பருப்பு உரப்படை எப்படி செய்வது என்று உங்களுக்கு தெரியுமா? ஒருமுறை அடையை இப்படி செஞ்சு பாருங்க. அடை சுடும்போது இதிலிருந்து வரும் வாசம், வீட்டில் இருப்பவர்களை அப்படியே இழுத்துக் கொண்டு வந்து டைனிங் டேபிளில் உட்கார வைக்கும்.

adai
- Advertisement -

அடை தோசை. பெரும்பாலும் இது எல்லோருக்கும் பிடிக்காது‌. ஆனால், உங்களுடைய வீட்டில் இப்படி ஒரு முறை அடை தோசை வார்த்து பாருங்கள். இதை எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள். பருப்பு வகைகள் சேர்த்து செய்வதால், இந்த அடையில் சுவையோடு சேர்த்த ஆரோக்கியமும் இருக்குது. எல்லோர் வீட்டிலும் தான் அடை செய்வோம். இந்த அடையில் அப்படி என்ன ஸ்பெஷல் ஆக இருக்கப் போகுது. ரெசிபியை படிச்சு பாருங்க. பிறகு ட்ரை பண்ணி பாருங்க. பிறகு சாப்பிட்டு பாருங்க. பிறகு என்ன ஸ்பெஷல் என்று நீங்களே புரிந்து கொள்வீர்கள். வாங்க இப்ப நேரத்தை கடத்தாமல் இந்த உரப்படை ரெசிபிக்குள் செல்வோம்.

செய்முறை

ஒரு அகலமான பாத்திரம் எடுத்துக் கொள்ளுங்கள். எல்லா பொருட்களையும் அளப்பதற்கு ஒரு டம்ளர் தேவை. கடலைப்பருப்பு – 1 டம்ளர், பாசிப்பருப்பு – 1 டம்ளர், உளுந்தம் பருப்பு – 1 டம்ளர், துவரம் பருப்பு – 1 டம்ளர், சாப்பாட்டு புழுங்கல் அரிசி – 1 டம்ளர், இந்த ஐந்து பொருட்களையும் மொத்தமாக போட்டு தண்ணீர் ஊற்றி 3 முறை நன்றாக அலசி கழுவி விடுங்கள். பிறகு இதில் வர மிளகாய் 10(காரத்திற்கு ஏற்ப), சோம்பு 2 ஸ்பூன் போட்டு, நல்ல தண்ணீரை ஊற்றி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.

- Advertisement -

இரண்டு மணி நேரம் இந்த பொருட்கள் எல்லாம் ஊறிய பின்பு, இதை மிக்ஸி ஜாரில் போட்டு, கொரகொரப்பாக கொஞ்சம் திக்காக அரைத்து எடுத்துக் கொள்ளவும். (ஊறவைத்த அந்த தண்ணீரை ஊற்றியே மாவு அரைக்கலாம்.) இது தோசை மாவு போல தண்ணீராக அரைக்க கூடாது. அரைத்த மாவை எல்லாம் அகலமான ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும்.

அரைத்து வைத்திருக்கும் இந்த மாவுடன் சீரகம் – 1 ஸ்பூன், சோம்பு – 1/2 ஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை – 1/2 கைப்பிடி அளவு, பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2 கைப்பிடி அளவு, கருவேப்பிலை – 2 கொத்து, உப்பு – தேவையான அளவு, பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன், போட்டு இந்த மாவை நன்றாக கலந்து கொள்ளுங்கள். தேவைப்பட்டால் இதில் தேங்காய் துருவல் சேர்க்கலாம். முருங்கைக் கீரை சேர்க்கலாம். அது நம்முடைய சுவைக்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளலாம்.

- Advertisement -

எல்லா பொருட்களையும் ஒன்றாக கலந்த பின்பு சூப்பரான அடை மாவு நம்மிடம் தயாராக உள்ளது. அடுப்பில் ஒரு தோசை கல்லை வைத்து அதில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி தயாராக இருக்கும் இந்த அடை மாவை அந்த தோசை கல்லில் வார்த்து கரண்டியால் அடை மாவை, வட்ட வடவில் தள்ளி விட வேண்டும். அடை மாவை ஊற்றி மெல்லிசாக தீட்ட முடியாது தோசை போல. அடை மாவு கட்டியாக இருக்கும்.

அடை மாவை அழகாக வட்ட வட்டமாக பரப்பி விட்டு, மேலே நல்லெண்ணெய் ஊற்றி சிவக்க விட்டு மீண்டும் திருப்பி போட்டு, பொன்னிறமாக சிவக்க விட்டு எடுத்தால் சூப்பரான அடை தயார். இதை மிதமான தீயில் வேகவைத்து எடுக்க வேண்டும். பருப்பு வகைகள் எல்லாம் நன்றாக வெந்தால் தான் மொறுமொறுப்பாக நமக்கு கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: சாம்பார் வச்சா இப்படித் தான் வைக்கணும்னு எல்லாரும் பாராட்டுற மாதிரி மணக்க மணக்க சூப்பரா சாம்பார் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாமா?

சுட சுட இந்த அடைக்கு தேங்காய் சட்னி தொட்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும். மிஸ் பண்ணாதீங்க. ட்ரை பண்ணி பாருங்க. நிறைவான சாப்பாடு இது. காலை உணவாகவும் இதை எடுக்கலாம். இரவு உணவாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -