும். உங்கள் உடம்பில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் எல்லாம் அந்த தண்ணீரில் கரைந்து போவதாக மனதார நினைக்க வேண்டும்.

- Advertisement -

நீங்கள் ஒரு சேரில் அமர்ந்துகொண்டு கூட, உங்கள் பாதங்களை பக்கெட்டுக்குள் இருக்கும் தண்ணீரில் வைத்துக் கொள்ளலாம். பாதங்கள் நன்றாக மூழ்கும் அளவிற்கு தண்ணீர் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 10 லிருந்து 15 நிமிடங்கள் கழித்து உங்கள் காலை அந்த தண்ணீரில் இருந்து எடுத்துவிட்டு, சுத்தமான தண்ணீரில் ஒரு முறை கால்களை கழுவி விடுங்கள்.

உங்கள் கால்களை வைத்தீர்கள் அல்லவா அந்த தண்ணீரை, உங்கள் கை படாமல் அதாவது பக்கெட்டோடு கொண்டுபோய் உங்கள் வீட்டின் வெளிப்பக்கத்தில் மண் பாங்கான இடத்தில் கொட்டி விடுங்கள். அவ்வளவு தான். இதை ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு மேல் செய்வது மிகவும் சிறப்பு.

வாரத்தில் ஒரு நாள் இப்படி செய்து வந்தால் நம்முடைய உடம்பில் எந்த ஒரு எதிர்மறை ஆற்றலும் தங்காது. கண் திருஷ்டியின் மூலம் உடல் உபாதைகள் ஏற்படாது. இறை வழிபாட்டிற்கு பயன்படுத்தும் வெற்றிலையை தண்ணீரில் போட்டு அதன் உள்ளே காலை வைக்கலாமா என்ற சந்தேகம் நிறைய பேருக்கு இருக்கும். ஆனால் பரிகாரத்திற்கு இப்படி செய்வதில் எந்த ஒரு தவறும் கிடையாது. எந்த ஒரு மன பயமும் இல்லாமல், நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.
- Advertisement -