அட! உங்க வீட்டு உப்பு ஜாடியை வெறும் தரையிலேயா வச்சிருக்கீங்க! கட்டுக்கட்டாக பணம் சேராமல் போக இதுதாங்க காரணம்.

uppu

நம்முடைய வீட்டில் கட்டுகட்டாக பணம் சேரவில்லை என்றாலும், அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்காவது பணவரவு வருவதும் போவதுமாக இருக்க வேண்டும். கல் உப்பில் லட்சுமி வாசம் செய்கின்றாள் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயமே. இந்த கல் உப்பை எந்த இடங்களில், எப்படி வைத்தால் வீட்டில் பணவிரயம் ஏற்படாமல் இருக்கும், வீட்டில் தேவைக்கு ஏற்ப பண வரவு வந்து கொண்டே இருக்கும் என்பதைப் பற்றின சின்னச்சின்ன பரிகாரங்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

uppu

இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் உங்கள் வீட்டு பீரோவில் கட்டுக்கட்டாக பணத்தை அடுக்கி வைப்பதற்கு இடம் இல்லாத அளவிற்கு பணமழை கொட்டுமோ இல்லையோ, செலவுக்கு பணம் தேவை என்றால், பீரோவை திறந்து பார்த்தால் அதில் உங்களுக்கு தேவையான பணம் கட்டாயம் இருக்கும். அந்த அளவிற்கு இந்த பரிகாரம் உங்களுக்கு கை கொடுக்கும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது.

உங்கள் வீட்டு சமையலறையில் உப்பு ஜாடிக்கு அடியில் எப்போதும் ஒரு ரூபாய் நாணயத்தை வையுங்கள். இதற்கு என்ன அர்த்தம்? எப்போதுமே மகாலட்சுமியை பணம் என்னும் சிம்மாசனத்தில் அமர வைத்திருப்பதாக அர்த்தமாகும். இதனால் வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். முடிந்த வரை ஒரு சிறிய தட்டின் மேல், 1 ரூபாய் நாணயத்தை வைத்து, அந்த ஒரு ரூபாய் நாணயத்தின் மீது உப்பு ஜாடிகளை அடுக்கி வைப்பது வீட்டிற்கு மேலும் மேலும் பணவரவை கொடுத்துக் கொண்டே இருக்கும்.

money2

இதோடு சேர்த்து பீரோவில் பணம் வைக்கும் இடத்தில் சிறிது கல் உப்பை, வெள்ளைத்துணியில் போட்டு, அந்த கல் உப்பில் ஒரு ஏலக்காய், ஒரு கிராம்பு இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து, முடிச்சுப் போட்டு அந்த கல்லுப்பைக் உங்கள் பணத்தின் மேலே வைக்கலாம். அந்தப் பணம் உங்களை விட்டு எங்குமே போகாது. பணம் வீண் விரையம் ஆகாது. இந்த சிறிய கல் உப்பு முடிச்சு உங்களுக்கு பெரிய அளவிலான பணவரவை கொடுத்துக் கொண்டே இருக்கும். பணம் வைக்கும் பெட்டியில், பணத்தை கீழே வைத்துவிட்டு, அதன் மேலேதான் இந்த முடித்து வைக்க வேண்டும். இந்த முடிச்சுக்கு மேலே பணத்தை வைக்கக் கூடாது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்தபடியாக உங்களுடைய வீட்டில் வெள்ளி கிண்ணம், வெள்ளி டம்ளர், வெள்ளி ஸ்பூன் இதில் ஏதாவது ஒன்று இருந்தால் கூட அதை சமையலறையில் புழக்கத்தில் வையுங்கள். வெள்ளி பொருட்கள் வீட்டில் இல்லை என்றாலும் பரவாயில்லை, சிறுக சிறுக பணம் சேர்த்து ஏதாவது ஒரு வெள்ளி பொருளை வாங்குவது வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும். சமையலறையில் ஏதாவது ஒரு வெள்ளிப் பாத்திரத்தை புழக்கத்தில் வைத்தாலும், அந்த வீட்டில் பண கஷ்டம் வருவதற்கு வாய்ப்பு இல்லை. அப்படியே வந்தாலும் அந்த பண கஷ்டம் பெரிய அளவில் இழப்புகளை ஏற்படுத்தாது.

ஆனால், உங்கள் வீட்டு சமையலறையில் புழங்கும் வெள்ளி பாத்திரங்களை உங்கள் வீட்டில் இருப்பவர்கள் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். உங்கள் வீட்டு உறுப்பினர்கள் தான் அதை சுத்தம் செய்து வைக்க வேண்டுமே தவிர, வீட்டில் வரும் விருந்தாளிகள் அந்த வெள்ளி பாத்திரத்தில் உணவருந்த எதுவும் கொடுக்கக் கூடாது. வேலையாட்கள் உங்களுடைய வீட்டில் இருந்தால், அவர்களது கையால் அந்த வெள்ளி பாத்திரங்களை தேய்த்து வைக்கக் கூடாது என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம்.

செல்வ செழிப்புக்கெல்லாம் அதிபதியானவள் தான் மகாலட்சுமி, அந்த மகாலட்சுமி பிறந்த இடத்தில் இருந்து எடுத்த கல் உப்பை, ஒரு ரூபாய் நாணயத்தின் மீது அமர வைப்பதன் மூலம், நம் வீட்டில் அந்த மகாலட்சுமி நிரந்தரமாக அமர்ந்து விடுவாள் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகமே கிடையாது. தங்கத்தை விட பல மடங்கு லட்சுமி கடாட்சம் உள்ள ஒரு பொருள் வெள்ளி. அதை நீங்கள் உங்களுடைய சமையலறையில் பயன்படுத்துவதன் மூலம், அதிர்ஷ்டம் அடித்துக் கொண்டு ஓடி வரும் என்பதிலும் சந்தேகம் கிடையாது. இந்த இரண்டு சின்ன சின்ன குறிப்புகளை முடிந்தவரை உங்களுடைய வீட்டில் முயற்சி செய்து பாருங்கள். நல்ல மாற்றம் கிடைத்தால் லாபம் பெற நிறையவே உள்ளது. நஷ்டம் அடைவதற்கு ஒன்றுமே இல்லை என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.