சாப்பிடும் பொழுது ஏன் கைகளை கீழே ஊன்றக்கூடாது? உணவை எப்படி சாப்பிட வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறியதன் ரகசியம் இதோ.

vazhai ilai
- Advertisement -

நிதானமாக சாப்பிடுவதற்கு கூட நேரமில்லாமல் அவசர அவசரமாக ஓடிக்கொண்டிருக்கும் காலமிது. இக்காலகட்டத்தில் தான் உடல் பருமன், சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் மனிதர்களை ஆட்கொண்டடுள்ளன. ஆனால் இதுவே சற்று முன்னோக்கி சென்று பார்த்தோமானால் நமது முன்னோர்களுக்கு இது போன்ற நோய்கள் எவையும் வந்திருக்கவில்லை. இதற்கு காரணம் அவர்கள் பின்பற்றிய உணவு முறைகளே ஆகும். அவற்றைப் பற்றி தான் இப்பதிவில் தெரிந்து கொள்ளபோகின்றீர்கள்.

food

எதை சாப்பிட வேண்டும், எப்படி சாப்பிட வேண்டும், எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும், எங்கு அமர்ந்து சாப்பிட வேண்டும் என்றும், அவற்றினால் கிடைக்கும் பயன்கள் என்னென்ன என்பதனை பற்றிய தகவல்களையும் நமது முன்னோர்கள் இலக்கிய நூல்களில் குறிப்பிட்டு வைத்துள்ளனர். இப்பொழுதெல்லாம் உடல் பருமனைக் குறைப்பதற்கு குறிப்பிட்ட கலோரி அளவுள்ள உணவுகளை அறிவியல் வல்லுனர்கள் கட்டமைத்துள்ளனர். ஆனால் அன்றே நம் முன்னோர்கள் கடைப்பிடித்த உணவு முறை இவற்றிற்கு நிகராகவே இருந்துள்ளது.

- Advertisement -

தரையில் அமர்ந்து சாப்பிடுவது என்பது தொன்று தொட்டு வரும் ஒரு வழக்கமாகும். இவ்வாறு சம்மணம் போட்டு தரையில் அமர்ந்து சாப்பிடும் பொழுது, நமது உடல் தானாகவே செரிமானத்திற்கு தயாராகிவிடுகிறது. இப்படி அமர்வதால் இயல்பாகவே சுகாசனா என்ற ஆசன நிலைக்கு வந்துவிடுகின்றோம். தரையில் அமர்ந்து சாப்பிடும் பொழுது குணிந்து, நிமிர்ந்து சாப்பிடுவதால் வயிற்றில் அமிலங்கள் சுரந்து, செரிமானத்திற்கு துணை புரிகிறது. தரையில் அமர்ந்து சாப்பிடும் பொழுது வயிற்று தசைகள் சுருங்கி, விரிவதால் வயிற்றுக்கு போதுமான அளவு உணவை மட்டுமே உண்ண முடிகிறது. இதன் மூலம் அளவுக்கு மீறிய உணவுகள் உண்பதால் வரும் உடல் பருமன் பிரச்சனை ஏற்படுவதில்லை.

food

வீட்டில் உள்ள பெரியவர்கள் குழந்தைகளிடம், சாப்பிடும்போது கையை தரையில் ஊணி சாப்பிடக் கூடாது என்று சொல்லிக் கொடுப்பார்கள். இதன் காரணம் என்னவென்றால் தரையில் அமர்ந்து சாப்பிடும் பொழுது இடுப்பிற்கு கீழே இரத்த ஓட்டம் குறைந்து, வயிற்றுப் பகுதியில் இரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். இதனால் ஜீரண தன்மையும் அதிகரிக்கும். ஆனால் கைகள் தரையில் ஊணி இருக்கும்பொழுது புவியீர்ப்பு விசையின் காரணமாக, வயிற்றை விட கைகளில்தான் அதிக இரத்த ஓட்டம் இருக்கும். இதனால் ஜீரணமாவதில் தாமதம் ஏற்படும். இன்றைய காலகட்டத்தில் டைனிங் டேபிளில் அமர்ந்து கொண்டோ, அல்லது நின்றுகொண்டோ சாப்பிடும் பழக்கம் அதிகமாக உள்ளது. இவ்வாறு சாப்பிடுவதால் கால்களில் மட்டுமே இரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். எனவே செரிமானத் தன்மையும் குறைந்தே இருக்கும்.

- Advertisement -

food

பொதுவாக வீட்டில் உள்ள பெரியவர்கள், உணவு உள்ளங்கையில் ஒட்டாமல் சாப்பிட வேண்டும் என்று சொல்வதுண்டு. உள்ளங்கையில் உணவு ஓட்டினால் உறவுக்குள் பிரச்சனை வரும் என்று தமாஷாக சொல்வதுண்டு. இதற்கான உண்மை காரணம் என்னவென்றால் உள்ளங்கையில் ஒட்டும் அளவிற்கு சாப்பிடுபவர்கள் வேட்கை மிகுதியால் அதிகம் சாப்பிட்டு விடுவார்கள். எனவே இதனை தவிர்க்கவே இவ்வாறான காரணத்தை சொல்லி வைத்துள்ளார்கள்.

நமது முன்னோர்கள் பின் பற்றிய ஒவ்வொரு செயலிலும் பலவித நன்மைகள் இருந்துள்ளன. இவற்றை தெரிந்து கொண்டு இனிவரும் காலங்களிலாவது அதை முறையாக கடைபிடித்து வந்தோம் என்றால் அவை உடல் ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருக்கும்.

- Advertisement -