வெறும் 5 நிமிடத்தில் புதுவிதமாக தேங்காய் சட்னியை இப்படியும் அரைக்கலாமே! சட்டென்று செய்யக்கூடிய 2 வகை சட்னி ரெசிபியை மிஸ் பண்ணாதீங்க.

chutney
- Advertisement -

இட்லி தோசைக்கு விதவிதமாக எத்தனை சட்னிகள் அரைத்து சாப்பிட்டாலும் நமக்கு அது அலுப்புத் தட்டாது. அறுசுவை விருந்துகளில் உணவை தயாரிப்பதில் தமிழனுக்கு முதல் பெருமை. விருந்தோம்பலில் பெயர்போன தமிழர்களுக்கு விதவிதமான சாப்பாட்டை சமைத்து சாப்பிடுவதா கஷ்டம். சரி, இட்லி தோசைக்கு சிம்பிளா 2 சட்னி ரெசிபியை இப்போது இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

kothamalli-chutney2

முதல் சட்னி ரெசிபி. அடுப்பில் ஒரு கடாயை வைத்து விடுங்கள். அதில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் கடலைப் பருப்பு – 1 ஸ்பூன், உளுந்தம்பருப்பு – 1 ஸ்பூன், நெல்லிக்காய் அளவு – புளி, வரமிளகாய் – 5, பெருங்காயம் – 2 சிட்டிகை, சிறிய துண்டு இஞ்சி இந்த எல்லா பொருட்களையும் சேர்த்து பருப்புவகைகள் சிவக்கும் வரை வறுத்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

பருப்பை சரியாக சிவக்க வைக்காமல் இருந்தால், இந்த சட்னி கொழகொழப்பாக மாறிவிடும். பருப்பு சிவந்தவுடன் 1 கப் அளவு துருவிய தேங்காயை கடாயில் போட்டு, ஒரு நிமிடம் வரை வதக்கி தேவையான அளவு உப்பு சேர்த்து, மிக்ஸியில் போட்டு மைய அரைத்துக் கொள்ள வேண்டும். சட்னியை ஒரு அகலமான பாத்திரத்தில் மாற்றி இந்த சட்னியை கொஞ்சமாக தண்ணீரை ஊற்றி கரைத்து வைத்து விடுங்கள்.

சிறிய தாளிப்பு போடவேண்டும். சிறிய தாளிப்பு கரண்டியில் 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய், கடுகு, உளுந்து, வரமிளகாய், கருவேப்பிலை தாளித்து சட்னியில் கொட்டி கலந்து, இரண்டு நிமிடங்கள் சட்னியை அப்படியே மூடி வையுங்கள். அதன் பின்பு எடுத்துப் பரிமாறுங்கள் இரண்டு இட்லி, இரண்டு தோசை அதிகமாகத்தான் உள்ளே இறங்கும்.

- Advertisement -

சரிங்க, அதிகப்படியான தேங்காயை நாங்கள் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ள மாட்டோம். எங்களுக்கும் ஒரு சட்னி ரெசிபி கிடைக்குமா. உங்களுக்காக தேங்காய் சேர்க்காமல் மற்றொரு சட்னி ரெசிபி இதோ! அடுப்பில் ஒரு கடாயை வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். அந்த எண்ணை காய்ந்ததும் அதில் உளுந்தம்பருப்பு – 3 டேபிள்ஸ்பூன், வரமிளகாய் – 4, சிறிய துண்டு புளி, இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து சிவக்க வறுத்து மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளுங்கள்.

ulunthu

அதே கடாயில் மீண்டும் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு, அந்த எண்ணெய் காய்ந்ததும் தோல் உரித்த 15 லிருந்து 20 சின்ன வெங்காயம் சேர்த்து, பச்சை வாடை போகும் வரை வதக்கி, உளுத்தம் பருப்பு போட்டு வைத்திருக்கும் மிக்ஸி ஜாரில் வதக்கிய வெங்காயங்களையும் போட்டு, நன்றாக ஆற வைத்து விட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு விழுதுபோல் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். (சின்ன வெங்காயம் உங்கள் வீட்டில் இல்லை என்றால் பெரிய வெங்காயத்தையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்).

அரைத்த இந்தச் சட்னியை ஒரு சிறிய கிண்ணத்தில் மாற்றி கொள்ளுங்கள். இந்த சட்னிக்கும் ஒரு சிறிய தாளிப்பு போட வேண்டும். எப்போதும் போல நல்லெண்ணெயில், கடுகு, உளுந்து, வரமிளகாய், கருவேப்பிலை, சேர்த்து இந்த சட்னியையும் தாளித்து கொள்ளுங்கள். இந்த சட்னியை கட்டியாக கரைத்து வெள்ளை சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம். கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கரைத்து இட்லி தோசைக்கு சைட் டிஷ் ஆக தொட்டுக்கொள்ளலாம். தேங்காய் வேண்டாம் என்று சொல்பவர்களுக்கு இந்த சட்னி ரெசிபி. உங்களுக்கு எந்த சட்னி ரெசிபி பிடிச்சிருக்கு. நாளைக்கு உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -